(Reading time: 16 - 32 minutes)

‘அவர் எனக்கு ப்ரோபசர்’ என்றாள் புன்னகை மாறாமல். ‘குரு!!! கரெக்டா சொல்லணும்னா குருங்கிற ஸ்தானத்துக்கு மேலேதான் அவர் எனக்கு. அதனாலேதான் என் பையனுக்கும் ஸ்ரீநிவாசன்னு பேர் வெச்சேன்..’

‘வா....வ்...’ என்றவனின் பார்வை ஸ்ரீனிவாசனை தழுவி மீண்டது .அதில் அத்தனை நிறைவும் சந்தோஷமும். அவன் விரல்கள் ஸ்ரீனிவாசனின் கேசத்தை மெல்ல கலைத்தன.

‘நான் உங்ககிட்டே நிறைய பேசணும். உங்க அப்பா பத்தி, அதை விட இன்னமும் முக்கியமா...... அதை... அதை...  எப்படி சொல்றதுன்னு தெரியலை... உங்களை அப்படியே சந்தோஷ படுத்தக்கூடிய ஒரு விஷயம் என்கிட்டே இருக்கு.. இப்போதைக்கு சஸ்பென்சாவே இருக்கட்டுமே. அதை உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தறேன் சீக்கிரமே.’ அவள் மடமடவென சொல்லிக்கொண்டே போக அவளை வியப்புடன் பார்த்திருந்தான் விவேக்.

‘அம்மா.. அங்கிளை நாளைக்கு வீட்டுக்கு வர சொல்லுமா...’ ஸ்ரீநிவாசன் இடையில் புக,

‘எஸ்... நீங்க கண்டிப்பா வரணும்..’ வீட்டு முகவரியை தனது கணவன் ராகுலிடமிருந்து வாங்கி அவனிடம் கொடுத்தாள் சுஹாசினி.

யுவர் குட் நேம் ???’ என்றபடியே அந்த கார்டை வாங்கிக்கொண்டான் விவேக்.

‘ஐ...ஆம்...... சுஹாசினி..’

‘மிசஸ் சுஹாசினி நாளைக்கு என்னாலே ..’. அவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்க

‘ஹா..சி..னி...’ இடையில் வந்து புகுந்தது அந்த குரல்!!! எல்லாருமே சற்றே திடுக்கிட்டு திரும்பினர். அங்கே நின்றிருந்தாள் ஹரிணி. தான் ஒட்டி வந்த விமானத்தை தரை இறக்கி விட்டு அங்கே வந்து சேர்ந்திருந்தாள் அவள்.

அக்காவை பார்த்து வருடங்கள் ஆகின்றன!!! ஓடி வந்து அவள் கரம் பற்றிக்கொண்டாள் தங்கை.

‘எப்படிக்கா இருக்கே!!!’ தங்கையை பார்த்தது ஒரு ஆனந்த அதிர்ச்சிதான் சுஹாசினிக்கு. கண்கள் கூட நிரம்பிவிட்டன.

சின்னதாய் ஒரு மாற்றம் விவேக்கின் முகத்தில். ‘அக்காவா??? அப்படி என்றால் இவள் ஸ்ரீனிவாசனின் சித்தியா??? சரியா போச்சு..’ சொல்லிக்கொண்டான் தனக்குள்ளே.

நெகிழ்ச்சியான நலம் விசாரிப்புகளும் பேச்சுகளும் அக்காவும் தங்கைக்கும் இடையே தொடர்ந்துக்கொண்டிருக்க, ராகுல் அவர்களையே பார்த்திருந்தான். காலையில் அவனுக்கும் ஹரிணிக்கும் இடையில் நடந்த அந்த சண்டை அவன் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.

‘இவர்தான் ராகுல்’ திருமணம் முடிந்த பதினாலு வருடங்கள் கடந்த பிறகு தனது கணவனை தங்கைக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் சுஹாசினி. ஹரிணியின் முகத்திலும் மாற்றம்தான். ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவனுடன் கைகுலுக்கினாள் அவள்.

‘அங்கிள்... ‘ மெலிதான குரலில் அழைத்தான் ஸ்ரீநிவாசன். ‘இவங்க காலையிலே சண்டை போட்ட ஆன்ட்டி. மாதிரியே இருக்காங்க..’

மெல்ல சிரித்தான் விவேக் ஸ்ரீநிவாசனின் தோள்களை அணைத்துக்கொண்டு கிசுகிசுத்தான் அவன்

‘மாதிரி இல்ல... அவங்களேதான்..’. இப்போது சட்டென அவர்களை நோக்கி திரும்பினாள் ஹரிணி.

‘இவன் எங்கே இவர்களுடன்???’ என்பதை போன்றதொரு பார்வை அவளிடம். அலட்சிய பார்வையுடன் அவர்களிடம் வந்து இரண்டு நொடிகள் விவேக்கின் முகம் ஆராய்ந்தவள் ஸ்ரீநிவாசனிடம் அவசரமாக சொன்னாள்

‘நான் உன் சித்தி தெரியுமாடா???

‘ஓ...’ என்றபடியே விவேக்கிடம் ஏனோ ஒட்டிக்கொண்டான் சிறுவன்.

வெகு இயல்பாக விவேக் சிறுவனின் கேசம் வருட அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை ஹரிணியால். இவன் என் அக்கா மகன் இவன் யார் அவனை அணைத்துக்கொள்ள??? என்ற எண்ணமா??? இல்லை  அவனை அணைத்துக்கொண்டிருப்பது விவேக் என்பதால் மட்டுமா???

விருட்டென அவனை விவேக்கிடமிருந்து பிரித்து இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டாள் ஹரிணி..

‘இவன் எனது குடும்பத்திடம் நெருங்கி வருவதா??? அது நடக்க கூடாது. நடக்க விடமாட்டேன் நான்’ கூவியது அவள் மனம்.

சலனமே இல்லாமல் அவள் முகம் ஊடுருவினான் விவேக். நிச்சயமாய் அவளுடன் மோதிக்கொண்டு நிற்கும் மனநிலை இப்போது இல்லை. இப்போதென்றில்லை அது எப்போதுமே இருந்ததில்லை விவேக்குக்கு.

‘ஒகேடா கண்ணா.. நான் கிளம்பறேன்’ என்றான் ஸ்ரீனிவாசனின் முகம் பார்த்து. ‘மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ்..’ என்றான் புன்னகையுடன்.

‘நாளைக்கு வருவீங்க இல்ல அங்கிள்..’

‘இல்ல ஸ்ரீனிவாசா... வர்றது .. கஷ்டம்... நீ எதிர்பார்த்து டிஸப்பாயின்ட் ஆகாதே..சரியா..’

எது செலுத்தியதோ அவனை ‘அங்கிள்...’ என்றான் சற்றே கடினமான குரலில். ‘ஸ்ரீநிவாசன் சொன்னா கேட்க மாட்டீங்களா அங்கிள்...’ கொஞ்சம் திகைத்தே போனான் விவேக்.

ஸ்ரீநிவாசன் சொன்னதைதானே இத்தனை ஆண்டுகள் கேட்டு இருக்கிறேன் நான்!!!’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.