(Reading time: 31 - 62 minutes)

ராயிரம் ஜெபங்கள் உன்னவன் சொன்னதுண்டு

ஓதும் அவை அனைத்தும்

உன் ஓர் வடிவில் நான் விடை காணும் மட்டும்

ஓதம் என உயரும் என் தேடல் அது தீருமட்டும்

என் நிறையா நெடும் பள்ளங்களில் உனை நான் நிரப்புமட்டும்

நீங்காதிரு

பிரிவென்ற ஒன்றை பேசாதிரு” இன்னுமே தொடர்கிறது ரிங் டோன்.

“மொபைல்” என முனங்கினாள் ரியா இப்போது

“ம்….அப்றமா பார்த்துக்கிறேன்…. நீ எதோ சொல்ல வந்தியே…” இவன் தன் பாய்ண்டிலேயே நின்றான்……

“அ…அந்த கவிதை…?” இவள் கேள்வியாய் கேட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வளர்மதியின் "நிழலாய் உன்னை தொடரும்..." - திகிலூட்டும் அமானுஷ்ய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ஆமா….. கவிதை நல்லா இருகுதுல்ல…உன் வாய்ஸ் மாடுலேஷன் வேற நல்லா  இருந்துது….அதான்… சரி என்னமோ ராகா சொன்னாங்களே…?” என அந்த கவிதையை வைத்திருப்பது வெகு சாதாரண ஒரு செயல் என்பது போல் சமாளித்து….மீண்டும் ரியாவை உன்னை எனக்கு பிடிச்சிறுக்குன்னு சொல்ல வைக்கும் நிலைக்கு தள்ளினான் இவன்…

“நீங்க கால் அட்டென் செய்ங்க விவன்……பாவம் எவ்ளவு நேரம் ட்ரை பண்றாங்க….” ரியாவுக்கு இந்த பின்னணியில் பேச முடியாது என தோன்றி அவள் பின் வாங்கினாள்……

இப்படி ஃபோன் ரிங்காகிக் கொண்டிருக்கும் போது பேச முடியாது என விவனுக்கும் புரிகிறதுதான்…..

மொபைலை எடுத்துப் பார்த்தவன்….. “ஒன் மினிட் ரியு” என்றபடி அருகிலிருந்த அவனது ரூமுக்குள் சென்றுவிட்டான்….

யார் கூப்டுறதுன்னு பார்க்கவும் அவன் முகம் சீரியசானதோ?

அவன் திரும்ப வரும்வரையுமே ஒருவித தவிப்பில் நின்றாள் இவள்…

மொபைலை பாக்கெட்டில் வைத்தபடியே அவன் இயல்பாகவே இப்போது வர..

“யார் கால் விவன்…? எதுவும் முக்கியமானாதா…?” எனதான் கேட்க வருகிறது இவளுக்கு…

“அத விடு…. நீ சொல்லு…..” என  இவளை தூண்டத்தான் தோன்றுகிறது அவனுக்கு..…

“என்ட்ட சொல்ல மாட்டீங்களாபா….” என அவனை இப்போது இமோஷனலாய் லாக் செய்தாள் ரியா….. அவன் ஃபேஸ் ஏன் சீரியசாச்சு….அவன் ஏன் தனியா போய் பேசினான்?? என எதுவோ உள்ளுக்குள் அடித்துக் கொள்கிறதுதானே  இவளுக்கு……

விவனுக்கு இதற்கு மேலும் பேசாதிருக்க முடியாது என தெரியும்…” என் போலீஸ் ஃப்ரெண்ட் ஆதிரன் சார் தெரியுமில்லையா…. அவங்க கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டுக்கு வர்றாங்களாம்…” என பதில் கொடுத்தான் அவன்.

அவ்வளவுதான் இவள் முகம் வாடி வதங்கிவிட்டது…..  “எதுவும் பெரிய இஷ்யூவாபா…? அந்த செயின்ல எதுவும் ப்ராப்ளமா?” சுண்டி சுருங்கிய முகத்துடன் சோர்ந்துவிட்ட குரலில் இவள்.

“இதுக்குதான் ஆதிரன் சார் வர்ற வரை சொல்ல வேண்டாம்னு நினச்சேன்…..செயின்கான லேப் டெஸ்ட் இன்னும் முடியலையாம்……இது வேற விஷயம் போல……யாரோ ஒருத்தர் நம்மள பார்க்கனுமாம்… அங்கிள் கூட்டிட்டு வரேன்னாங்க….சரின்னு சொல்லிட்டேன்….” விவன் விளக்கவும் சற்று இயல்பாகி விட்டாள் ரியா…

இப்போது இவளை சோஃபாவை கை காட்டி அங்கு அமர சொன்ன விவன்…தானும் சென்று அவள் அருகில்….. அவளை நோக்கி திரும்பி உட்கார்ந்து…….ஒருகாலை மடக்கி சோஃபாவிலேயே வைத்து…..மறுகாலை பக்கவாட்டில் தரையில் ஊன்றி……..அவளுக்கு மில்லி மீட்டர் டிஸ்டென்சில் செட்டிலாகி..…

“இப்பவாவது அப்ப சொல்ல வந்தத சொல்லுவியா…..இல்ல எனக்கு இன்னுமே சஸ்பென்ஸ்தானா…?” என கொஞ்சமே கொஞ்சம் பாவம் மீ லுக்கில்  கேட்க….

அத்தனை அருகில்  அவன் அவளை சூழ்ந்திருக்க….. அதில் கலைந்து போனவளுக்கு….. அவன் அப்படி கேட்ட விதத்தில்….சின்னதாய் சிரிக்க கூட வருகிறது….

கை நீட்டி ஒரு கணம் அவன் முடி கலைக்க தோன்ற….மறுகணம் அவன் அழுத்த உதடுகளில் பட்ட இவள் பார்வை….அவள் அடி வயிற்றில் எதோ கெமிக்கல் ரியாக்க்ஷன் கொடுக்க….

பட்டென அவன் பார்வையை தவிர்த்து…..மீண்டும் “ என்ன பொண்ணு கேட்டு வந்தீங்கல்ல….” என விஷயத்தை துவங்கினாள் இவள்……

‘இந்த மந்திரவாதிய பார்க்கிறதவிட பேசிடுறதே ஈசி…’ என்பது அவள் நிலை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.