(Reading time: 17 - 34 minutes)

அலையின் ஓசையையும், காற்றின் குளுமையையும், மலர்களின் சுகந்தத்தையும், இரவின் ஏகாந்தத்தையும் அவள் எவ்வாறு உணர்ந்து ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாளோ அதே போல் தன் மனதில் வந்து வந்து போய்கொண்டிருந்த இந்த சிந்தனைகளையும் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

வராதே என்று அடைத்து வைத்தால் தான் சிந்தனைகள், நினைவுகள் வந்து தட்டிக் கொண்டே இருக்கும். நீ எப்போது வேண்டுமானாலும் வா. நீ தங்க இங்கே இடம் இல்லை. வந்துவிட்டு போய்விடு. திரும்ப வர விருப்பம் இருந்தால் வா என்று நம் சிந்தனைகளுக்கும், நினைவுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் சுதந்திரம் தந்துவிட்டால் மனதில் அமைதி நிரந்தர வாசியாகி நிம்மதியாக வசித்திருக்கும்.

சற்றே திரும்பி தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்தாள். விழிகள் தாமாகவே அங்கு சோபாவில் உறங்கிக் கொண்டிருந்தவன் மீது படிந்து மீண்டன.

ன்று மாலை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு ஒன்றாக திரும்பி வரும் போது தான் அவளிடம் அந்த விஷயத்தைச் சொன்னான் அவன். எப்போதும் போல ஒரு புன்னகை அவளிடம். அவனாகத் தான் எல்லா விவரங்களையும் அவளிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான்.

அவன் சொல்லும் போதே அவனது மகிழ்ச்சியையும் பூரிப்பையும் ஆழமாக உள்வாங்கினாள். அதை தன் அகத்தில் நிரப்பி முகத்தில் பிரதிபலிக்க அதைக் கண்ட அவன் ஆனந்த கூத்தாடினான்.

அதற்குள் அவள் மொபைல் வைப்ரேஷனில் அதிர அவனது கரத்தைப் பற்றி நிறுத்தியவள் அவன் என்னவென்று கேட்கும் முன்பே மொபைலை செவியில் பொருத்தினாள். 

“ஹலோ சொல்லு ப்ரணவ்”

“.......”

“செஸ்ட் இஞ்சுரியா”

“.......”

“சரி ப்ளட் அரேஞ் செய்திடு. ஆபரேஷன் தியேட்டர் ரெடி செய்ய சொல்லு”

மொபைலை அணைத்து தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்தபடியே பிடித்திருந்த அவனது கரங்களை மருத்துவமனை நோக்கி திருப்பி அவனோடு அவசரமாக விரைந்தாள்.

எமர்ஜன்சி பிரிவின் வாயிலேயே கண்டுகொண்ட ப்ரணவ் ஓடி வந்து எக்ஸ்ரே படத்தை நீட்டினான்.

இவர்கள் பேசிக்கொண்டே நோயாளிடம் செல்ல அதற்குள் அவன் நோயாளியை பரிசோதித்துக் கொண்டிருந்தான்.

டாக்டர் ராவ் அவனது மார்புப் பகுதியை ஸ்கேன் செய்து கொண்டிருந்தார்.

“இட்ஸ் கார்டியாக் ரப்ச்சர் மோஸ்ட்லி லெப்ட் வென்ட்ரிக்கில். ஷிஃப்ட் ஹிம் டு தி ஆபரேஷன் தியேட்டர் அட் ஒன்ஸ்” அவன் சொல்ல அவள் விரைந்து யாருக்கும் காத்திராமல் தானே பேஷன்ட் படுத்திருந்த ட்ராலியை தள்ளவும் அங்கிருத்த சிப்பந்திகள் ஓடோடி வந்து விரைந்து செயல்பட்டனர்.

“சர் சிடி ஸ்கேன் இன்னும் செய்யல” ப்ரணவ் அவனிடம் சொல்ல அவளோ ப்ரணவ்வைப்  பார்த்து முறைத்தாள்.

“ப்ரணவ். திஸ் இஸ் எமர்ஜன்சி. நீ எனக்கு த்ரீ யூனிட்ஸ் ப்ளட் மட்டும் சீக்கிரமா தியேட்டருக்கு அனுப்ப ஏற்பாடு செய்”

அவள் சொல்லிவிட்டு விரைய ஓடு ஓடு என்று அவன் புன்னகையோடு ப்ரணவ்வை அனுப்பி வைத்தான்.

எமர்ஜன்சியில் இருந்து அறுவை சிகிச்சை அரங்கம் வரையிலான அந்த ஐந்து நிமிடத்தில் நோயாளியைப் பற்றிய விவரங்களை ஜூனியர் சர்ஜன் ப்ரவீன்  சொல்லிக் கொண்டே வர இருவரும் தங்கள் மனதிலேயே எப்படி சர்ஜரியை அணுகுவது என்று திட்டமிட்டனர்.

அருகில் இருந்த நகரத்தின் ஓர் தொழிற்சாலையில் இரவு நேரப் பணியில் இருந்த தொழிலாளியின் மீது அதிவேக ரோலர் எதிர்பாராதவிதமாக மோதியதால் அவரின் இடது பக்க நெஞ்சுப் பகுதியில் பலத்த அடி பட்டது.

அதனால் இதய சுவற்றில் ஓர் இடத்தில் விரிசல் ஏற்பட அதிகப்படி குருதி கசிந்து வெளியேற வழியின்றி இதயத்தை அழுத்தவும் அவரது இதயம் பலமிழந்து போயிற்று.

ந்த அறுவை அரங்கத்தில் மானிடரின் பீப் பீப் ஒலி மட்டும் ஒரே சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது.

இப்படி ஒரே சீரான தாளத்தில் கேட்கும் இதயத்துடிப்பின் ஒலி தான் ஒரு கார்டியாக் சர்ஜனுக்கும் அனஸ்தடிஸ்ட்க்கும் தேவ கானம். 

அவன் சர்ஜரி செய்ய துவங்க அவள் நோயாளியின் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருந்தாள்.

அவளை நோக்கி அவன் திரும்ப சர்ஜிகல் கேப் மாஸ்க் அணிந்திருந்தவளின் விழிகளில் தைரியமும் திடமும்.

அவள் மெல்ல இமைகளை மூடித் திறந்து ‘கோ அஹெட்’ என்று அவனுக்கு சங்கேதமாய் சொல்ல இப்போது அவன் விழிகளில் அந்த தீர்க்கமும் திடமும் குடிகொண்டன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.