(Reading time: 31 - 62 minutes)

ரு வகையில் அதை ஆமோதித்த விவன் மறுவகையில் மறுத்தான்….

“ ம்… நீ சொல்ற காயம்….அதை வெளிப்படுத்ற விதம்….அதெல்லாம் நானும் அப்படியேதான் நம்புறேன்…… ஆனா அவ வளர வளர மாறிட்டான்னு இல்ல…..மஹி அவ லைஃப்ல வரவும் அவ மாறினதுதான் அதிகம்…. அதுவும் மஹிய இவ விரும்ப ஆரம்பிக்கவும் வந்ததுதான் இந்த சேஞ்சஸ்…..ரொம்பவும் செல்ஃப் அஷூர்ட்டா….  கன்டன்டா….. கான்ஃபிடென்டா…..எப்பவும் ஹேப்பியான்னு….அப்டி ஒரு மாற்றம்….. Love is a healing factor you know……” தன் தங்கையையா இல்லை அன்பையா…..இல்லை ரெண்டையுமோ…..அதன் நினைவின் ஆழத்துக்குள் மூழ்கியபடி பேசிக்கொண்டிருந்தவன்…

“ம்…அதான் ரியு…. நிமுவ பார்த்து பார்த்து….அவள போல நீயும் பேரெண்ட்ஸ் இல்லாம இன்னொரு வீட்ல வளந்தியா…. அது தெரிஞ்சதில் இருந்து எனக்கு உன் மேல ஒரு ஸ்பெஷல் கானர்….” என இவள் கேள்விக்கும் இந்த கண்மணி டாப்பிக்கிற்கும் உள்ள லிங்கிற்கு அவன் வர…..

ரியாவுக்குள் இருந்த உற்சாகம் எல்லாம் சட்டென வடிந்து எங்கோ பள்ளத்திற்குள் விழுகிறது அவள் மனம்…

‘ஆக குழந்தைக்காக இவன் இரக்கப்பட்டான்னு நினைச்சது இரண்டாவது உண்மை….முதல் உண்மை இவ ஆர்ஃபன்னு இரக்கப்பட்டுருக்கான்……’ என்ன முயன்றும் இவளால் முகம் கசங்காமல் காக்க முடியவில்லை…..இதில்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“அத காதல் கத்திரிக்கான்னு எதுவும் கன்னா பின்னானு யோசிச்சுராத ரியு….நிமுக்காவது பேச அழன்னு நான் இருந்தேன்….உனக்கு யார் இருக்கான்னு தோணும்……” என அவசர அவசரமாய் சொல்லி இவள் நினைத்ததுதான் சரி என அவன் சந்தேகமற உறுதிப் படுத்த வேறு செய்தான்…….

ரியா புரிந்தது விவன் இவளை பெண் கேட்க வந்த காலத்தைப் பத்தி பேசுகிறான் என….. விவனோ பேச தொடங்கியது அவனது குழந்தை பருவ பள்ளி நாட்களைப் பத்தி…. உன் மேல காதல் இல்லைன்னு அவன் சொல்கிறான் என இவள் புரிந்திருக்க…… உன்னை குழந்தை பருவத்திலிருந்தே எனக்கு பிடிக்கும் என தான் சொல்லி இருப்பதாக நினைத்திருந்தான் அவன்….

இன்னும் அவன் சொல்ல வந்தவைகளை சொல்லி இருந்தால்….கான்வர்சேஷன் கண்டின்யூ ஆகி இருந்தால் குழப்பம் தீர்ந்திருக்குமாய் இருக்கும்…..ஆனால்

அதே நேரம் வீட்டு வாசலில் கார் சத்தம்….

“அப்றமா பேசுவோம் ரியு…..ஆதிரன் சார் வந்துட்டாங்க போல….” என்றபடி இப்போது எழுந்து வாசல் நோக்கி போய்விட்டான் விவன்…. எப்படி உணர வேண்டும் என்றே புரியாத நிலையில் சிலையாய் அமர்ந்திருந்தாள் இவள்….

விவன் இவர்கள் இருந்த ஹால் வாசலை கூட அடைந்திருக்க மாட்டான் அதற்குள் அந்த ஆதிரனும் அவரோடு ஒரு வைட் அன்ட் வைட் ட்ரஸ்காரரும் உள்ளே வருகின்றனர்…. அவரை எங்கயோ பார்த்த நினைவு ரியாவுக்கு….

இதில் அந்த வைட்….சுத்தி சுத்தியும் மேலும் கீழுமாய் இவர்களது வீட்டு பிரமாண்டத்தைப் பார்த்தபடி வர……அவரைப் பார்க்கவுமே அவர் பாடி லாங்குவேஜ் அண்ட் முழியில் இருந்த எதோ ஒன்று ரியாவுக்கு பிடிக்கவில்லை….

விவன் முகத்திலும் அந்த ஆள் அங்கு வந்திருப்பது பிடித்தம் போல எந்த அறிகுறியும் இல்லை….

வீடை முழுங்கிவிடுவது போல் பார்த்த அந்த வைட் இப்போது ரியாவை விழுங்குவது போல பார்க்க….

விவன் முகத்தில் ஏறினான் சூரியன்….ரியா அவளை அறியாமல் எப்போதோ விவன் அருகில் போய் நின்றிருந்தாள்…

 “வாங்க…சார்….” என ஆதிரனை மட்டும் தற்போது  விவன் வரவேற்றான்….

அதற்குள் தடாலடியாக அந்த வைட் ரியாவின் காலில் சாஷ்டாங்கமாக விழ…..அவளோ… “ஐயோ…” என பதறியபடி துள்ளிப் போய் விவனுக்கு பின்னால் நகர்ந்தாள்…

எங்க அவ சோஃபால இடிச்சுபாளோ….கால் தவறி விழுந்துடுவாளோ என்றெல்லாம் அதற்குள் பதறிப் போன விவன்….பட்டென அவளை கை நீட்டி பிடித்து தனக்கு பின்னாலும் பத்திரமாய் நிறுத்திக் கொண்டவன்…

“யார் இந்த …..” என பல்லைக் கடித்தான்…..”இவனெல்லாம் இங்க ஏன் கூட்டிட்டு வர்றீங்க…..அதுவும் ஃபேமிலி லேடீஸ் இருக்க இடத்துக்கு…” எனும் போது உறுமிக் கொண்டிருந்தான்..

“காரணமாத்தான்….” என ஒரு விதமாக ஆதிரன் அதற்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே…

“அம்மா ராஜாத்தி…..நீயாவது தம்பிட்ட சொல்லுமா……பாரு எப்டி இருந்தாலும் உனக்கு இந்த வாழ்க்க அமஞ்சது என்னாலதான்……அரண்மனை மாதிரி வீடு…….ராணி போல வாழ்க்க…..” என ஒரு மார்க்கமாய் கெஞ்சினான் அந்த வைட்…

“இவர் தான் உங்க மேரேஜ ரெஜிஸ்ட்டர் செய்த ஆஃபீசர்…” என அந்த வைட்டின் உளறலை மொழி பெயர்த்தார் ஆதிரன் இப்போது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.