(Reading time: 11 - 21 minutes)

“கண்ணு,உன்னை சொந்த பொண்ணாக பார்த்துப்பேன்னு சொன்னாங்களே எங்க அவங்க?” என்று அவர்உறுமிட,

தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தே விட்டாள்சஹீபா..

யாரோ தனது தலையில் சுத்தியலால் அடித்தது போல வலி எடுத்தது.

கொஞ்சமும் யோசிக்காமல் அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்  புகழ்.

“ஆர்யூ ஒகே? குடிக்க தண்ணி வேணுமாடா?”என்றான். அவன் குரலில் ஒலித்த கனிவை கவனிக்கும் நிலையில் சஹீபா இல்லை.

“என்னால முடியாது..என் அப்பா அம்மா எங்கன்னு இப்போவே எனக்கு தெரியனும் புகழ்”என்றாள்.

அவளின் கண்ணீரை காணப்பிடிக்காதவராய் நடைந்ததை சொன்னார் ரஹீம்.

சில மாதங்களுக்கு முன்!

டும் காய்ச்சலால் அவதியுற்று வீட்டில் இருந்தாள் சஹீபா. அவளின் அன்னைத்தான் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அவளின் உடலுஷ்ணத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

தங்கள் வசிப்பிடத்தில் புயல்காற்று வரும் அபாயம் உண்டெனதொலைக்காட்சியில் செய்திவர என்னதான் செய்வதென்று தெரியாமல் தவித்தார் அவர்.

இப்போதே புயல்காற்றின் சீற்றத்தின் அதிர்வை அவரால் உணரமுடிந்தது. அந்தவேளையில் வீட்டிலிருந்து எங்கோ செல்லபுறப்பட்டார் சஹீபாவின் தந்தை.

“என்னங்க, பொண்ணுக்கு உடம்பு முடியல.. காத்தும் சரி இல்ல..இந்தநேரத்துல எங்க கிளம்பிட்டீங்க?”என்றார் கவலையாய்.

“ நம்ம டேவிட் இல்ல”

“ஆமா”

“நேத்து மீன் பிடிக்க போனவனை இன்னும் காணலம்மா”

“அல்லா!! பாவம் உன் பொண்டாட்டி வேற புள்ளத்தாச்சியா இருக்கே!”

“ஆமாம்மா.. ரொம்ப  அழுதுகிட்டு இருக்கு அந்த பொண்ணு.. அதான் ஆளுக்கு ஒரு பக்கமா அவனை தேடபோறோம்..”

“புயல் காத்து வர்ற மாதிரி இருக்கேங்க?”

“நான் மட்டும் தனியாவா போறேன்? வந்துடுவேன்..”

“ம்ம்ம்” எப்போதும் போலவே சஹீபாவின் அன்னையின் மனதில் பயம் பரவியது. அதை வெளிப்படுத்தி கணவரை சோதிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் வழக்கம் போலவே இயல்பாக பேசினார்.

“சரிங்க.. சீக்கிரமாக தேடி கண்டுபிடிச்சிட்டு வாங்க.. பாப்பாவுக்கு வேற உடம்பு சரியில்ல”

“ அதெல்லாம் பிள்ளையை விட்டுற மாட்டேன்.. நான் வந்துடுறேன்..நீ எனக்காக காத்திருக்க வேண்டாம்..டீவீ பாரு..ரொம்ப புயல்காத்து வர்றாப்புல இருந்தா பக்கத்து ஸ்கூலுக்கு போயிடுங்க!" இது தான் அவளின் தந்தை கடைசியில் மொழிந்துவிட்டு போன வசனம்.

இயற்கை அன்னை பொறுமையானவள் தான். ஆனால், அவள் சீற்றம் கொண்டால் அதை யாரால் தாங்கிட முடியும்? நெகிழி (ப்ளாஸ்டிக்) குப்பைகளை வீசுகிறோம், குப்பைகளை எரிக்கின்றோம், கடலில் அமில கழிவுகளை இரைக்கிறோம். எப்படி சீராமல் இருப்பாள் இயற்கை அன்னை??

கடும் மழை, புயல், கடலில் சீற்றம். மனிதன் அசுத்தமாக்கிவிட்டு செல்வதை அவளே பொங்கி எழுந்து சுத்தம் செய்து விட்டு அமைதியாகிறாள். அவளின் சீற்றத்திற்கு பலியானவர்கள் தான் சஹீபாவின் பெற்றோர்.

நடந்ததை சொல்லி முடித்தார் ரஹீம்

"உனக்கும் தலைல அடிப்பட்டு எதுவுமே ஞாபகம் இல்லாம போச்சுமா... அந்த நிலையில் உனக்கு நடந்ததும் கடவுளின் கருணைனு தோணிச்சு. வெள்ளத்துல கஷ்டப்பட்டவங்களுக்கு உதவி செய்ய தான் உன்னை தத்தெடுத்தவங்க வந்தாங்க. ! அவங்க மகளை சின்ன வயசுல இழந்துட்டாங்க! நீ அவங்களுக்கு மகளாகனும் னு நினைச்சாங்க. இது கடவுள் உனக்கு தந்த லைப் னு நெனச்சு நாங்களும் அனுப்பி வெச்சோம்!".

அழுவதற்கும் கண்ணீரின்றி அமர்ந்திருந்தாள் சஹீபா.

பிருந்தாவனம் இல்லம் !

சாலை நெரிசல்கள் இல்லாத, காற்றுத்தூய்மை கேடு இல்லாத, இயற்கை அன்னை ஆட்சிபுரியும் அழகிய இல்லம். கொஞ்சும் மழலை மொழிக்கு பஞ்சமில்லா இடம்.

அதிகம் கார்கள் பயணிக்காத அப்பாதையில் தன் காரை நிறுத்தினான் தமிழ். எத்தனை இறுக்கமான பாவத்துடன் இருந்தாலும் பிருந்தாவனத்தில் கால் பதித்து விட்டால் கோகுல கண்ணனாய் மாறிவிடுவான் அவன்.

வழக்கம்போலவே அவன் காரை கண்டு கொண்ட சிறுவர்கள் "ஹேய் தமிழண்ணா, வந்தாச்சு!" என ஆர்ப்பரித்தனர்.

"எப்படி இருக்கீங்க செல்லம்ஸ்"  மின்னல்போல புன்னகை ஒன்றை உதிர்க்கவும் இன்னும் அழகாகினான் தமிழ். தன்னை சூழ்ந்து கொண்ட அனைவரையும் அணைத்து அவன் கதை பேச,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.