(Reading time: 17 - 34 minutes)

“எம்.எல்.சி (மெடிக்கோ  லீகல் கேஸ்) ஆக்க வேண்டாம்னு சொன்னார். நான் டாக்டர் மேடமை கேக்காம எதுவும் செய்ய முடியாதுன்னு சொன்னேன். அதான் பார்க்கணும்ன்னு...” ஷிண்டே இழுக்கையிலே இது கொஞ்சம் பிரச்சனையானது என்று அவனுக்குப் புரிந்து போனது.

“சரி அவரை கவுன்சலிங் ரூம்ல உட்கார வைங்க” என்றவன் அன்று  ஐ.சி.யூவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தேவையான ஆணைகளைப் பிறப்பித்து விட்டு வந்திருபவரை சந்திக்க சென்றான்.

பின்னால் இரண்டு ஆட்கள் நிற்க கால் மேல் கால் போட்டு மிகவும் ஆணவத்துடன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்த ரவீந்தர் பாண்டே அவன் அங்கே வந்தும் வணக்கம் தெரிவிக்கமால் அலட்சியப் பார்வை ஒன்றை பார்த்து வைத்தார்.

அவனோ அதை சட்டை செய்யாமல் ஸ்டைலாக சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

“யாரோ மேடமாம். அவங்கள பார்க்க தான் வந்தேன். கூப்பிடு அவங்களை” அதிகாரமாய் பாண்டே சொல்லவும் அருகில் நின்றிருந்த ஹாஸ்பிடல் அலுவலர் இவர் தான் சர்ஜன் என்று கூறவும் அலட்சியப் பார்வை பார்த்து வைத்தார்.

“பார்க்க சின்ன பையனாட்டம் இருக்கான். இவன் டாக்டரா” என்று மனதிற்குள் நினைத்தவர்

“எம்.எல்.சி போட வேண்டாம் டாக்டர். ஃபாக்டரி பிரச்சனை ஆகிடும். மாடில இருந்து கீழ தவறி விழுந்து அடி பட்டதுன்னு எழுதிருங்க ...என்ன” அதிகார செறுக்குடன் ரவீந்தர் பாண்டே சொன்னாலும் பன்மை விகுதியை பயன்படுத்தியே சொன்னார். 

“மிஸ்டர் பாண்டே. உங்க உறவினருக்கு சொந்தமான ஃபாக்டரில இப்படி ஒரு விபத்து நடந்திருக்கு. அது ஆக்சிடன்ட்டா இருந்திருந்தா நீங்க என்கிட்டே வந்து எம்.எல்.சி ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம்னு கேட்டுகிட்டு இருக்க மாட்டீங்க. நீங்க வயசிலும் அனுபவத்திலும் பெரியவர். ஒரு உயிர் விளைமதிப்பில்லாதது. அது எந்த உயிரனாலும் சரி. நியாயப்படி சட்டப்படி என்ன செய்யணுமோ அதை நீங்களே செய்தா நல்லா இருக்கும்” அவன் மிகப் பொறுமையாக மரியாதையோடு அவரிடம் எடுத்துக் கூறினான்.

“இங்க பாரு டாக்டரு. உன்னோட அறிவுரை எல்லாம் எனக்கு தேவையில்ல. ஒழுங்கா நான் சொல்ற படி ரிகார்ட்ல மாத்தி எழுது. இல்லனா...” ரவீந்தர் பாண்டே தனது அரசியல் செல்வாக்கு பின்புலம் பற்றிப் பறைசாற்றி  அவனை மிரட்டிக் கொண்டிருந்தார். 

“மிஸ்டர் ஷிண்டே. எமர்ஜன்சில இருந்து ஐ.சி.யூ வரை எல்லா ரிகார்ட்ஸ்லயும் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. இங்க லோக்கல் போலீஸ் சப்போர்ட் இல்லைனா அஸிச்டன்ட் கமிஷனரை காண்டேக்ட் செய்ங்க. ஜஸ்ட் கோ பை அவர் ப்ரொடோகால்” அவன் ரவீந்தர் பாண்டே மிரட்டலை சட்டை செய்யாமல் நிர்வாக அலுவலரிடம் உத்தரவிட்டு எழுந்து செல்ல முற்பட்டான்.

“ஏய் என்ன நான் சொல்லிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு எழுந்து போற” அவன் செல்லும் வழியை மறித்து நின்றனர் பாண்டே உடன் வந்த இருவர்.

“டாக்டராச்சேன்னு  பார்க்குறேன். இல்லைனா நடக்குறதே வேற” பாண்டே இப்போது மிகுந்த சீற்றத்துடன் மிரட்ட

“இல்லைனா என்ன நடக்கும்” பின்னால் இருந்து ஓர் கம்பீர குரல் ஒலித்தது.

பாண்டேவும் அவரது சகாக்களும் திரும்பிப் பார்க்க அவர்களை ஓர் கை கொண்டு விலக்கியபடி உள்ளே வந்தாள் அவள்.

“என்னாச்சு” அவள் கேட்க அவன் அவளிடம் அனைத்தையும் சொன்னான்.

இவர்கள் இருவரும் பேசும் மொழி புரியாவிட்டாலும் இந்தப் பொண்ணு யாரு இப்படி அதிகாரம் பண்ணுது என்று பார்த்துக் கொண்டிருந்தார் ரவீந்தர் பாண்டே.

“உட்காருங்க மிஸ்டர் பாண்டே...ஏன் நிக்கறீங்க” மேஜை மேலே சற்றே ஒருக்களித்து மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி நிமிர்வாய் கேட்டாள் அவள்.

“நீ.....நீங்க” தானாகவே ஒரு வித மரியாதையை தோன்றியது பாண்டேவிற்கு.

“நான் தான் மருத்துவனையின் தலைமை நிர்வாகி. சொல்லுங்க”

“போலீஸ் கேஸ் எல்லாம் போட வேண்டாம். அப்புறம் நடக்குறதே வேற”

“என்ன நடக்கும் மிஸ்டர் பாண்டே” அவள் சளைக்காமல் பதிலுரைத்தாள்.

“யார்கிட்ட பேசிகிட்டு இருக்கன்னு தெரியாம பேசுறீங்க மேடம்” இப்போது ஆத்திரத்தில் அவர் எச்சரிக்கை விட்டார்.

“ஒரு மனிதரோட பேசிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்” அவள் பதிலுக்கு பதில் கூறவும்

“நீ யார் கிட்ட விளையாடிட்டு இருக்க தெரியுமா. ரவீந்தர் பாண்டே” எச்சரிக்கை கர்ஜனையாய் வர இப்போது அவள் முகத்தில் ஏளன புன்னகை.

“நீங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு உங்களுக்கு தெரியுமா” சொல்லிக்கொண்டே மெல்ல பின் நகர்ந்து அவன் கைகளைப் பற்றி அவனை உடன் நிறுத்தினாள்.

“ஐ ஆம் டாக்டர் ஹரிணி. இவர் டாக்டர் ஹர்ஷவர்தன்” அவள் சொல்ல எதிராளியிடம் இப்போதும் அலட்சியம். அடுத்து அவள் சொன்னதைக் கேட்டு நொடி நேரத்தில் ரவீந்தர் பாண்டே குலைநடுக்கம். ஹர்ஷவர்தன் முகத்திலோ சொல்லவொண்ணாத ஆச்சரியம்.

“ஹர்ஷவர்தன் சிங் ராத்தோர், பிரின்ஸ் ஆப் ராத்தோர் ராயல் பேமிலி, ஜெய்பூர்

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1137}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.