(Reading time: 12 - 24 minutes)

"போங்க மாமா!"-முகத்தை மூடிக்கொண்டு ஓடிவிட்டாள் அவள்.நேற்றுவரை ஒரு குழந்தையாகவே அவளை பார்த்திருந்தான்.ஆனால்,இன்று மனம் கவர்ந்தவனை குறித்து கூறியதும் அவள் முகம் கொண்ட வெட்கம்,அவனுக்கு அவளை புதிதாக காட்டியது.அது அவன் மனதில் கீதாவினை குறித்த வினாவையும் எழுப்பி சென்றது.அவளின் விலகலினால் எழுந்த வினா அது!!

ஆதித்யாவை விட்டு ஒரு அடியும் கீதா விலகவில்லை.சிறுவயது முதல் மது மீதும்,சரணின் மீதும் அளவற்ற அன்பை வைத்திருந்தவள் அவள்.மதுவின் இழப்பிலிருந்து அவள் மீள்வதற்கே பல காலங்கள் ஆயின.கண் எதிரே இன்று பிதாமகரின் துடிப்பு அவளை அச்சம் கொள்ள வைத்தது!!மரணம் என்ற உணர்வு மனித வாழ்வில் என்றாவது ஓர் நாள் சம்பவிக்கும் சாதாரண நிகழ்வு தான்!ஆனால்,மனதிற்கு பிரியமானவர்கள் மரண வாயிலில் நுழைவதை மட்டும் மனம் சகித்துக் கொள்ள மறுக்கிறது.இறைவனானவன் எந்தக் கோட்பாட்டினை ஆதாரமாக்கி உயிரின் உணர்வுகளைப் படைத்தான் என்பது விசித்ரமே!!பிரிவை வாழ்வின் இறுதியாக்கியவன்,அதை சகிக்கும் உபாயத்தினை மனிதனுக்கு போதிக்க மறந்தான்.தனிமையை வாழ்வின் ஆதாரமாக்கியவன்,சில காலம் மட்டுமே தங்கும் உறவுகளை அவனியில் அவதரிக்க வைத்து,துயரக்கடலில் மூழ்க வைக்கிறான்.விசித்ரமான இறைவன்!!இதனால் தான் இதிகாசங்களும் அவனை பித்தன் என்கிறதா??இருக்கலாம்...ஞானத்தில் தம்மைவிட எண்ணிலடங்கா மடங்கு உயர்ந்தவரையும் இந்த அகிலம் அவ்வாறு தானே கூறும்!!

சரணின் மார்பில் கைவைத்தப்படி,நாற்காலியில் அமர்ந்து,மெத்தையின் ஒரு ஓரத்தில் சிரத்தை மட்டும் சமர்பித்துவிட்டு உறங்கிவிட்டிருந்தாள் கீதா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

காலையில் இருந்து ஆகாரம் எதையும் அவள் ஏற்கவில்லை...அவளது மனதில் ஒரு அச்சம்!!அந்த அச்சம் அவளை எப்பணியும் ஆற்றவிடாமல் தடுத்தது.

"இரு..!தாத்தாவை செக் பண்ணிட்டு வந்துடுறேன்!"-என்று யாரையோ சமாளித்துவிட்டு உள்ளே நுழைந்தாள் சிவா.அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

'இவள் என்ன செய்கிறாள்?'-என்றவன் சப்தமின்றி சரணின் அருகில் சென்றான்.எதிர் எதிர் திசையில் இருந்த துருவங்களாய் இருந்தனர் இருவரும்!!இரவு நேர மெல்லிய தென்றல் காற்று அவளது கேசத்தினை அழகாக கலைத்துவிட்டு சென்றது.அந்த வெண்ணிலவின் வெளிச்சம் சற்றே அவளது எழில் முகத்திற்கு மேலும் மெருக்கூட்டியது!!சில நொடிகள் சிலையாகிப் போனவன்,ஏதோ உணர்ந்து கவனத்தை திருப்பினான்.சரணின் இதயத்துடிப்பை பரிசோதிப்பது அவசியமாக,அதற்கு தடையாய் விளங்கும் பெண்ணின் மென்கரத்தை அகற்றும் உபாயம் அவனுக்கு புலப்படவில்லை.எப்போதும் உடன் சுற்றும் இளநங்கையும் அன்று இல்லை.எதிரில் உறங்குபவளின் துயில் கலைக்கவும் மனம் கொள்ளவில்லை.நேரம் கடந்தப்படி இருக்க,வேறு உபாயமின்றி அவன் செயல்பட வேண்டியது அவசியமானது.தனது கரத்தினால் சற்றே தயங்கியப்படி அவளது கரத்தினை தீண்டினான்.மிகவும் மென்மையான ஸ்பரிசம் அவளுடையது!!அவனது இதழில் குறுநகை மலர்ந்தது.அவள் கரத்தை விடவும் மனம் துணிவுக்கொள்ளவில்லை. கணநேரத்தில் பற்றிய அவனது உறுதியான கரத்தை உறக்கத்திலே இறுகப் பற்றிக் கொண்டாள் கீதா.சட்டென மனதில் ஒரு தடுமாற்றம்!!பிஞ்சு குழந்தை ஒன்று கரம் பற்றும் சமயம் ஏற்படும் மென்மையை உணர்ந்தான் சிவா.

"மாமா!"-என்ற குரலால் சட்டென அவனது கரத்தை அவளிடமிருந்து விடுவித்துக் கொண்டான்.உறக்கம் சற்றே கலைய,தன்னிரு கரங்களையும் சமர்ப்பித்திருந்த சிரத்திற்கு தலையணையாக்கி மீண்டும் நிம்மதியாக உறங்கிவிட்டாள் கீதா.ஒரு பெருத்த ஏமாற்றம் அவன் முகத்தில் தெளிவாய் தெரிந்தது.பெருமூச்சோடு வந்தப் பணியை செய்ய ஆரம்பித்தான் அவன்.

அவருக்கு இதயத்துடிப்பு சீராக இருந்தது.அப்படியெனில்,காலையில் வந்த வலி மன உளைச்சலால் இருக்கலாம்!!அது எவ்வகையான மன உளைச்சல் என்பது அவனுக்கு புதிரே!!இருப்பினும்,அவரது உயிருக்கு எத்தீங்கும் இல்லை என்பது உறுதி!!அந்த உளைச்சல் குறித்து மறுநாள் ஆதவ உதயத்தில் வினவலாம் என்பது அவனது எண்ணம்!!அடுத்ததாக அந்த அறையை அவன் தியாகிக்கும் சமயம்,சில நொடிகள் எதனாலோ அவன் தடுக்கப்பட்டான்.தடுத்தது யார்??அது அவளது குழந்தை முகம்!!உறக்கத்தில் முழுதாக ஆட்பட்ட காரணத்தினாலோ,என்னவோ, அவளது இதழில் மென்மையான நகை மலர்ந்தது.அவன் மிகுந்த பாக்கியசாலி!!ஆம்...!அவன் மனம் கூறியது நீ மிகுந்த பாக்கியசாலி!!

புன்னகைத்தப்படி அங்கிருந்து வெளியேறினான்.

"மாமா!"

"என்ன?"

"என்ன மாமா தனியா சிரிக்கிறீங்க?"

"அது..வந்து..!நான்...!"

"ஓ...இருக்கட்டும்!இருக்கட்டும்!"-ஒரு சிறிய கேலிப்புன்னகையை விடுத்தப்படி கூறினாள் ஆராத்யா.

"ஏ..!"

"ம்??"

"என்ன நக்கலா?"

"இப்போ தான் தெரியுதா?சரியான மரமண்டை!"

"அடி!"-அவன் விளையாட்டாக அவளை அடிப்பது போல் கை ஓங்க அவள் துள்ளிக் குதித்து ஓடிவிட்டாள்.தனிமையில் நின்றிருந்தவனின் முகத்தில் அவனறியாமல் புன்னகை எட்டிப்பார்க்க,அதனை மறைக்கும் பொருட்டு அங்கிருந்து விலகி சென்றான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.