(Reading time: 16 - 32 minutes)

‘ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன். மாட்டேங்கறார் என்ன பண்ண???’ கொஞ்சம் டைம் கொடு சொல்றேன்..’ அழைப்பை துண்டித்தாள் ஹரணி. உண்மையில் அவரை அதிகம் கட்டாயபடுத்தவில்லை ஹரிணி. இவர் அங்கே வந்து ஒரு வேளை விவேக்கும் அங்கு வந்து அவன் இவரை பார்த்துவிட்டால்???’

னவில் வந்தாலும் அதட்டிவிட்டு போவதுதான் இந்த மனிதரின் வேலை. தாமோதரன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் நான் எங்கேயும் போவதாக இல்லை...’ தனக்குள்ளே மருகிக்கொண்டான் விவேக்.

‘ஸ்ரீனிவாசன் சொன்னா கேட்க மாட்டீங்களா அங்கிள்..’ இப்போது அந்த ஸ்ரீனிவாசனின் வார்த்தைகள் அவன் செவிகளில்.

‘கேட்க மாட்டேன். எந்த ஸ்ரீநிவாசன் சொன்னாலும் கேட்கமாட்டேன்’ சொல்லிக்கொண்டானே  தவிர மெல்ல எழுந்தான் சாய்வு நாற்காலியை விட்டு. கனவேதான் என்றாலும் அப்பா சொன்ன வார்த்தையை எந்த நிலையிலும் அவன் தட்டுவதாக இல்லை.

மதியம் ஒன்றரை மணி. அந்த ஹோட்டல் அறையை விட்டு கிளம்பினாள் ஹரிணி.

‘உங்க பேரன் பிறந்தநாள் பார்டிக்குதான் போறேன். கடைசி தடவையா கேட்கிறேன் வரீங்களா..’ அவர் வர மாட்டார் என அறிந்தேதான் கேட்டாள் அவள்.

‘நான் அஞ்சு மணிக்கு கல்யாண மண்டபத்தில் இருக்கணும். நான் வேறே எங்கேயும் வர மாதிரி இல்ல. நீ தாராளமா போகலாம்’ பதில் வந்தது இறுக்கமாக. நகர்ந்தாள் ஹரிணி.

‘பேரனா??? அவன் எப்படி இருப்பான்???. வடபழனியில்தானே அவர்கள் வீடு என்றாள் ஹரிணி. அங்கே தான் மண்டபமும். ஒரு முறை பார்த்துவிடலாமா அவனை??? என் பேரனை ஒரு முறை பார்த்துவிடலாமா???’ தவிக்க ஆரம்பித்தது தாமோதரனின் உள்ளம்.

அதே நேரத்தில் சிறுவன் ஸ்ரீனிவாசனின் வீட்டின் முன்னால் வந்து நின்றது விவேக்கின் கார். இந்த நாளில் இவன் காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தது வீட்டில் உள்ளவர்களுக்கு கூட ஆச்சரியமே!!!

‘பைத்தியம் ஆக்குகிறார்கள். ஸ்ரீநிவாசன் என்ற பெயர் கொண்ட எல்லாருமே என்னை பைத்தியமாக ஆக்குகிறார்கள். அவர்கள் பின்னாலேயே சுத்த வைக்கிறார்கள். என்ன மந்திரம் இருக்கிறது இவர்களிடத்தில்???” தனக்குத்தானே புலம்பிக்கொண்டே இறங்கினான்.

அழகாய் இருந்தது அவர்கள் வீடு. கை நிறைய பரிசு பொருட்களுடன் உள்ளே நுழைந்தான் விவேக். வீட்டு வாசல் படியிலேயே கன்னத்தில் கை வைத்துக்கொண்டு ஏதோ யோசனையுடன் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் ஸ்ரீனிவாசன். சத்தம் வராமல் அவன் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டான் விவேக். அவனை கவனிக்கவே இல்லை சிறுவன்.

‘என்ன யோசனையாம்.??? ஒரு வேளை எனக்காகத்தான் காத்திருக்கிறானோ???’ புன்னகையுடன் இரண்டு நிமிடங்கள் அவனையே ரசித்திருந்தவன் ரகசியமான குரலில் மெல்ல அழைத்தான் விவேக்.

‘மிஸ்டர் ஸ்ரீனிவாசன்!!!’

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

உங்களை எல்லாம் ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன். கதை மறந்து போயிருக்குமோன்னு முன் கதை கொடுத்திருக்கேன். கதை முதலில் இருந்து படிக்கறவங்க இந்த அத்தியாயம் படிச்சிட்டு ஸ்டோரி லைன் கொஞ்சம் கெஸ் பண்ணிடுவீங்கன்னு நினைக்கிறேன். பார்க்கலாம். அடுத்த வாரம் சஸ்பென்ஸ் ஓபன் பண்ணிடலாம்.

Thanks a lot

 

தொடரும்......

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.