(Reading time: 16 - 32 minutes)

ரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாம்…

பழமொழி ஒன்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்…

ஆம்… மனதை மாற்ற வசிய மருந்து மட்டும் அல்லாது, இப்படி சிலரின் துர் தூபங்கள் இருந்தாலும் போதும்… மனதைக் கெடுத்து அதை கொடியதாய் மாற்ற…

யார் என்ன செய்தாலும், சொன்னாலும், தன்னிடத்திலும் தன்னை சார்ந்திருந்தப்பவர்களிடத்திலும் ஒருவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பின் மாற்றம் எளிதல்ல தான்… எனினும், காயம்பட்ட நெஞ்சில், பாராங்கல்லை கொண்டு அடிக்க அடிக்க, கிடைக்கும் பெரும் வலி, அந்த நம்பிக்கையை சற்றே உடைத்தும் பார்த்திடும்…

அதற்கு திலீப் மட்டும் விதி விலக்கா என்ன?... அனைவருமே மனிதர்கள் தானே… ஊனும், குருதியும், நரம்போடு பின்னி பிணைந்த மனிதனுக்கு ஏனோ இருதயம் கல்லால் படைக்கப்பட்டவை அல்லவே…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

காதல் கொண்ட மனைவியிடம் முதலில் தாபம் கொண்டவன், பின் கோபம் கொள்ள ஆரம்பித்தான்… அது அடுத்தடுத்து, ஆத்திரத்திலும், வக்கிரத்திலும் வந்து முடிய, சரயூ திணறினாள்…

திலீப்பின் மாற்றம், அவளுக்கு அர்னவிடம் பேச கூட பயம் கொடுத்தது… எங்கே இவன் முகம் தூக்கிடுவானோ என்றெண்ணியே அர்னவிடம் அளந்து பேச ஆரம்பித்தாள் திலீப் இருக்கும் தருணங்களில்…

தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற எண்ணம் அவனுக்கு அதிகரிக்க அதிகரிக்க, அதன் தாக்கத்தின் விளைவாய், நாளாக நாளாக அவள் மற்றவர்களிடம் பேசுவதையே குறைத்துக்கொண்டாள் வெகுவாக… அந்த அளவு திலீப்பின் நடவடிக்கை அவளை மாற வைத்திருந்தது வெகுவாய்…

அந்த மாற்றங்கள் அவளை மனதளவில் சற்றே வலுவானதாகவும், பலவீனமாகவும் மாற்றிட, அவளின் மனம் சில விஷயங்களில் ஏனோ முரண்பட்டு நின்றது தெளிவாய்…

அவன் அணுதினமும் படும் அவமானங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர, கொஞ்சமும் குறையவில்லை… அதன் தாக்கமோ என்னவோ, அவன் அவளிடம் ஒரு குழந்தையை வேண்டி நின்றான் பிட்சையாக…

“ப்ளீஸ் சரயூ… எனக்கு இந்த ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணு….”

வாய்விட்டு அவன் கெஞ்சிய வேளை, அவளுக்கு உயிரே போய்விடும் போல தான் இருந்தது…

தன் கணவனை இப்படி கலங்கி, கெஞ்சி, கையேந்த வைக்க நேர்ந்த கொடுமையை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை கொஞ்சமும்…

எனினும், அவளுள் உண்டான மாற்றம், அவன் கோரிக்கைக்கு செவி சாய்க்காது பின்வாங்க, அவன் கோபம் அதிகமானது… ஆயிரம் கோப தாபங்கள் இருந்தாலும் அவளை அவன் வெறுத்ததில்லை… விசாலத்தின் வாய்வார்த்தைகளும் செய்கைகளும், அவளிடத்தில் அவன் சற்று கடுமையாக நடந்து கொள்ள வைப்பதென்னவோ உண்மைதான்… ஆனாலும் அவனுக்கு அவளின் மேல் இருந்த காதல் உள்ளுக்குள் வற்றாமல் இருந்து கொண்டே தான் இருந்தது…

அந்த காதலினாலேயே அவன் தன் தவறை உணர்ந்தும் கொண்டான் இப்போது… எனினும் சரயூவை வீட்டை விட்டு வெளியேற்றியது தான் அவன் செய்த தவறுகளில் மன்னிக்க முடியாத தவறு…

அதிக பட்ச வலி மனதினில் உண்டாகும் போது, அது கட்டுப்படுத்திட முடியாத ஆத்திரமாகவும், கோபமாகவும் வெடிக்கும்…

அந்த நேரத்தில் மனம், தன்னாலே ஆழ்ந்து போக நேரிட, எண்ணமானது ஒருநிலையில் இல்லாது ஓடும்…

முழு விரக்தி மனதை வியாபிக்கையில், மனிதன் செயலற்றுப்போகிறான் அந்த குறிப்பிட்ட ஓர் நொடியில்…

அந்த நொடி, அவன் செய்வது, அனைத்துமே அவனையும் மீறி, தன்னிலையினையும் இழக்க வைத்து, அவனை ஆட்டிப்படைத்திடும்…

நிதானத்தில் தவறு என்றுமே நேரிடாது… ஆனால், ஒருவன் தன்னிலையை பறிகொடுத்தால்?... விளைவு இன்னலே அன்றி வேறேதும் இல்லை நிச்சயம்…

வாழ்வில் ஒரு மனிதன் எண்ணி எண்ணி கலங்கும் ஒரு நொடியும் உண்டு….. ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு நொடி தன்னிலையை இழக்க வைக்கும்…

அந்த நொடி நான் கொஞ்சம் யோசித்திருக்கலாமே?... என்றெண்ணாத மனிதன் உலகிலேயே இல்லை…

ஒரு நொடி செய்த பிழையால் இன்று நான் துன்பப்படுகிறேனே.. என ஏங்கிடாத மனித உள்ளங்களே இல்லை….

அதற்கு திலீப் மட்டும் பாரபட்சம் ஆகிடுவானா என்ன?... அவனும் தன்னிலையை இழந்தான்… செய்யக்கூடாத காரியத்தை செய்தும் முடித்தான்…

ஆம்… குரங்கு போன்ற மனித மனம்… ஒருநிலையில் இல்லாமல் தாவிக்கொண்டே இருக்கும்… தவறு செய்த மனம் திரும்ப வந்து அந்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டிடும் வெட்கமே இல்லாமல்…

எனினும் செய்த தவறுக்கு மனம் திருந்தி பிராயசித்தம் கேட்போரும் உலகில் வெகு குறைவே…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.