(Reading time: 13 - 26 minutes)

வளைப் பத்தி உனக்கு தெரியாதா பிரஷன்… விடு…”

ராஜேஷ்வரன் மகனுக்கு தன்மையாக கூற,

“இல்லப்பா… ஒரு நாள் இரண்டு நாள்ன்னா பரவாயில்லை… இதே வழக்கமா வச்சிருக்காங்க…”

அவனும் ஆதங்கத்துடன் உரைத்தான்…

“இங்க பாருடா… இப்போ என்ன பிரச்சினை உனக்கு?...”

கலைவாணி சற்றே அதட்டி கேட்க,

“நீ சாப்பிடாம இப்படி பட்டினியா கிடக்குறது தான் பிரச்சினை…” என்றான் அவன் சட்டென…

“அப்படியா?... அப்போ நான் சொல்லுறதையும் கேட்டுக்கோ… நீ நேரா நேரத்துக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடுவேன்னு சொல்லு… நானும் பட்டினியா கிடக்கலை…”

அவரும் வெடுக்கென கூற, அவனோ செய்வதறியாது தாயைப் பார்த்தான்…

அவர் முகம் திருப்பிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, தாயின் முகம் பற்றி திருப்பியவன்,

“சரி… இனி நேரத்துக்கு சாப்பிடுறேன்… போதுமா?...” என கூற,

“இது தான் என் பிள்ளைக்கு அழகு…” என்றவர் மகனின் முகவாயை தொட்டு சிரிக்க, அவனுக்கும் சிரிப்பு வந்தது…

“நீங்க போய் டிபன் எடுத்து வைங்கம்மா… நான் அவளை எழுப்பி கூட்டிட்டு வரேன்…” என்றான் அவனும்…

“சரி….” என்றவர் எழுந்து கொள்ளாமலேயே இருக்க, அவன் அவரையேப் பார்த்தான்…

“என்ன கலைம்மா?... என்னாச்சு?...”

“ஒன்னுமில்லப்பா…” என்றவர், மனதில் நினைத்த்தை கூறாமல் மறைத்தார்…

“இல்ல எதுவோ இருக்கு… சொல்லு….”

அவன் விடாப்பிடியாய் கேட்க,

“எதுவுமில்லை…” என்றவாறு தலையசைத்த அவர், மகனின் தலைக்கு ஒரு தலையணையை கொடுத்துவிட்டு, எழுந்து கொள்ள,

அவன் அவர் போகும் திசையையேப் பார்த்திருந்தான்…

“கலைம்மா… நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை?....”

அவன் மீண்டும் கேட்க,

“ஏதோ பழைய நியாபகம்….” என உதிர்த்தது அவரின் உதடுகள் மிக மெதுவாக…

உதிர்த்த வார்த்தைகள் தன் காதுகளுக்குள்ளேயே திரும்ப திரும்ப ஒலித்திட, கண் மூடி அந்த வலியை உள்வாங்கியவர்,

“சாப்பாடு எடுத்து வைக்குறேன்... சீக்கிரம் வா…” என சத்தமாக சொல்லிவிட்டு செல்ல, அவனோ இப்போது தகப்பனைப் பார்த்தான்…

“விடு பிரசன்… நீ முத சாப்பிடு வா…” என்றவர் பேத்தியை தூக்கி கொள்ள முயல,

அவனோ, “இல்லப்பா… நான் எழுப்பி கூட்டிட்டு வரேன்… நீங்க போங்க…” என்றான்…

அவரும் சரி என எழுந்து செல்ல, மெல்ல மகளின் தலையை வருடிக்கொடுத்தான் அவன்…

“நைனி குட்டி….”

அவன் அழைக்க, அவளிடம் மெல்லிய அசைவு…

“நைனி குட்டி…. சாப்பிட்டு தூங்கலாம்… எழுந்திரு டார்லிங்க்….”

“ஹ்ம்ம்….”

இம்முறை சற்றே வந்தது சிணுங்கலும்… கூடவே முழிப்பும்…

“அப்பா,,,,,,,,,,,,,,,,,”

கண்களை கசக்கிக்கொண்டே மெல்ல கண் விழித்தாள் அவள்…

“அப்பா இங்க தாண்டா இருக்குறேன்… என் டார்லிங்க் பக்கத்துலயே தான் இருக்குறேன்… இப்போ என் நைனி குட்டி எழுந்து என் கூட, பாட்டி கூட, தாத்தா கூட சாப்பிடுவாங்களாம்… அப்புறம் தூங்குவாங்களாம்…”

அவன் மகளின் கன்னம் பற்றி கூற, அவள் முழுவதுமாக தூக்கத்திலிருந்து விழித்தாள்…

மகளினை தூக்கி சோபாவில் இருந்து இறக்கி விட்டவன் அவளின் கைப்பிடித்து நட்த்தி செல்ல முயல,

“அப்பா……..” என இரு கைகளையும் உயர்த்தினாள் அவள் வேகமாக…

புன்னகையுடன், அவளருகே குனிந்தவன், அவளை அப்படியே பொம்மை போல் தூக்கி வைத்துக்கொண்டு டைனிங்க் டேபிளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்…

“இதோ நைனி குட்டி வந்தாச்சே… வாங்க வாங்க… சாப்பிடலாம்…”

கலைவாணி பேத்தியை வாங்க கைநீட்ட, அவளோ அவனின் கழுத்தினை கெட்டியாக பிடித்துக்கொண்டு வரமறுத்தாள்…

“இன்னும் தூக்க கலக்கம் போகலை போல…. நீ பரிமாறு வாணி…” என்றார் ராஜேஷ்வரன்…

“சரிங்க…” என்றவர் மூவருக்கும் பரிமாற,

அவனோ தாயையும் அமர சொன்னான்… அவர் அமர்ந்த்தும், அவரது தட்டில் இட்லியை எடுத்து வைத்த கையோடு, அதை பிய்த்து அவரை நோக்கி நீட்ட, அவர் மகனை சட்டென ஏறெடுத்துப் பார்த்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.