(Reading time: 31 - 62 minutes)

கேட்டிருந்த ப்ரியாவுக்கு இந்த வைட்டை ரிஜிஸ்ட்டர் ஆஃபீஸில் பார்த்தது  சட்டென ஞாபகம் வருகிறதென்றால்…. விவனோ பற்றி எரிந்து கொண்டிருந்தான்….

பற்களை கடித்து…கைகளை இறுக மூடி…. ஆதிரன் முன் இவன் அந்த நபரை கை நீட்டுவது சரி இல்லை என்பதால் தன்னை சமாளிக்க திண்டாடிக் கொண்டிருந்தான் அவன்…

“அம்மா ராஜாத்தி ….சொல்லுமா…எவ்ளவு வசதி இந்த வீடு…” என அந்த வைட் இன்னுமாய் எதையோ சொல்ல தொடங்க..

“யோவ் வாய மூடு….என் முகத்துக்காக பார்த்துட்டு இருக்கவங்க…..அடிச்சு தூக்கி போட்டுட்டு….சாரின்னு சொல்ல வச்சுடாத…” என ஆதிரன் இடையிட்டதில் வாயை மூடிக் கொண்டான்.

பின் விவனுக்கும் ரியாவுக்கும் வெட்டிங் எப்படி ரெஜிஸ்ட்டர் ஆகியது என்பதை விளக்கினார் ஆதிரன்…. நடந்தது இதுதான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

னீஷ் ப்ரியா என ஒரு காதல் ஜோடி…. அந்த பொண்ணோட அப்பா ஒரு DSP….. அவர் இந்த காதலுக்கு சம்மதம் கொடுக்காமல் தன் பொண்ணை நாகர்கோவில் அருகில் உள்ள தனது கிராம வீட்டில் ஹவுஸ் அரெஸ்ட்டில் வைத்திருந்தார்….. DSP என்பதால் லோக்கல் போலீஸ் அவருக்கு சப்போர்ட்…. அனீஷ் ப்ரியா இரண்டு பேராலும் எவ்வளவு முயன்றும் அந்த வீட்டில் இருந்து ப்ரியாவை வெளி கொணர முடியவில்லை….

அப்போது அவர்களுக்கு ஒரு லாயர் கொடுத்த ஐடியதான் இது….. ஏற்கனவே அவர்களுக்கு சட்டபடி திருமணம் ஆகிவிட்டது என ஆதாரம் இருந்தால்….கணவன் என்ற முறையில் அனீஷ் கோர்ட் மூலம் ப்ரியாவை வெளியே கொண்டு வந்துவிட முடியும்... ஆக முன்பே திருமணம் நடந்தது போல் வெட்டிங் சர்டிஃபிகேட் ரெடி செய்ய சொன்னார் அவர்.

 Fake certificate ஐ வைத்தெல்லாம் கோர்ட்டை ஏமாத்த முடியாது…. ஆனால் ரெஜிஸ்ட்டர் ஆஃபீஸில் கவனிக்க வேண்டியவர்களை கவனித்தால்…முன் தேதியிட்ட உண்மையான சர்டிஃபிகேட்டே கிடைக்கும் எனவும் தகவல் சொல்லி இருந்தார் அவர்.

அப்படி அந்த அனீஷ் சர்டிஃபிகேட் வாங்க அணுகி இருந்தது இந்த வைட் ட்ரஸ் நாதனை…. ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டு இதை பக்காவாக செய்து தருவதாக ஒப்புக் கொண்டார் இந்த நாதனும். இது அவ்வப்போது அவர் செய்து கொடுப்பதுதான்.

அவர் மெத்தட் இதுதான்.

திருமண பதிவு ரெஜிஸ்ட்டர் மற்றும் அப்ளிகேஷன் பாரங்களில் மாப்பிள்ளை பார்ட்டை அனீஷை வைத்து சைன் செய்ய வைத்துவிடுவார்….

கல்யாண பெண் பார்ட்டுக்கு ப்ரியான்ற பேர்ல சைன் பண்ண ஒரு பொண்ணு கிடச்சா போதும்…அதுவும் ஒன்னும் கஷ்டமில்ல… p ன்ற எழுத்துல கோழி கிறுக்கல் கையெழுத்து போடுற ஒரு கல்யாண பொண்ணோ இல்ல சாட்சி கையெழுத்து பார்டியோ அமஞ்சா போதுமே…. இந்த ஃபார்ம்லயும் ஒரு கையெழுத்து போடுங்கன்னு….. அவங்க கையெழுத்து போட வேண்டிய நாலஞ்சு ஃபார்ம்க்கு இடையில் இதையும் ஒன்னா வச்சு சைன் வாங்கிடலாமே…

கவர்மென்ட் ஆஃபீஸ்ல எல்லா ஃபார்மையும் படிக்றது நம்ம கல்சர்லயே கிடையாதே… சைன் போடுன்னா போட்டுடுவாங்கதானே….

அடுத்தும் இவங்க கொடுக்ற வெட்டிங் சர்டிஃபிகேட்ல பொண்ணு பையன்  யார் சைனும் இருக்க போறதில்ல…. அப்றம் யாருக்கு இது கல்யாண பொண்ணு சைன்தானான்னு சந்தேகம் வர…? சோ இது ரொம்ப ஈஸியான வேலை நாதனை பொறுத்தவரை.

ப்படி அந்த அனீஷ் ப்ரியா திருமண பதிவிற்காக இவர் ப்ளான் செய்திருந்த ஆகஸ்ட் 22 அன்றுதான் செபினுடனான தன் திருமணத்திற்காய் அப்ளிகேஷன் கொடுக்க தனியாக போயிருந்தாள் ரியா….அப்ளிகேஷன் கொடுத்து 31 வது நாள் மேரேஜ் என்பது ப்ரொசீசர்.

ப்ரியான்ற பேரைப் பாக்கவும் அவரது யூசுவல் டெக்னிக்படி…. ஜூலை 14ம் தேதியே நடந்து விட்டதாக காண்பிக்க நினைத்திருந்த….. அந்த அனீஷ் ப்ரியா மேரேஜ் பதிவுக்கான கல்யாண பொண்ணு கையெழுத்தை, கவர்மென்ட் ரெஜிஸ்ட்டர் மற்றும் தேவையான ஃபார்ம்ஸில்  ரியாட்ட வாங்கிட்டார் நாதன்.

அடுத்து கூட்டமில்லா நேரம் அதில் அனீஷ் கொடுத்த டீடெய்லை நிரப்பி…அந்த அனீஷ் கையெழுத்தையும் அதில் வாங்கிடனும்னு அவர் நினைக்கிறப்ப

அங்கு தங்கள் வெட்டிங்க் பதிவுக்காக போய் நின்னது கண்மணி மஹிபால் ஜோடி…. கல்யாணம் முடியுற டைம் அவசரமா நார்வே போற மாதிரி ஒரு சூழல் மஹிபாலுக்கு….. முன்னமே கல்யாணத்தை பதிஞ்சுட்டா கல்யாணம் முடியுறப்ப கண்மணியையும் கூட கூட்டிட்டுப்  போறதுக்கு விசா ரெடியாயிடுமேன்னு இப்படி ஒரு அரேஞ்ச்மென்ட்….. அதுக்கு சாட்சி கையெழுத்து போட போன மூனு பேர்ல ஒருத்தர் அஃப் கோர்ஸ் நம்ம விவன்…

இதுல இந்த டைம் பார்த்து வருது ரெஜிஸ்ட்டர் ஆஃபீஸ் ரெய்ட் பார்ட்டி…. எப்பயாச்சும் வர்றவங்க அன்னைக்கு பார்த்து வந்துட்டாங்க……

அவங்க கைல மட்டும் இப்டி ஜூலை 14ந்தேதி கல்யாணம்னு பொண்ணு கையெழுத்தை மட்டும் வாங்கி வச்சுறுக்கிற ரெஜிஸ்ட்டர் பேஜ் கிடச்சுதோ…...நாதனோட வேலைக்கு சங்குதான்….

அதுவும் இப்ப மேரேஜ் பதிஞ்சுகிட்டு இருக்கும் இந்த கோஷ்டி கிளம்பவும் கூட ரெய்ட் மக்கள் ரெஜிஸ்ட்டரை உருவிக்க முடியும்….. ஆனா நடந்துகிட்டு இருக்ற கல்யாணத்தை நிறுத்தமாட்டாங்க….. ஆக இந்த கல்யாணம் பதிவாகுறதுக்குள்ள அவர் தன்னை காப்பாத்தியாகனும்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.