விவனுக்கோ அவள் அப்செட் ஆனதே இந்த காரியத்திற்காகத்தான் போலும் இப்ப சரியாகிட்டா என புரிய…..அவனும் ஜோதியில் ஐக்கியமானான்…
“ஹேய்…ஷ்யூர் ஷ்யூர்……எஜமானியம்மாவே சொன்ன பிறகு இந்த எலி செய்து கொடுக்காம இருக்குமா…?” என அவன் கிண்டலடிக்க…
“ஐய…எலி கூட யார் போவாங்களாம்….?” என அவள் சலித்துக் கொள்ள
“ஏன் சின்டரெல்லா போகல..?” என அவன் கேட்க….
“ம்…அவ போனது ப்ரின்ஸ் சார்மிங்க பார்க்க.….. ஆனா எனக்கு கிடச்சது big rat சாமியார் ஆச்சே…” என அவள் தாக்க….
“என்னது சாமியாரா…?” என ஒரு ஜெர்க் கொடுத்த விவன் இப்போது வாய்விட்டு சிரித்தான். பின்….”பாப்பா வரட்டும் அடுத்து வட்டியும் முதலுமா சேர்த்து கவனிச்சுடுவோம்…” என ஒருவிதமாய் சொன்னான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
சராசரியாய் யார் கேட்டிருந்தாலும் தெளிவாகவே தெரியும் அவன் குழந்தை பிறந்த பின் வரப்போகும் தாம்பத்ய வாழ்வை பற்றி குறிப்பிடுகிறான் என…. ஆம் அவன் மனதில் இருந்த நினைவு அதுவே….
எத்தனைதான் ரியா மீது அவனுக்கு காதலும் அதனோடு கலந்த கணவனுக்கான மோகநதியும் முட்டி மோதினாலும்……பல நேரத்தில் அவள் பக்கத்தில் வரும் போது இவன் பல்ஸ் ரேட் டாப் கியரில் எகிறினாலும்…..இப்படி இரண்டு உயிராய் இருக்கும் அவள் நிலையில் அவளை அழுத்தி தொடக் கூட மனசாட்சி ஒத்துக் கொள்ள மறுக்கிறது அவனுக்கு…
ஆக டெலிவரிக்கு பிறகு தாம்பத்ய சேப்ட்டரை தொடங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தான் அவன்….
ரியாதான் காதல் என்னை காதலிக்கவில்லை ஸ்டேசஸில் இருந்தாளே……இவன் பாப்பாவ வளர்க்கிறதப் பத்தி எதோ சொல்றான் போல என புரிந்து, அதை எதுக்கு இப்ப சொல்றான் என மங்குனியாய் முழித்தாள்…
இதுவரையுமே அவள் கையை தன் ஒரு கையால் பிடித்திருந்த விவனோ….இப்பொழுது இரு கையாலும் அந்த கையை மிக மென்மையாய் பொதிந்து கொண்டு..
“இங்க தடா பக்கம் இருக்குதில்லையா புலிகேட் லேக்…..அதுக்குள்ள சில வில்லேஜஸ் இருக்குது….அங்க ஒன்னில் நமக்கு ஒரு ஃபார்ம் ஹவுஸ் இருக்கு….இப்ப வெதர் நல்லா இருக்கும்…ஈவ்னிங் டைம் ரொம்பவே நல்லா இருக்கும்…… அங்க போய் ஸ்டே பண்ணலாம்னு நினைக்கிறேன் ரியு…. ஹில்லி ரீஜன் இப்ப வேண்டாம்” என்றவன்
“அப்றமா உன்ன அப்ராட் கூட்டிட்டு போறேன்” என கால்பங்கு காதலோடு ஹண்ட்ரட் 100% தாபமும் கலந்த உருகிய குரலில் சொல்ல..
அவன் அப்ராட் கூட்டிட்டு போக முடியலைன்னு ஃபீல் பண்றான் போல….என மட்டுமாய் புரிந்து கொண்டது நம்ம மங்குனி அமைச்சர்….எதுக்கு அங்க போகனும்னு அவன் நினைக்கிறான்னு இவளுக்கு தோன்றவே இல்லை….
“எங்க இருந்தா என்ன..” என அவள் எதையோ பதிலாக சொல்ல வர….
இதெல்லாம் பார்த்துட்டு இருந்த பல்லிக்கு பயங்கரமா தாங்க முடியாம போய்ட்டுபோல ….. ரொம்ப ரொம்பவும் நொந்து போன அது சூசைட் அட்டெம்ட் எடுக்க……yesssuuuuu எங்க இருந்தோ அது ஸ்வைங்ங்ங் டு நம்ம ரியா லேப்….
இப்ப அவ “ஐயோ அம்மா” என துள்ளி எழும்ப….அவன் “என்ன என்ன” என பதறி அணைக்க….. “நான் குளிச்சுட்டு வரேன்……”என ஓடியே போயிருந்தாள் அவள் அங்கிருந்த பாத்ரூமிற்குள்….
இப்படியாய் ரியா தன்னை என்னதாய் புரிந்து வைத்திருக்கிறாள் என விவனும்….விவன் தன்னை காதலிக்கிறான் என ரியாவும் புரிந்து கொள்ளாமலே முடிந்து போனது அந்த பேச்சு வார்த்தை…..
அடுத்து ஒரு மொக்க ஃபோன்கால் அவனுக்கு….. ஆஃபீஸ் ரூம் போய் அதை பேசி முடித்தவன், மீண்டுமாய் தன்னவளை பார்க்க கிளம்பி வந்தான்…. அவளைத் தவிர வேறு எங்கு போகிறதாம் இவன் மனம்…?
இந்நேரம் அவள் நிச்சயமாய் குளிச்சுட்டு வந்திருப்பா…..இன்னும் இவன் ஜிலேபி கெண்ட இவன்ட்ட உன்ன பிடிச்சிறுக்குன்னு ஓபனா சொல்லவே இல்லையே…. அத செய்ய வைக்கனும் அவள…. எப்ப இருந்து ஏன் பிடிச்சுதுன்னு ஆரம்பிச்சு……அவளோட எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்…..
இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு இவன் அவளது அறைக்குள் நுழைய….
அங்கு அப்போதுதான் பாத்ரூம் கதவை திறந்து கொண்டு ஒரு விதமாக வெறி பிடித்தவள் போல் துள்ளி வெளியே வந்து கொண்டிருந்தாள் ரியா….
அதுவும் அவளது முடி முழுவதும் ஈரம் சொட்ட சொட்ட….பாத்ரூமிலிருக்கும் ஒரு பெரிய வெள்ளை டவலை மட்டும் உடலில் சுற்றிக் கொண்டு அவள்…
அவள் வந்த வேகத்தில் அவளது ஈரத்துக்கும் வழு வழு தரைக்கும் அவள் வழுக்கி விழுந்தால் என்னாவது….என்ற நினைவில்தான் இவன் முதலில்
“ஹேய்…ரியு…. மெதுவா….கேர்ஃபுல்…..” என்றபடி வேக வேகமாக அவளிடம் ஓடியது….. ஆனால் இவன் அவளை அடைந்த நேரம்
பாத்ரூம் வாசலை ஒட்டிய இடது பகுதியில் குப்பென துவங்கியது அது….. தீ….!!!!
அதுவும் எதன் மீதும் பிடிக்காமல்…..வெறும் தரையிலிருந்து எழும்பிய அது……ஒரு விதமாய் ஓடி ஓடி எரிய துவங்கியது……
அவ்வளவுதான்…பயத்தில் இவனை அட்டையாய் அப்பி இருந்தாள் ரியா எனில்…..இவனோ அங்குமிங்குமாய் ஓடும் அந்த தீ நாக்கு அவளை தொட்டுவிடக் கூடாது என்ற இன்ஸ்டென்ட் முடிவில்….பாத்ரூம் கதவை அசுர வேகத்தில் திறக்க …..
எரிந்த தீ இப்போதுதான் வாசிக்க தக்க எழுத்துக்களின் வடிவில் எரிகின்றது என புரிகின்றது இருவருக்கும்….
தென்காசிக்குப் போ…
என்ற வடிவில் எரிந்து கொண்டிருந்தது அது….
Friends இந்த எப்பில மானகவசர் ருயம்மா கொண்டுவர வழி இல்லை….இன்னும் சில சீன்ஃஸ் போனபின்புதான் இனி அவங்க வர முடியும்….இப்பவே 9 பேஜ்….சோ அடுத்த எப்பில அவங்கள பார்க்கலாம்னு நம்புறேன். பொறுத்தருளவும்….இந்த எப்பிக்கு கமென்ட் குடுங்க…. உங்கள் கமென்ட் உதவியாக இருக்கும். நன்றி..
தொடரும்
{kunena_discuss:1063}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.