(Reading time: 9 - 18 minutes)

ருவரும் கீழே சென்றதும், தேவையானவற்றை எடுத்து பையில் வைத்தவன், பின் அலைபேசியில் இளங்கோவை அழைத்தான்…

“ஹலோ.. சொல்லுங்க துஷ்யந்த்..”

“இளங்கோ… கல்யாணத்துல நடந்ததெல்லாம் கங்காக்கிட்ட சொன்னியா..??”

“ம்ம் சொன்னேன் துஷ்யந்த்… கல்யாணம் நின்னது மேடம்க்கு கொஞ்சம் ஷாக் தான்… எதனாலன்னு ரீஸன் கேட்டா… உன்னை தவிர, வேற எந்தப் பொண்ணையும் அவரால ஏத்துக்க முடியாதாம்… கடைசி நிமிஷத்துல தெளிவா ஒரு முடிவெடுத்துட்டாருன்னு சொல்லிட்டேன்…”

“நைட் நான் அங்க வந்ததை சொல்லல்ல..”

“இல்ல துஷ்யந்த் சொல்லல..”

“அப்புறம் இளங்கோ… நான் கொஞ்ச நாள் குன்னூர்ல ஸ்டே பண்லாம்னு இருக்கேன்… இந்த கல்யாணம் நின்னதைப் பத்தி கங்கா என்கிட்ட காரணம் கேட்டா, எனக்கு சொல்ல முடியாது… அதுவுமில்லாம எனக்கு அங்கப் போகனும்னு தோனுது… அதான் கொஞ்ச நாள் அங்க இருக்கலாம்னு முடிவு செஞ்சுருக்கேன்… நீயும் வாணி அக்காவும் தான் கங்காவை நல்லாப் பார்த்துக்கனும்… சரியா..??”

“இதை நீங்க சொல்லனுமா துஷ்யந்த்… நாங்க கங்காவை பத்திரமா பார்த்துக்கறோம்… நீங்க பத்திரமா போயிட்டு வாங்க… உங்களுக்கும் கொஞ்சம் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும்..”

“சரி இளங்கோ… ஏதாச்சும் முக்கியம்னா எனக்கு போன் பண்ணு..” என்றவன், அலைபேசியை அணைத்தான்..

இந்த திருமண விஷயத்தில் தன் அன்னையை கூட சமாதானம் செய்தவனால், கங்காவை சமாதானம் செய்ய முடியும் என்று தோன்றவில்லை… உனக்காக தான் என்று அவளிடம் வெளிப்படையாக சொல்ல முடியாது… தான் தான் காரணம் என்றறிந்தால், அதற்கு அவள் எப்படி நடந்துக் கொள்வாள் என்றும் தெரியவில்லை… அதனாலேயே சிறிதுக்காலம் அவன் குன்னூர் செல்ல முடிவெடுத்தான்…

குன்னூர் செல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது… நேற்று இரவு துஷ்யந்திற்கு மறக்க முடியாத இரவு… கங்காவின் மனது அவனுக்கு புரிந்த இரவு அது, என்றும் சொல்லலாம்… அந்த சந்தோஷத்தை கங்காவிடம் நேரடியாக காட்டவும் முடியாது… அதனாலேயே கங்காவுடன் கழித்த நாட்களை நினைத்து மகிழவே, அவனுக்கு குன்னூர் செல்ல வேண்டும் என்று தோன்றியது… அதற்காகவே அவன் குன்னூர் செல்ல முடிவெடுத்தான்…

பூஜை முடிந்து இரவு சாப்பாடும் முடிந்தது… எல்லோரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு துஷ்யந்த் சென்றான்… அடுத்து சாந்தி முகூர்த்ததிற்கான சம்பிரதாயங்களை செய்ய வேண்டுமென்று மல்லிகா கூறினார்.. கல்யாணம் நடந்த சூழலை மனதில் நிறுத்தி, அந்த சம்பிரதாயங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கோமதி கூறினார்… ஆனால் நடக்கவேண்டியவைகளை உடனுக்குடன் நடத்திட வேண்டும் என்று மல்லிகா கூறியதால், கோமதியும் அதை ஏற்றுக் கொண்டு, நடக்க வேண்டியவைகளை பார்த்தனர்…

காய்ச்சல் காலையிலேயே சரியாகி இருந்தாலும், இரண்டு நாட்கள் மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டுமென்பதால், கங்காவிற்கு இரவு உணவை சீக்கிரம் கொடுத்து, கங்காவை உறங்கும்படி கூறிவிட்டு, வாணி வேலைகளை கவனிக்க தொடங்கினார்…

ஆனால் அவளுக்கு தான் தூக்கம் வரவில்லை… இவ்வளவு தூரம் வந்து, துஷ்யந்த் திருமணத்தை நிறுத்தியதை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை…

துஷ்யந்த் திருமணத்தை நிறுத்திய காரணத்தை இளங்கோ கூறியிருந்தாலும், அது மட்டுமே காரணமாக இருக்கும் என்று கங்காவால் நினைக்க முடியவில்லை…

காலையில் எழுந்தப் போதே, துஷ்யந்த் தன்னருகில் இருந்ததுப் போல் உணர்ந்தது கனவென்று அவள் நினைத்தாள்… ஆனால் நடந்ததையெல்லாம் பார்த்தால், அது நிஜமோ என்று அவளுக்கு தோன்றுகிறது… தன் மனதை எப்போதும் துஷ்யந்திடம் வெளிக்காட்டக் கூடாது என்று இவள் உறுதியாக இருந்தாள்… இப்போதோ அவளை அறியாமலேயே தன் மனதை துஷ்யந்திடம் வெளிப்படுத்திவிட்டாளோ….?

இரவு துஷ்யந்த் வந்தானா..?? என்று இவளால் வாணியிடம் வெளிப்படையாக் கேட்க முடியவில்லை… அவராகவும் உண்மையை வெளிப்படுத்தவும் மாட்டார்… எதனால் துஷ்யந்த் இப்படி ஒரு முடிவெடுத்தான்… புரியவில்லை அவளுக்கு…

இந்த ஆறு வருடத்தில் அவளாகவே துஷ்யந்தை விட்டு விலக நினைத்தாலும் முடியவில்லை… சரி அவனுக்கு திருமணம் நடந்தாலாவது அவனாக விலகுவான் என்று எதிர்பார்த்திருந்தாள்… அதுவும் நடக்கவில்லை… இப்படியே தான் இவர்கள் உறவு தொடரப் போகிறதா..?? இதற்கு முடிவு என்று ஒன்று இல்லையா..?? மனதில் தோன்றும் கேள்விகளுக்கு பதில் தான் தெரியவில்லை.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.