(Reading time: 18 - 35 minutes)

"வனுக்கு விவஸ்தையே இல்ல.. வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி சொல்லிட்டு வர்றதில்ல.." என்று நர்மதா மனதுக்குள் புலம்பினாள்...

வீட்டில் அவள் அணிந்திருக்கும் உடை எப்போதும் நைட்டி தான்.. எப்போதாவது சல்வார்... நைட்டியில் வீட்டில் இருக்கும் போது, கேஸ் டெலிவரி பண்றவங்க... போஸ்ட் மேன், கொரியர் பாய், யாராவது அட்ரஸ் மாத்தி வந்து கதவை தட்றவங்க என்று எல்லோரையும் பார்த்திருக்கிறாள்... ஆனால் இவன் முன் அந்த உடையில் இருந்தது ஒருமாதிரி ஆகிவிட்டது...

"ஆமாம்.. அன்னைக்கு அப்படி பேசினான்... அவன் பேசின பேச்சுக்கு, இந்நேரம் கல்யாணத்தை நிறுத்தியிருப்பான்னு பார்த்தா.. இப்போ எதுக்கு இங்க வந்திருக்கான்.. என்று நினைத்தவள், ஒரு சல்வாரை மாட்டிக் கொண்டு, கொண்டையிட்ட கூந்தலை குதிரை வால் பின்னலாக போட்டுக் கொண்டு... சமயலறையில் இருந்த தன் அன்னையை பார்க்கச் சென்றாள்...

"அம்மா... விருந்தாளி வந்திருக்காங்கன்னு உள்ள வந்து சொல்லமாட்டியா..??"

"அப்போ தாண்டி அந்த தம்பி வந்து உக்கார்ந்துச்சு... சொல்லலாம்னு நினைக்கறதுக்குள்ள... நீ வந்துட்ட.. சரி அந்த தம்பி தனியா உக்கார்ந்திருக்கு... நீ போய் பேசிக்கிட்டு இரு.. நான் காபி போட்டு எடுத்துக்கிட்டு வரேன்..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"நான் காபி போட்றேன்... நீங்க போய் பேசுங்க.." என்று மல்லிகாவை அவனிடம் அனுப்பி வைத்தாள்...

இருவரும் உள்ளே போனதிலிருந்து அவன் அந்த அறையை நான்கைந்து முறை சுற்றி சுற்றி பார்த்துவிட்டான்... இதற்கும் மேலும் அப்படி பார்க்க தோன்றாமல் பொறுமையை தன் வசம் இருந்து விலக்கும் முன்னரே, மல்லிகா வந்துவிட்டார்...

"அது காபி எடுத்துட்டு வர போனேன் தம்பி... நர்மதாவே போட்டுக் கொண்டு வரேன்னு சொல்லிட்டா.. அவ காபி சூப்பரா போடுவா தம்பி... குடிச்சீங்கன்னா அடிக்கடி அவ காபி குடிக்கனும்னு நினைப்பீங்க..." என்று நர்மதாவின் காபி பற்றி அவர் புகழ்ந்துக் கொண்டிருக்க,

"என்னோட பிபிய ஏத்தறதுக்குன்னே வரான் போல... இவனுக்கு இந்த காபி ஒன்னு தான் குறைச்சல் என்று நினைத்தவள், அவன் பிபியும் கொஞ்சம் ஏறட்டும் என்று சக்கரைக்கு பதில் உப்பை அள்ளிக் காபியில் கொட்டினாள்...

"அய்யோ அதுக்கு தான் உள்ளப் போனீங்கன்னு தெரிஞ்சிருந்தா.. நான் வேண்டாம்னு சொல்லியிருப்பேனே... நான் அடிக்கடியெல்லாம் காபி சாப்பிட்றதில்ல ஆன்ட்டி.."

"இருக்கட்டும் தம்பி... இந்த ஒருமுறை குடிச்சா ஒன்னும் ஆயிடாது.." என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே, நர்மதா காபியோடு வந்தாள்... அதை அவன் கையில் அவள் கொடுக்க.. அதை வாங்கியவன்.. "தேங்க்ஸ்.." என்று கூறி அந்த காபியை மேசையின் மீது வைத்தான்... அவளும் தன் அன்னைக்கு அருகில் நின்றுக் கொண்டாள்.

"ஆன்ட்டி... மேரேஜ் இன்விடேஷன் எல்லாம் நேத்தே ரெடியாகி வந்துடுச்சு... அம்மா இதை உங்கக்கிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னாங்க... அம்மாவும், அத்தையும் குலதெய்வ கோவிலுக்குப் போயிருக்காங்க... பத்திரிக்கையை வச்சு பூஜை பண்ண... உங்களுக்கும் அந்த சம்பிரதாயமெல்லாம் இருக்குமில்ல... அதான் அம்மா உடனே என்கிட்ட கொடுத்து அனுப்பிச்சாங்க... இல்லண்ணா அம்மாவே வந்துருப்பாங்க ஆன்ட்டி... தப்பா நினைச்சிக்காதீங்க..."

"அய்யோ இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு தம்பி.... கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கு... நாங்களும் நாளைக்கு கோவிலுக்குப் போகனும் தம்பி.."

"அப்புறம் ஆன்ட்டி... வர சண்டே  நாள் நல்லா இருக்காம்... அப்பவே இவங்களுக்கு புடவை எடுத்துடலாம்னு அம்மா சொன்னாங்க..." என்று நர்மதாவை பார்த்துக் கொண்டே சொன்னவன்...

"அப்படியே சம்பிரதாய படி உங்க பேமிலில எல்லோருக்கும் ட்ரஸ் எடுக்கனுமாம்... சண்டே உங்களுக்கு ஃப்ரி தானே ஆன்ட்டி.." என்றான்.

"ஞாயிற்றுக் கிழமை தானே தம்பி... எல்லாரும் வீட்ல தான் இருப்பாங்க... அன்னைக்கே போலாம்.." என்றவர்... திரும்பி நர்மதாவை பார்த்து,

"என்ன நர்மதா... அன்னைக்கே போலாமில்ல.." என்றுக் கேட்டார்.

அவளோ இன்னும் அவன் அந்த காபியை பருகவில்லையே என்ற சிந்தனையில் இருந்தாள்...

"ஏ நர்மதா.. உன்னை தான் கேக்கறேன்... ஞாயிற்றுக் கிழமை புடவை எடுக்க போலாமில்ல.."

"ம்ம் போலாம்மா.."

"அப்போ அன்னைக்கு காலையில எல்லோரும் ரெடியா இருங்க ஆன்ட்டி... நான் வீட்டுக்கு கார் அனுப்பறேன்..."

"சரி தம்பி... நீங்க முதல்ல காபி குடிங்க.." என்று மல்லிகா கூறியதும், அவன் காபியை எடுத்து பருக போக..

 நர்மதாவோ ஆவலோடு பார்த்திருந்தாள்...

காபியை ஒரு வாய் குடித்தவனோ... முகத்தை சுழித்து அந்த காபியை கீழே வைத்தான்... இதுவே தன்னுடைய வீட்டில் இருந்திருந்தால், வாந்தியே எடுத்திருப்பான்..

"என்ன ஆச்சு தம்பி..?"

"காபி உப்பு கரிக்குது ஆன்ட்டி.."

"நர்மதா... காபியில சர்க்கரையை தான போட்ட.. இல்ல தெரியாம உப்பை போட்டுடியா..??"

"சர்க்கரை தான்ம்மா போட்டேன்.."

"அப்புறம் என்னடி.. காபி உப்பு கரிக்குதுன்னு தம்பி சொல்றாரு... எப்பவும் நல்லா தானே போடுவ.. இன்னைக்கு உனக்கு என்னாச்சு.." என்றவர்,

"தம்பி அவ ஏதோ பதட்டத்துல உப்பை போட்ருப்பான்னு நினைக்கிறேன்... இருங்க நான் வேற போட்டு எடுத்துக்கிட்டு வரேன்..." என்றார்.

அவள் வேண்டுமென்றே தான் உப்பை போட்டிருப்பாள் என்று அவனால் யூகிக்க முடிந்தது... "இருக்கட்டும் ஆன்ட்டி... இப்போ எனக்கு காபி குடிக்கனும்னு இல்ல... நீங்க போட்டதால தான் குடிக்க நினைச்சேன்... எனக்கு இப்போ டைம் இல்ல... எனக்கு வேலையிருக்கு... அதனால கிளம்பறேன் ஆன்ட்டி... நீங்க எல்லோரும் சண்டே ரெடியா இருங்க கார் அனுப்புறேன்.." என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்...

"இப்படியா காபி போடுவ நர்மதா... அந்த தம்பி என்ன நினைக்கும்...  அவங்க உன்னோட புகுந்த வீட்டு ஆளுங்க நர்மதா.. இனி கவனமா இரு.." என்று மல்லிகா கூறிவிட்டு உள்ளே செல்ல...

அதற்கெல்லாம் அவள் கவலைப்படுவதாக இல்லை... ஏற்கனவே அவன் மீது அவளுக்கு இருக்கும் கோபம் போதாது என்று அடிக்கடி இவள் பார்வையில் வந்து விழுகிறானே... அதெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் காட்டியதில் அவளுக்கு நிம்மதியே.. அதனால், "என்ன இனி என் கையால காபியே குடிக்க மாட்டானா..?? ரொம்ப சந்தோஷம்.." என்று மனதில் நினைத்துக் கொண்டு அவளும் வேலையை பார்க்கச் சென்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.