(Reading time: 16 - 32 minutes)

வன் மனதளவில் அடிவாங்கியதை அவளிடத்தில் சொல்லி முடித்திட, அவள் கண்கள் கலங்கி நீர் நிரம்பி நின்றது…

“மன்னிச்சிடுன்னு கேட்க கூட தகுதி இல்லன்னு தெரியும்… ஆனாலும், என்னை மன்னிச்சிடு…”

கைகூப்பி வேண்டி நிற்பவனைப் பார்க்கையில் அடிமனதை யாரோ பிசைவது போலே இருந்தது சரயூவிற்கு…

அவள் பதில் பேசாது சிலையாய் இருக்க, கட்டிலில் அமர்ந்தான் திலீப் தொப்பென்று…

இரு கைகளையும் கோர்த்து நெற்றியில் வைத்து அவன் கலங்கியபடி அமர, சட்டென அவனை பிள்ளை போல் அள்ளி தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக்கொண்டாள் சரயூ…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

மனைவியின் இடையை இறுக்கமாக பற்றிக்கொண்டவன், நீண்ட நேரம் அழுதான்…

அவள் அவன் சிகை கோதியவாறு, அவனின் முதுகை நீவி விட, அவன் அழுகை அடங்க வெகு நேரமாயிற்று…

“சரயூ?.....”

விழி எங்கும் சிவந்து, அவன் அவளைப் பார்க்க, அவள் அவன் விழிநீரை தன் முந்தானையால் துடைத்துவிட்டு விட்டு,

“அழாதீங்க திலீப்…” என்றாள் மெல்ல…

மனைவியின் கைப்பிடித்தவன், 

“என் மேல கோபம் போயிடுச்சா?.. சரயூ?...” எனக் கேட்க, அவள் பதில் பேசவில்லை…

“சொல்லுடி… என்னை மன்னிச்சிட்டியா?...”

“……………….”

“சொல்லு சரயூ?...”

“என்னால இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியலங்க… நீங்க என் கணவன்… அது மட்டும் தான் இப்போ என் கண் முன்னாடி தெரிஞ்சது… உங்க கஷ்டத்தை நீங்க சொல்லுறப்போ, என்னால தூர நின்னு வேடிக்கைப் பார்க்க என்னால முடியலை…”

“அப்போ நீ என்னை மன்னிக்கலையா சரயூ?... என்னை மன்னிக்க முடியலையா?...”

ஏக்கத்துடன் அவன் கேட்க, அவனை விட்டு சற்றே விலகியவள்,

“சில கேள்விக்கு சில நேரங்களில் பதில் சொல்ல முடியாதுங்க… இப்ப என் நிலைமையும் அப்படித்தான் இருக்கு… தப்பு செய்த எல்லாரும் மன்னிப்பு கேட்குறது இல்ல… அதே நேரத்துல மன்னிப்பும் ஏத்துக்கக்கூடியதா இருக்கும்போது யாரும் மறுக்குறதும் இல்ல…”

“எனக்கு புரியுது சரயூ… உன் மனசு...” என அவன் சொல்லி முடிக்கும்போது, அவள் அவனைப் பார்க்க,

“சரி சரயூ… நீ போய் ரெஸ்ட் எடு… நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்…”

அவன் சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க, அவள் தலை சரி என்று அசைந்த்து…

அந்த சிறு திருப்தியுடனே அவன் அறையை விட்டு வெளியேற, அவன் செல்லும் திசையையே, அவள் தன் கன்னங்களில் வழியும் நீருடன் பார்த்திருந்தாள்…

கணவனின் மாற்றத்தை மனதினுள் எழுந்த சிறு சந்தோஷத்தோடு அவள் நினைத்துக்கொள்ள, மறுபுறமோ, அவனின் தவறு நினைவுக்கு வந்து போனது அவளையும் அறியாமல்…

ஆம்.. செய்தது தவறு தான்… என்னை மன்னித்துவிடு… என்று வந்து கேட்கும்போது, எவ்வாறு மன்னித்திட முடியும் என உள்ளம் கதறினாலும், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்காவது மனம் என்று ஒன்று வந்ததே… என எண்ணுவதே மனிதனின் சராசரி குணம்…

அதே நேரத்தில், மன்னிக்க கூடிய தவறையா நீ செய்தாய்?... என வலியில் துடித்திடவும் செய்யும் அதே மனம்….

அதுவும் சரிதானே…. மன்னிப்பு என்ற ஒன்றை கேட்டிட்டால், செய்த தவறு இல்லை என்று ஆகிவிடுமா?... நடக்கக்கூடிய காரியமா அது?... சாத்தியமாகிடுமா என்ன?...

இல்லை அதனால் பட்ட காயங்கள் தான் மாயமாகிடுமா?...

மன்னிப்பு என்ற ஒன்று இருக்கப்போய் தானே செய்த தவறுகள் மன்னிக்கப்படுகிறது அன்றி மறைக்கப்படுகிறது….

ஆம்… மன்னிப்பு என்ற வார்த்தை இருக்கும் வரை, தவறுகளும் இருந்து கொண்டே இருக்கும்… இது உலக நியதி…

மன்னிப்பும் தவறும் இரட்டைப் பிறவிகள் தான் கிட்டத்தட்ட…

ஒன்று இன்றி இன்னொன்று இருக்காது பெரும்பாலும்…

சில சந்தர்ப்பங்களில் தான், இரண்டும் ஒன்று சேராது… அது பெரும்பாலும் பிடிவாதம் ஓங்கி, முரண்பட்டு, தனது பிழையை உணராத தருணமே…

எனில், தவறு செய்துவிட்டு மன்னிப்பு என்ற ஓர் வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை, வெறும் உதட்டிலிருந்து கேட்டுவிட்டால் போதுமா?...

அனைத்துமே ஒரு நொடியில் மாறிடுமா?...

நிச்சயமாக இல்லை… செய்த ஒவ்வொரு தவறுக்கும் ஒரு மனப்போராட்டம் நித்தம் உண்டு… அதில் தன் தவறை உணர்ந்து, வருந்துபவனே, மன்னிப்பு என்ற வார்த்தைக்குண்டான மதிப்பை உணர்பவனாவான்…

அதே நேரத்தில், செய்த தவறுக்கு வருந்தாதவன், அதற்கான பிராயசித்தமும் தேடுவதும் இல்லை… மன்னிப்பையும், வேண்டுவதில்லை… ஏனெனில் அவன் தான் அவனின் மனப்போராட்டத்தில் வீழ்ந்து மாண்டு போய்விட்டானே…

ஆம்… உயிரில்லாத உடலும், அது கொண்ட நாக்கும், மன்னிப்பை எவ்வாறு உச்சரிக்கும்?...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.