(Reading time: 18 - 35 minutes)

ன் அலுவலகத்தில் தனது அறையில் இருந்தான் துஷ்யந்தன்..

"மே ஐ கம் இன் சார்.." என்று கேட்டு உள்ளே நுழைந்தார் அந்த அலுவலகத்தின் மேனேஜர்...

"ம்ம் என்ன சுரேஷ்..??"

"சார்... நம்ம குன்னூர் டீ எஸ்டேட்ல இந்த வருஷம் எக்ஸ்போர்ட் ஆகற டீடெய்ல்ஸ் ஃபைல் சார்... இதுல எப்பவும் ரிஷப் சார் தான் செக் பண்ணி ஸைன் பண்ணுவாரு...

இப்போ தான் டீடெயில் ஃபாக்ஸ்ல வந்துச்சு... ரிஷப் சார் வேற ஆஃபிஸ்ல இல்ல... ஏஜென்ட்ஸ் கொஞ்சம் அவசரப்படுத்துறாங்களாம்.. அதான் நீங்க ஃபைல் செக் பண்ணி ஸைன் பண்ணிட்டீங்கன்னா அவங்களுக்கு சொல்லிடலாம்..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"சரி கொடுங்க.." என்று வாங்கியவன், அதை சரிப் பார்த்து கையெழுத்திட்டு கொடுத்தனுப்பினான்...

குன்னூரிலிருந்து வியாபார சம்பந்தமான தகவல்களை கூட தன்னிடம் வராமல் இதுவரை பார்த்துக் கொண்ட தன் சகோதரனை நினைத்து துஷ்யந்திற்கு சிரிப்பு தான் வந்தது...

முன்பெல்லாம் இவன் அதைப்பற்றி யோசித்ததில்லை.. ஆனால் காலையில் நடந்த சம்பவம் இப்போது அதை யோசிக்க வைத்தது...

தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான  சம்பவங்களின் சில சுவடுகள் குன்னூரிலும் அடக்கம்... அதனால் அதெல்லாம் இவன் ஞாபகத்துக்கு வரக் கூடாது என்று தன் வீட்டில் உள்ளவர்கள் நினைப்பதில் தவறில்லை... அவர்களை பொறுத்த வரை குன்னூரில் நடந்ததை இவன் மறக்க வேண்டுமென்று நினைக்கின்றனர்... செல்வாவிற்கு விவரம் ஏதும் தெரியவில்லையென்றாலும், அம்மா குன்னூரை பற்றி இவன் முன் பேசக்கூடாது என்று சொன்னதற்கு அவனுக்கு தெரிந்த காரணத்தை அவன் நினைத்துக் கொண்டான்...

ஆனால் இவர்களெல்லாம் நினைப்பது போல் குன்னூரை இவனால் மறக்க முடியுமா..?? குன்னூரில் இருந்த அந்த மூன்று மாதம் இவனுக்கு வசந்தகாலம் அல்லவா..?? அங்கு தானே கடவுள் இவனுக்கு அளித்த வரமாய் கங்காவை கண்டான்... அதையெல்லாம் எப்படி மறக்க முடியும்...??

அந்த மூன்று மாதம் அவளோடு இருந்த நாட்களை எப்படி மறக்க முடியும்..?? அவள் கைகளோடு இவன் கைகளை கோர்த்தபடி அந்த எஸ்டேட்டை சுற்றி வந்து மகிழ்ந்து இருந்ததையோ... இல்லை அவள் மடியில் தலை வைத்து அவள் பேசுவதை கேட்டப்படி நெகிழ்ந்து இருந்ததையோ இவனால் மறந்திட முடியுமா..??

அவள் இதழ் தந்த முத்தத்தில் கிறங்கி இருந்ததையோ... இல்லை அவள் அணைப்பு தந்த சுகத்தில் உறங்கி இருந்ததையோ எப்படி இவனால் மறக்க முடியும்..?? அந்த மூன்று மாதம் அவள் காட்டிய அந்த நேசம் தான், இன்று வரையும் இவனை சுவாசிக்க வைத்திருக்கிறது என்பது தானே உண்மை...

அன்று அவள் காட்டிய நேசத்தை மீண்டும் அடைய தானே இன்று வரை இவன் நம்பிக்கையோடு காத்திருக்கிறான்.. ஆனால் இனி அத்ற்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை... இவன் இத்தனை நாள் கொண்ட நம்பிக்கையெல்லாம் பொய்த்துப் போக போகிறது... நிலைமை கையை மீறி போய்விட்டது... அதை நினைக்கையில் அவன் வாழ்வில் வந்துப் போன வசந்த காலத்தை மறந்து தான் ஆக வேண்டுமோ..??

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.