(Reading time: 18 - 35 minutes)

ன்னோட ப்ரண்டோட ஒரு முக்கியமான பங்க்‌ஷன்க்கு போக வேண்டியிருக்கு செல்வா... நான் வர்றதா ஏற்கனவே சொல்லிட்டேன்... அதுமட்டுமில்ல ஆஃபிஸ்ல அன்னைக்கு 11 மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு... இப்போ எல்லா ப்ரோக்ராமையும் கேன்சல் பண்ண முடியாது... அதான் சொல்றேன், நீயே அம்மா, அத்தையோட போய்ட்டு வந்துடு" என்றான்....

"அண்ணா இப்போ எந்த ஃப்ர்ண்ட்ஸோடவும் ரொம்ப காண்டாக்ட்ல இல்லை என்பது செல்வாவிற்கே தெரியும்... ஆனா பங்க்‌ஷன் அட்டண்ட் பண்ற அளவுக்கு முக்கியமான ப்ரண்ட் யாரென்று யோசித்தான்... இருந்தும் அண்ணன் வரக்கூடாது என்பதற்காக சாக்கு சொல்பவன் இல்லை என்பது தெரியும்... அதனால், "சரிண்ணா நானே அவங்கக் கூட போகிறேன்.. என்றான்...

அப்போது செல்வாவின் அலைபேசி அலறியது... அதை எடுத்துப் பார்த்த அவன் ஒரு சலிப்போடு அதை சைலண்ட் மோடில் போட்டான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "துடிக்கும் இதயம் உனதே உனது!!!" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"யார் செல்வா போன்ல.."

"நம்மக் கூட பிஸ்னஸ் டீல் வச்சிருக்கவர் ம்மா.."

"யாரு செல்வா..??"

"Mr. வர்மா ண்ணா.. நேத்து அவரைப் பார்த்தேன்... அப்போ உங்க மேரேஜ் பத்தி பேச்சு வந்துச்சு... மேரேஜ்க்கு அப்புறம் ஹனிமூன் போற செலவு தான் என்னோட மேரேஜ் கிஃப்ட், துஷ்யந்த் எந்த கன்ட்ரிக்கு போறாரோ அந்த செலவு என்னோடதுன்னு சொன்னாரு... உங்கக்கிட்ட கேட்டுட்டு சொல்ல சொன்னாரு... நான் வேணும்னா சொல்றேன்னு சொன்னேன்... ஆனா சும்மா போன் பண்ணி டிஸ்டர்ப் பண்றாரு..."

ஏதோ அந்த சூழ்நிலை எல்லோருக்கும் சங்கடமாகவே இருந்தது... இந்த திருமணம் முதலில் நல்லப்படியாக நடக்க வேண்டும் என்பதே இப்போது எல்லோரின் மனநிலையும், அதுவும் துஷ்யந்திற்கோ இந்த திருமணமே நடக்க வேண்டுமா..?? என்ற கேள்வி மனதில் இருக்க, இதைப்பற்றியெல்லாம் கேட்பது அவனுக்கு நெருப்பின் மேல் நிற்பது போல் இருந்தது... எல்லோருடைய மனநிலையும் முழுதாக செல்வாவிற்கு தெரியவில்லையென்றாலும், ஹனிமூன் அளவுக்கு யாரும் இப்போது யோசிக்க தயாரில்லை என்பது தெரிந்ததால், இதைப்பற்றி கூறாமல் இருந்தான்... இப்போது கேட்கவே விவரத்தை சொன்னான்.

"கல்யாணத்துக்குப் பிறகு ரெண்டுப்பேரும் அதைப்பத்தி முடிவெடுத்துக்கட்டும் செல்வா.. நீ அவர்க்கிட்ட தெளிவா அதை சொல்லிடு... திரும்ப திரும்ப தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொல்லிடு.." என்றார் கோமதி.

"சரிம்மா.." என்றவன், "வெளிநாடு என்னம்மா... எப்போ வேணா போய்க்கலாம்... நானெல்லாம் ஹனிமூன் போனா, நம்ம குன்னூர் எஸ்டேட்க்கு தான் போவேன்..." என்று வழக்கம் போல அம்மா, அத்தையிடம் எப்படி விளையாட்டாய் பேசுவானோ, அப்படி ஆரம்பித்தவன்... அப்போது மனதில் இருந்த ஏகப்பட்ட கற்பனைகள் எல்லாம் இப்போது எங்கேயோ ஓடிப்போயிருக்க, எதற்காக இப்படி பேசினோம் என்று மனதில் தோன்றி, சொல்ல வந்ததை சுரத்தே இல்லாமல் சொல்லி முடித்தான்...

உண்மையிலேயே அந்த பேச்சை கவனித்தவர்கள், அவன் பேச்சில் இருந்த ஸ்ருதி குறைந்ததற்கு என்னவென்று கேட்டிருப்பர்... ஆனால் எல்லோரும் தான் குன்னூர் என்று அவன் சொன்ன ஒற்றை வார்த்தையிலேயே அதிர்ந்துப் போயிருந்தனரே...

குன்னூர் என்ற வார்த்தையை கேட்டதும், சாப்பாடு இருந்த கையை வாயில் வைக்க கொண்டுப்போனதை அப்படியே நிறுத்தி, தன் சகோதரனை துஷ்யந்த் பார்க்க... கோமதியும், விஜியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்...

இந்த நேரம் இப்படி பேசியிருக்கக் கூடாது என்று நினைத்தவன், உடனே பேச்சை மாற்றுவதற்காக.. "குன்னூர் போய் எவ்வளவு நாள் ஆச்சு இல்லம்மா.." என்று சொன்னப்படி தன் அன்னையை பார்க்க, அவர் கண்களால் ஏதோ ஜாடை காட்ட, அவனும் புரிந்துக் கொண்டு அமைதியாகிவிட்டான்...

சாப்பிட்டுக் கொண்டிருந்த துஷ்யந்த் பாதி சாப்பாட்டிலேயே எழுந்துக் கொண்டான்...

"ராஜா என்னப்பா..? ஏன் எந்திருச்சுட்ட..?

"இல்லம்மா.. எனக்கு போதும்.." என்றவன் வாஷ் பேசனில் கை கழுவி விட்டு, தன் அறைக்குச் செல்ல, படியேறிப் போக...

"எப்போ எதை பேசனும்னே இல்லை செல்வா... ராஜா இருக்கும்போது குன்னூர் பத்தி பேசாதன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்ல.." என்று கோமதி சொன்னதும்,

"சாரிம்மா.. எனக்கு ஞாபகம் இல்லாம பேசிட்டேன்.." என்று செல்வா சொல்வதும் அவன் காதில் விழுந்தது.

காலிங்பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த மல்லிகாவிற்கு, வாசலில் நின்றிருந்த செல்வாவை பார்த்ததும் அதிர்ச்சி.... அதை மறைத்துக் கொண்டு,

"வாங்க தம்பி.. உள்ள வாங்க.." என்று வரவேற்றார்..

அவர் பார்வையே, இவனை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை, என்பதை புரிந்துக் கொண்டவன்...

"சாரி ஆன்ட்டி.. அம்மா நான் வர்றத உங்கக்கிட்ட போன்ல சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன்.. அதான் சொல்லாம வந்துட்டேன்.." என்றான்...

"அதனால என்ன தம்பி பரவாயில்லை.." என்று சொன்னவர்.... மனதிலோ,

நல்லவேளை இந்த தம்பி இப்போ வந்துச்சு, கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருந்தா என்ன ஆகியிருக்கும் என்று நினைத்தார்.

ஏனென்றால் வீட்டை சுத்தப்படுத்தும் வேலை தீவிரமாக நடந்துக் கொண்டிருந்தது... மல்லிகாவிற்கு வழக்கமாக செய்யும் வீட்டு வேலைகளை செய்துவிட்டு சீரியல் பார்ப்பதற்கே சரியாக இருக்கும்.. ஏதாவது விஷேஷம் என்றால் தான், மாஞ்சு மாஞ்சு சுத்தப்படுத்திக் கொண்டிருப்பார்...

இருமுறை கோமதி வந்தப்போது கூட மேலோட்டமாக சுத்தப்படுத்தியவர்.. இப்போது கல்யாணத்தை முன்னிட்டு, தீவிரமாக இந்த வேலையில் இறங்கியிருக்கிறார்...

முன்பு நர்மதாவிற்கு நேரம் கிடைக்கும்போது அவள் இதையெல்லாம் செய்வாள்... இப்போது பள்ளியில் அவளுக்கும் அதிகப்படியான வேலை என்பதால், அவளும் இதெல்லாம் தற்போது செய்வதில்லை... இன்று பள்ளி அரை நாள் செயல்படும் வாய்ப்பை பயன்படுத்தி, மல்லிகா அவளையும் சேர்த்துக் கொண்டு இந்த வேலையில் இறங்கிவிட்டார்...

சிறிது நேரத்திற்கு முன்பு தான் வரவேற்பறையை சுத்தப்படுத்தியிருந்தனர்... அதை தான் மல்லிகா தற்போது நினைத்தார்... அப்போது தான் மகளை பற்றிய நினைப்பு வந்து அவர்,

"தம்பி கொஞ்சம் உக்காருங்க.. இதோ வந்துட்றேன், என்று சொல்லிக் கொண்டிருந்த போதே..

"அம்மா.." என்று அழைத்தப்படி நர்மதா அங்கு வந்தாள்... நைட்டி அணிந்திருந்தாள், கூந்தலை கொண்டையாக முடித்து, கையில் துடைப்பத்தோடு வந்து நின்றாள்..

வரவேற்பறையை சுத்தம் செய்ததும், அவளின் படுக்கறையை சுத்தம் செய்ய சென்றவள், வெளியில் தூசு வராதிருக்க, அறையை உள்ளே தாளிட்டு கொண்டாள்... அதனால் காலிங்பெல் சத்தம் அவள் காதுக்கு சரியாக கேட்கவில்லை... அந்த அறையில் வேலை முடிந்ததால் வெளியே வந்தாள்...

அவனை பார்த்ததும், தான் இருந்த நிலையை அறிந்தவள், உடனே அறைக்குள் சென்றுவிட்டாள்... மல்லிகாவும் பின்னாடியே சென்றார்...

அவளை அந்த நிலையில் பார்த்தவனுக்கோ சங்கடமாகி விட்டது... அம்மா சொல்லியிருந்தாலும், இல்லையென்றாலும் நானாவது சொல்லிவிட்டு வந்திருக்கலாம் என்று நினைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.