(Reading time: 8 - 16 minutes)

“சரி. சரி.. நீ டிரஸ் மாத்திட்டு வா.. அம்மா தலைய சிக்கெடுத்து கோதி விடுறேன்..” என்று அனுப்பி வைத்தார்.

மலரும் ரெப்ரெஷ் செய்து இரவு உடையில் வந்தவள், தன் அம்மாவிடம் தலையை கொடுத்து விட்டு ஒரு புக் கையில் எடுத்துக் கொண்டாள்.

“ஏன் கண்ணு.. விருந்து நல்லா இருந்ததா?” என்று வள்ளி கேட்க, புத்தகத்தை மூடி வைத்தவள், காலையில் காலேஜ் சென்றதில் ஆரம்பித்து, HOD, வளர்மதி , செந்தில், செழியன் மற்ற ஆசிரியர்கள் என எல்லோர் பேசியது, செந்தில் வீட்டில் வைத்த விருந்து, அதில் செழியன் பங்கு, விருந்து முடிந்த பின்னான அரட்டை, செழியன் பாட்டு, பிறகு திரும்பி வரும்போது செழியனிடம் தான் கேட்ட கேள்வி, அதற்கு அவன் பதில் வரை எல்லாம் சொல்லி முடித்தாள்.

அவள் சொல்ல சொல்ல கேட்டவர், ஒவ்வொரு விஷயத்திலும் எங்கோ ஆரம்பித்தாலும் அது செழியனிடம் மலர் முடிப்பதை உணர்ந்து கொண்டார்.. அவள் நடந்ததை அப்படியே சொன்னாலும் , அதில் செழியன் விஷயம் சொல்லும் போது அவளின் முக பாவம் சற்று கூடுதல் ஈர்ப்பு அவளுக்கு இருக்கிறதோ என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.. ஆனால் தானாக கேட்கவும் அவருக்கு யோசனையே..

அவர் யோசனையோடு “ஏன் மலர்.. ? அவர் கிட்டே உங்க நதியா யாருன்னு கேட்டு இருக்கியே.. ? அத அவர் அதிகப்படி ஆர்வமா நினைக்க மாட்டாரா...? “  என்று வினவ,

“அப்படி எல்லாம் நினைக்க மாட்டார் மா.. எல்லோருமே கிட்ட தட்ட இதே மாதிரி தான் கேட்டாங்க.. என்ன நான் தனியா அவர்கிட்டே கேட்டேன் அவ்வளவு தான்” என்று முடித்தாள்..

பின் வள்ளி “மலர்.. ஆச்சி கொஞ்சம் பேசுறது தான் அதிகமா இருக்கும் தவிர, மற்றபடி மனசு ரொம்ப நல்ல மாதிரி.. அதுனாலே அவங்க கிட்டே கோபபடாமே இரு மா.. அவகளுக்கு நம்மள விட்டா யாரு இருக்கா.. ? அதோட அவுக சொல்றதுலேயும் விஷயம் இருக்கு.. உனக்கே தெரியும்.. நீயே புத்திசாலித்தனமா இருந்துக்கோ.. சரியா?”

“சரிம்மா.. எனக்கும் ஆச்சிய பத்தி தெரியாதா? நான் பார்த்துக்கறேன்.. நீங்க போங்க”

“சரி ..வா சாப்பிடு” என,

இரவு சாப்பாடு வேண்டாம் என்று கூறி விட்டு , ஒரு டம்பளர் மோர் மட்டும் வாங்கி குடித்து விட்டு தன் அறைக்கு சென்றாள் மலர்.. 

இவள் மோர் குடிக்கும் போது ஆச்சி அங்கே இருக்க, அவரை பார்த்து முகத்தை இடித்து விட்டு போனாள்

“பார்த்து...பார்த்து.. இடிக்கிற இடையிலே கழுத்து சுளுக்கிக்க போகுது.. அப்புறம் சுளுக்கெடுக்க என்கிட்டதான் வரணும் தா.. “ என,

மலரோ “ஆச்சி.. உன்னை..” என்று அவர் அருகில் சென்று கழுத்தை நெரிக்க போனவள், பின் தன் கைகளால் கட்டி கொண்டாள்

அவளின் கன்னத்தை வருடியவர் “ஆச்சி .. மேலே கோவமா கண்ணு “

“இல்லை ஆச்சி.. நீ எதுவும் கவலை படாதே .. உன் பேத்தி நானு.. நான் ஜாக்கிரதையா இருப்பேன் .. சரியா “ என,

“சரி ராசாத்தி.. போ.. போய் படு..” என்று அனுப்பி வைத்தார்.

தன் அறைக்கு சென்ற மலர் தூங்க போகும் முன் பாட்டு கேட்கும் வழக்கம் உள்ளவள், இன்று தன் மியூசிக் பிளேயர் ஆன் செய்ய..  அது சரியாக பாடிய பாட்டு “என்னவென்று சொல்வதம்மா.. வஞ்சி அவள் பேரழகை” ..

ஒரு நிமிடம் திடுக்கிட்டவள் , பின் இது எதேச்சியாக நடந்தது என்று உணர்ந்து கொண்டவளாக பாட்டை ரசிக்க ஆரம்பித்தவள், தன்னை அறியாமல் அவளின் எண்ணங்கள் செழியனை நோக்கி சென்றது.. அவள் கண்களில் இப்போது பிரபு, நதியா தெரியவில்லை.. செழியனும் , முகம் தெரியா பெண்ணும் வர, அப்படியே யோசித்துக் கொண்டிருந்தவள் எண்ணத்தில் முகம் தெரியா பெண்ணின் இடத்தில தன் முகம் தெரிய திகைத்து நிமிர்ந்தாள்..

பின் தன் தலையில் தட்டியபடி “இது என்ன ? நம் மூளை போற போக்கு சரி இல்லியே? “ என்று எண்ணமிட்டவள் , பிளேயர் ஆப் செய்து விட்டு தூங்க சென்று விட்டாள்.

றுநாள் காலை எழுந்தவள், அன்றிலிருந்து இவர்களுக்கும் காலேஜ் லீவ் என்பதால், தன் வீட்டில் பாட்டி, அம்மாவோடு அரட்டை அடித்தபடி ஜாலி ஆக இருந்தாள்.

ஒரு வாரம் சென்று இருந்த நிலையில் மறுநாள் செந்தில் கல்யாணம் என்று தன் வீட்டில் சொல்லி, கிளம்ப ஏற்பாடு செய்து விட்டாள்.

முதல் நாள் reception இருக்க, அவள் ஆச்சி நூறு முறை பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தார்.. இன்றைக்கு அவள் அப்பா வீட்டில் இருந்ததால் டிரைவர் ஏற்பாடு செய்து காரில் அனுப்பி வைத்தார்.

செழியன் முன்னாடியே வந்து இருக்க, தன் காலேஜ் சம்பதபட்டவர்களை கவனித்து அனுப்பும் பொறுப்பை செழியனிடம் கொடுத்து இருந்தான் செந்தில்.

செந்தில் அந்த காலேஜ்இல் கிட்டத்தட்ட ஆறு, ஏழு வருடங்களாக வேலை செய்து வருவதால் நிறைய பேரை பாமிலியோடு அழைத்து இருந்தான். மலர் மட்டுமே தனியாக வந்து இருந்தாள்.

செழியன் பெற்றோர் வேறு ஒரு திருமண வரவேற்புக்கு செல்வதால் காலையில் வருவதாக சொல்லி இருந்தார்கள்.

மலர் காரில் வரவும், அவளை அழைத்து சென்று மற்ற ஆசிரியர்களோடு உட்கார வைத்தான் .. அவளை விட்டு தள்ளி வந்த செழியன், “ப்பா.. இவள சாதாரணமா காலேஜ்லே பார்த்தாலே நமக்கு வேலை ஓடாது.. இங்கே இந்த ஸ்பெஷல் அலங்காரத்தில் கண்ணை பறிக்கிறா .. டேய்.. செழியா ..  கண்ட்ரோல் யுவர் ஸெல்ப்..” என்று தன்னை சமன் படுத்திக் கொண்டான்..

அவனின் தவிப்பிற்கு ஏற்றாற்போல் அன்றைக்கு மலர் வைட் காலர் நெக் சுடிதாரில் தேவதை போல் வந்து இருந்தாள்.. இன்றைக்கு எல்லாமே ஆர்டிபிசியல் செட் தான் அணிந்து இருந்தாள்

VKV

செழியன் எண்ணமெல்லாம் “ஐயோ.. இன்னிக்கே இப்படி கொல்றாளே.. நாளைக்கு அலங்கராத்திலே.. நான் காலி தான் போ”

தொடரும்!

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.