(Reading time: 40 - 79 minutes)

அதன் பின்னர் நிச்சயதார்த்த நிகழ்வுகளில் அவன் இலகு மன நிலையோடு கலந்துக் கொண்டதைப் பார்த்த போது தான் அவனுக்கு விபரம் தெரிவித்தது மிக நல்லதாயிற்று. இல்லையென்றால் அவன் இன்னும் மன அழுத்தத்தோடு இருந்திருப்பான். இன்றைய நிகழ்வை பதட்டத்தோடு அணுகி இருப்பான் என தோன்றியது.

மகளுக்கு மிக பொருத்தமான, அன்பான இணை அமைந்தது அவருக்கு நிறைவே.

என்னாச்சு ஒரே யோசனை என்றவாறு அருகமர்ந்து புன்னகைத்த சாராவைப் பார்த்து தன் எண்ணங்கள் களைந்து புன்னகைத்தார் அவர்.

“டாட்டா டம்பி அவன் காரை இங்க விட்டுப் பொயிட்டான் பாருங்க, என

இவ ஒருத்தி டாட்டா பிர்லான்னுட்டு என பேத்தியை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சியவர்,

“நாம அங்க போகும் போது தம்பி காரை கொடுத்திடுவோம் சரியா” எனச் சொல்ல அவர்களை துன்புறுத்தும் வண்ணம் வந்திருந்த காலம் மகிழ்வான காலமாக மாறி கடந்தது.

உக்கு 

வீட்டிற்கு வந்த மகன் , மருமகளை கண் திருஷ்டி எடுப்பதாக கையால் சுற்றி நெட்டி முறித்தார் இந்திரா. என் பிள்ளைகள் ஜோடி எவ்வளவு நல்லாயிருக்கு. எல்லோர் கண்ணும் பட்டிருக்கும் என்றார். சேலை மாற்ற முதலாக சென்ற அனிக்கா கதவை தாளிடும் முன் உள்ளே வந்தான் ரூபன்.

அந்த ரகசிய கப்போர்டின் முன் நின்று தன் புதுச் சேலையில் தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அவள் முன்பு நீண்டது ரூபன் கரம். கையில் ஒரு சாவி, 

"இது உன் கப்போர்ட் அனி, உன் பொருளெல்லாம் வச்சுக்க" என்றவன் நிற்க ,

இந்த ட்விஸ்டை எதிர்பார்க்காதவள் ஆர்வமாய் கதவை திறந்தாள். ஏற்கெனவே, பாதி கப்போர்ட் நிரம்பி இருந்தது. சின்ன சின்னதாய் கீ செயின், குட்டி பொம்மை போன்றவை நிறைய ஒரு பக்கம் இருக்க, ம்சேக்லை அப் பாக்ஸ், துணி மணிகள் புத்தம் புது மெருகு குலையாமல் இருந்தது. லாக்கரின் உள்ளே ஒரு சில குட்டி அழகு மோதிரங்களும் இருந்தன.

பிடிச்சிருக்கா? என்றவனின் ஆர்வம் பார்த்து பேச்செழாமல் நிற்க,

இதெல்லாம் ஒவ்வொரு முறையும் உனக்காக வாங்கினது அனி, மேக் அப் பாக்ஸ் ஃபாரின்லருந்து வர்றப்போ வாங்கினது. ஒவ்வொரு பர்த்டேக்கும் வாங்குவேன். எங்க வெளில ட்ராவல் பண்ணாலும் அங்க உனக்காக எதையாவது வாங்கச் சொல்லும். உனக்கு கொடுக்கறதுக்கு தயக்கமா இருக்கும். என்னன்னு சொல்லி கொடுக்கிறதுன்னு புரியாம சேர்ந்துட்டே போச்சு. 

என் கப்போர்ட் அடிக்கடி ஜீவன் திறப்பான்,அவனுக்கு தெரியாம எப்படி ஒளிச்சு வைக்கன்னு யோசிச்சதில ஒரு கப்போர்ட் வாங்கி உன்னோட எல்லா திங்க்ஸிம் வச்சுட்டேன். ஜீவனுக்கு இதில என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசை என்றவன் சிரித்தான்.

பதிலே எழாமல் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் அவள். உன் அன்பெல்லாம் பெரிதல்ல என அவனுடைய அன்பு அவளை புது புது பரிமாணங்களில் மிரட்டிக் கொண்டிருந்தது. இருவரில் யார் யாரை அதிகமாய் அன்பு செய்கிறார் என்பதை கணிக்க இயலாமல் அங்கே தராசு மாறி மாறி தாழ்ந்து எழுந்துக் கொண்டிருந்தது. 

ரூபன் அனிக்காவிற்கான திருமண பரிசாக கிறிஸ் வெளி நாட்டு ஹனிமூன் பேக்கேஜை இருக்க, இப்போது நிறைய வேலையிருக்கே என தவிர்க்க நினைத்த அண்ணனை சரிக்கட்டி அனுப்பினான் ஜீவன். ஒரு மாத காலம் தெவிட்டாமல் தனிமையில் காதல் செய்தவர்கள், நாடு திரும்பியதும் மும்முரமாக வேலையில் ஈடுபடலானான்.

ஜீவனின் ஃபேக்டரி வேலைகள் ஆரம்பித்து விட்டிருந்தன. ஆரம்ப கட்டம் என்பதால் நிறைய உழைப்பை விழுங்கிக் கொண்டு இருந்தது. அண்ணனும் தம்பியும் இரண்டு ஃபேக்டரிகள் வேலைகளையும் தீயாய் வேலை செய்து கவனித்துக் கொண்டனர். அனிக்கா கூட இருந்து வேலைகளை கவனித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாலும் அவனால் அவளை ஃபேக்டரிக்கு வா என்று சொல்ல முடியவில்லை. மனைவியைக் கொண்டு காரியம் சாதிக்க நினைப்பவனா அவன்? அது அவனது சுயமரியாதை அடிப்பட்ட விஷயமல்லவா?

மாதங்களாகின மகளை மதியம் ஒருமுறைப் போய் சந்திப்பது தாமஸின் வழக்கமாக இருந்தது, பல நாட்கள் அப்பாவோடு தொற்றிக் கொண்டு அவளும் தன் தாய் வீடு சென்று வருவாள். அன்றும் அப்போதுதான் சாப்பிட்டவர் நடைக்கு நடையும் ஆயிற்று, மகளைப் பார்த்தார் போலவும் ஆயிற்று என்று புறப்பட்டார்.

ஏதோ வேலையாக வீட்டிற்கு மதியம் வந்தவன் கட்டிலில் உட்கார்ந்து பேப்பர்களை சரிப்பார்த்துக் கொண்டிருக்க, அருகில் குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தவள் பக்கத்தில் கணவனைப் பார்த்து உற்சாகமாகி அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் தலையை வருடியவன் தன் வேலையை சரி பார்க்க ஆரம்பித்தான்.

அத்தான் சாப்பிட்டீங்களா?

ம்ம்…நீ……..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.