“எப்ப பார்த்தாலும் ஒரு சின்னபபையனையே எல்லோரும் அடிக்க துரத்துறது கொஞ்சம் கூட நல்லாயில்லை சொல்லிட்டேன்” என வடிவேலு பானியில் பேசி கலகலக்க வைத்தான்.
ஜாக்குலினும் தம்பிக்கு சப்போர்ட்டுக்கு வந்தாள்.
இப்ப என்ன என் தம்பி தப்பா சொல்லிட்டான், போங்க போய் ஆகற வேலையை பாருங்க என்று கிண்டலடித்தாள்.
போட்டோ கிராபரை ஏற்பாடு செய்திருக்க அழகழகான தருணங்களை படத்திற்க்குள் சேகரித்தனர்.
அனைவரையும் குடும்பமாக இணைந்து போட்டோ எடுக்க ஆயத்தமாக ப்ரீதா பெற்றோர்களும், திவ்யா பெற்றோர்களும் கூட அமர,தாமஸ் சாராமற்றும் ராஜ் இந்திரா அமர்ந்தனர். அவர்களுக்கு பின்னே கிறிஸ்ஸிம் பிரபாவும் நிற்க, அடுத்து ஜாக்குலின் கணவரோடு நிற்க, அதை அடுத்து தீபன் ப்ரீதாவும், அதன் பின் ரூபன் அனிக்காவும், அடுத்து ஜீவன் நிற்க வெட்கத்தில் தயங்கியே திவ்யா அவனருகில் வந்து நின்றாள். பிரின்ஸ், ஹனி மற்றும் ராபின் தரையில் ஸ்டைலாக முட்டிக்கால் போட்டு நின்று போஸ் கொடுத்தனர்.
க்ளிக் , க்ளிக், க்ளிக் மனமகிழ்ச்சியான அத்தருணமும் நிழல்படமாய் பதிந்தது. குடும்பம் ஒரு கதம்பமாய் அன்பின் வெளிப்பாடு ஒவ்வொருவர் முகத்திலும் நிறைவைத் தந்தது.
நிகழ்ச்சிகள் நிறைவுற அனைவரும் புறப்பட, பால்காய்ப்பு அன்னிக்கே அங்க வரவேண்டாம், ரெண்டு நாள் உங்க வீட்ல தங்கிட்டு ஆற அமர வாங்க என்றுச் சொல்லி விடைப்பெற்றார்.
ஒன்றுமே வேலைச் செய்யாவிடினும் ஜீனியர் ரூபன் வரவால் களைப்பாய் உணர்ந்தவள் சீக்கிரமே உறங்கி விட, வழக்கம் போல அவள் கணவன் அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதிகாலை சூரியன் புலராத சுகமாய் மென் காற்று தாலாட்டும் நேரம், சுற்றியும் இயற்கை சூழல் இருந்த இடத்தில் அவர்கள் வீடு அமர்ந்திருந்ததால் காற்றிற்கு அங்கு பஞ்சமில்லை.
சீக்கிரமே விழிப்பு வந்த அனிக்கா அந்த பொழுதின் ரம்யத்தை ரசித்தவளாய் லயித்திருக்க அவள் வயிற்றில் மென்மையாய் அவன் கரம் படர்ந்தது.
என்ன செய்றீங்க மம்மி……
நான் உங்களுக்கு மம்மியா? கையை கிள்ளினாள். என் பிள்ளைக்கு இப்பவே உன்னை எப்படி கூப்பிடணும்னு சொல்லிக் கொடுக்கிறேன்.
அப்படின்னா நீங்க ஒழுங்கா மரியாதையா அம்மான்னு சொல்லி கொடுங்க……
சரி சரி என்றவன்.
என்ன சீக்கிரம் முழிச்சிட்டியா? ஏன் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியதுதானே?
நல்லா தூங்கி எழுந்துட்டேன் அத்தான்.இன்னிக்கு காலை எவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்கு. சூப்பர் இடம், வீடும் ரொம்ப அழகாயிருக்கு அத்தான்.
பரவால்லியே என் பொண்டாட்டி கிட்டருந்து பாராட்டு கிடைச்சுட்டு , ஹப்பா…..
ரொம்பதான் சலிச்சுக்கிறீங்க….
பின்ன அந்த வீட்டிலயே இருக்கணும்னு சொன்னவ தான நீ…
அது அத்தை மாமாவுக்காக
அதான் ப்ரைவசி வேணும்னு அப்பாவே சொல்லிட்டாங்களே… சிரித்து வைக்க
ச்சீ அத்தான் அவங்க விளையாட்டா சொன்னா நீங்களுமா, உங்களுக்கு ரெண்டு அடி போட்டாதான் சரி வருவீங்க.
அதான் தினம் என்னை அடிக்கிறியே, போலியாய் அழுவது போல நடித்து முறைப்பை வாங்கினான்.
நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அனி, எல்லாத்துக்கும் நீ தான் காரணம், நீ என் லைஃப்ல வந்தது தான் காரணம் அவள் கைகளைப் பற்றி முத்தமிட்டான். தன் மேல் கொண்ட அன்பால் தன்னை நித்தமும் அரவணைக்கும், தனக்காய் பார்த்து பார்த்துச் செயல்படும் கணவன் அன்பு அவளை உருக்கிற்று. எல்லாம் செய்து விட்டு அவன் அன்பில் முக்குளிக்கும் அவளை, ஆண் என்னும் அகங்காரம் இல்லாதவனாக தன்னை தாழ்த்திக் கோண்டு அவளே எல்லாம் போல சரணடைபவனைப் பார்க்கும் அவளுக்கு இனி வாழ்வில் வேறொன்றும் தேவையில்லை என தோன்றலாயிற்று.
அப்படியா என்றவள் அவனளவுக்கு சொல்லால் தன் காதலை வெளிப்படுத்த தெரியாததால்,அவன் புறம் திரும்பி அவன் முகம் பார்த்து கைகளை அவன் தோள் மேல் மாலையாய் போட்டு அவனைப் பார்த்து சிரித்தவள் அவன் நெஞ்சம் சாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள். வார்த்தையால் மட்டுமல்ல வாழ்க்கையால் நிரூபிப்பதல்லவா காதல். இருவரும் நொடிப் பொழுதும் வீணாக்காமல் தங்கள் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்த மறக்கவில்லை.
என் சொந்தம் நீ
என் பந்தம் நீ
என் உணர்வுகள் நீ
என் உயிரும் நீ
என் வாழ்வும் நீ
எனை ஆள்பவள் நீ
மனிதரை அமரராக்கும்
அமிழ்தின்
உருவோ, சுவையோ,
வடிவோ எதுவும்
நான் அறிந்திலேன்.
ஆனால், எனை உயிர்ப்புடன்
வாழ வைக்கும்
அன்பும், அழகும், கனிவின் உருவே- என்
அமிழ்தினும் இனியவளே
நீ எனது இன்னுயிர் என்பதை
நான் அறிவேன்.
அன்பு தோழமைகளே , இந்த தொடர் எழுத வாய்ப்பளித்த சில்ஜீக்கும், இந்த கதை ஆரம்பிக்கும் போது எனக்கு கூட என் மேல் இல்லாத அளவு நம்பிக்கையை என் மேல் வைத்து பாராட்டி ஊக்கப் படுத்திய அனைவருக்கும் அன்பான நன்றிகள்.
நிறைவுற்றது
{kunena_discuss:970}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.