ஹாலுக்குள் வரவும் அவளுக்கு நேர் எதிராய் போய் நின்றான் விவன்….
‘என்னவன்…எந்த காரணத்திற்காகவும் என்னை விட்டுக் கொடுக்காதவன்……அவன்ட்ட பேச என்ன தயக்கமாம்…’ தனக்குள் அவள் சொல்லிக் கொள்ள….அதில் ஒரு வழியாய் அவள் சுய அணை உடைந்து…..
தன்னவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் ரியா…
இவள் முகத்தையே பார்த்திருந்த அவன் கண்ணோடு கலந்த நொடி, ஒரு முறை திக்கிய இவள் பார்வை மீண்டுமாய் சமனபட முயன்று… முடியாமல் தரை தொடுகிறது….
அதில் சன்னமாய் அவள் முகம் சிவக்க….. இன்னுமாய் அவள் கனிய…. “அது…” என மீண்டுமொரு அது அவள் வாயில் எட்டிப் பார்க்கிறது…
இன்னுமா புரியாமல் இருகிறதாம் இவனுக்கு…?
இத்தனை சீக்கிரமாய் இப்படி ஒரு மாற்றத்தை அவன் எதிர்பார்க்கவில்லைதான்…. ஆனால் எதிர்பார்த்தானோ?
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
காரில் வந்து விழுந்த…..சாரிப்பா விலிருந்து வரும் அனைத்து ‘பா’க்களும்…. இவனிடத்தில் அவள் மனம் திறந்து பேச தொடங்கி இருக்கும் செயலும்…. ராகாவோடு சிணுங்க சிணுங்க தனியாய் போய் பேசிக் கொண்ட அவள் செயலும்….. அதன் பின் இவன் முன் அவள் நடந்து கொள்ளும் வகையும்……இதற்கான முன்னறிவிப்பு தானே…..
அதிர அதிர அவனுக்குள் துடித்து எழும்பும் காதலையும்….. அத்தனையும் உதறிவிட்டு…அவளை இழுத்து அனைத்துக்கொள்ளவும்…..ஹுர்ரேஏஏஏ என கத்தவும்…..மௌனமாய் மயிலிறகாய் அவளை மார்பருகில் சுருட்டிக் கொள்ளவும்……தோன்றும் பலத்த யுத்தங்களை பத்திரமாய் அடக்கி வைத்தவன்… அசையாமலே நின்றான்.
அடி உதடை அளவாய் கடித்துக் கொண்ட அவன் முகத்தில் லட்சம் டன் ரசனை…..மெல்லிய சிறு சிரிப்பு சிந்தாமல் சிதறகிறது அவன் மீதெங்கும்…..
பார்வையால் அவளை பருகியபடி “எது…?” என்றான் அவன்…
அவள் தடுமாற்றத்தைக் காணும் போது…. அவளை ரொம்பவும் இந்த நிலையில் தவிக்கவிட தயங்கும் ஒரு மனநிலை அவன் பின் புலத்தில் இருந்தாலும்…… தன்னவளின் இவனுக்கே உரிமையான பெண்மையும்….. அவளது இவன் மீதான காதலும் யுத்தமிட்டுக் கொள்ளும் இந்த அழகை இவ்வளவு போதும் என நிறுத்தவும் மனம் வரவில்லை இவனுக்கு….
அதோடு எத்தனை நாள் காத்திருப்பு…..அவளே சொல்லட்டும்….அவளாகவே சொல்லட்டும்…..அவள் வார்த்தைகளில் அதை கேட்டாக வேண்டும் இவன்….. அவளும் கூடத்தான்…
“அது நீங்க பொண்ணு கேட்டு வந்தீங்கல்ல….?” ஒரு வழியாய் காதல் சதிராட்டத்தில் வெட்கம் தாண்டி வேண்டியவை பேசவும் தொடங்கிவிட்டாள் ரியா.. இவனை நிமிர்ந்து இன்னும் பார்க்கவில்லை எனினும் அவள் பேச…
“ம்…வந்தேன்…??” என்றான் இவன்….இவனது ‘எது’, இந்த ‘வந்தேன்’ எல்லாம் அவனது வழக்கமான வகையில் இல்லாமல்…. அதில் எதுவெல்லாமோ எக்கசக்கமாய் இருக்க….
அல்ரெடி அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கும் அவளை அடி முடியாய் வருடி வேறு வதைக்கிறது அவை….
‘டேய் மந்திரவாதி……மேஜிக் பாண்டி…வாய மூடிட்டு இருந்தன்னா கூட நான் சொல்லிடுவேன் போலயே….இப்டி ஹெல்ப் பண்றேன்னு ஏன்டா….’ அவளுக்குள் புலம்பிக் கொண்டவள்….
“அப்போ…” என திரும்பவும் தொடங்கினாள்…. சரியாய் அதே நேரம்
“உன் இதய எல்லைகளில் இடமின்றி போகுமட்டும்
உன்னுள் எனை நிரப்புமட்டும்
எஞ்சிய நான் உன் இரவுகளில் பனியாய் பொழியும் மட்டும்
உன் இளங்காலை விடியல்களில் கதிராய் கசியும் மட்டும்
நீங்காதிரு
பிரிவென்ற ஒன்றை பேசாதிரு”
என ரியாவின் குரலில் கவிதை வாசித்தது விவனின் மொபைல்.
அன்று புக் ஃபேர் ஷாப்பிங் முடியவும்….இவளும் அவனும் அன்னைக்கு நைட் மொட்ட மாடி டின்னர்க்கு பின்..…பிடிச்ச புக்கை வாசித்து காண்பிக்க……அதில் ரியா வாசித்தது இது….எப்ப ரிக்கார்ட் செய்தான்னும் ரியாக்கு தெரியாது….எப்ப அது அவன் மொபைல் ரிங் டோன் ஆச்சுதுன்னும் இவளுக்கு தெரியாது…..
ஆனால் துள்ளி எழும்புகிறது தானே மனம்….இதற்கெல்லாம் என்ன அர்த்தமாம்…?
முழு கண்ணாலும் அவள் தன் மன நிலையை பரீட்சை பேப்பராக்கி அதை பார்வையால் அவனுக்கு பதில் எழுத கொடுக்கிறாள்……
விவனோ அந்த ரிங் டோன் ஒரு விஷயமே இல்லை என்பது போல்
“பொண்ணு கேட்டு வந்தப்போ..?” என முந்தைய கேள்வியிலேயே நின்றான்…
‘ஏய் ஜிலேபி கெண்ட…உன்ன பிடிச்சுறுக்குன்னு நீ சொன்னாதான் விடுவேன்’ அவன் மனதுக்குள் பிடிவாதம் பிடித்துக் கொண்டான்….