(Reading time: 13 - 25 minutes)

என் பொண்ணு நல்லா ரேஸ் குதிரை மாதிரி வளாந்துருக்காத்தான்.. ஆனா அதுக்காக இவ்வளவு உலர் கொட்டையும் பழமும் அதிகமுங்க.. போதும்.. பாப்பா பீப்பா ஆகுற மாதிரி இருக்குங்க.. இனி இதை விட்டுடுங்க..", என்று மிரட்டலில் ஆரம்பித்துக் கெஞ்சலில் முடித்தாள் தமயந்தி..

மனைவியின் ஆதங்கம் அவருக்கும் புரியத்தான் செய்தது.. ஆனாலும் ஒரே குழந்தை.. அதிலும் தமயந்திக்கு எவ்வளவோ உடல் உபாதைகள் வந்து.. சிரமப்பட்டு உயிரைப் பணயம் வைத்துக் குறைப் பிரசவத்தில் பிறந்த ஒற்றைக் குழந்தை.. இரண்டாவது பெற்றுக்கொள்ளத் தமயந்தியின் உடல்நலம் ஒத்துக்கொள்ளவில்லை என்பதைவிட அவளால் இனி இன்னொரு குழந்தைக்குத் தாயாக முடியாது என்றுவிட்டனர் மருத்துவர்கள்.. அதனாலேயே அவரின் கண்ணின் கண்மணியான அவர் மகளுக்கு எல்லாமே பெஸ்டாகத் தர வேண்டும் என்பதே அவர் விருப்பம்.

"அப்படிச் சொல்லாதேடி.. தாய்க் கண்ணோ.. பேய்க் கண்ணோன்னு சொல்லுவாங்க.. குழந்தைப் பாவம்டி.. குறைமாசத்திலே நோஞ்சானாகப் பிறந்தது.. அதை நல்லா தேத்த வேணாமாடி?..", என்று அப்பாவியாய் மனைவியைக் கேட்டார்.

"ம்ம்.. தேத்துவீங்கத் தேத்துவீங்க.. அதான் ஊரே கைகொட்டிச் சிரிச்சுதே.. நீங்க ஒரு வயசுக் குழந்தைக்கு நாலு இட்டிலி ஊட்டியதைப் பார்த்து.. அதுலே அந்தக் குட்டி.. இட்டிலிக்குக் காரப்பொடியும், நெய்யும் போட்டு விழுங்குச்சு.. எங்கம்மால்லாம் பயந்தே போயிட்டாங்க.. இது நல்லதுக்கு இல்லைடி.. உன் புருஷன் நாலே நாலில் நாலு கிலோ எடை ஏத்திவிட்டுடுவார்னு.. பொண்ணுங்கன்னா நல்லா கொடி மாதிரி இருக்கணுங்க.. அப்போத்தாங்க நல்ல கம்பீரமா இருக்கிற ஆண்கூடக் கொடி மாதிரிப் பொண்ணு நின்னாக்கா அழகாத் தெரியும்..", என்று மீண்டும் புலம்பத் தொடங்கினாள்..

"ஏய் நிறுத்துடி.. என்ன விட்டா என் பொண்ணை நல்லா குண்டோதரிக் கணக்காப் பேசுறே.. யாருடிப் பொண்ணுங்கக் கொடி மாதிரி இருக்கணும்னு சொன்னாங்க.. அவளுக்கென்னடி ராஜாத்தி.. நல்லா வளர்த்தியாக் கொஞ்சம் பூசினா போல இருக்கா.. அவ்வளவுதான்.. அதுக்குப் போயி இப்படிச் சொல்லுறீயே குழந்தையை.." என்றதுதான் தாமதம்..

"ஆமாம் சொல்லமாட்டீங்க.. கொஞ்சம் பூசினா மாதிரியில்லை.. கொஞ்சம் பூசணிக்கா மாதிரின்னு சொன்னாக் கூடப் பொருத்தமாத்தான் இருக்கும்.. இந்த மாதிரிப் பொண்ணை அண்டா குண்டா சைசில் வளர்த்தா நாளை பின்னே எவன் கட்டுவான் இவளை.. ஏற்கனவே நீங்க வீட்டோட மாப்பிள்ளைத் தான் வேணுமின்னு கண்டிஷன் வேற வெச்சிருக்கீங்க.. வயிறுப் பிசையுதுங்க.. நல்லா வெண்ணை உருண்டைமாதிரிதான் இருக்கா.. ஆனா கொஞ்சம் நல்லா இளைச்சா அழகாத்தான் இருக்குங்க.. இல்லாட்டி வீட்டோடத்தான் நம்மப் பொண்ணு இருக்கும்..", என்று புலம்பியபடி இருக்கும் போதே..

புயல் மாதிரி வேகமாய் நீனா ரிக்கி பெர்ஃபியும் மணக்கக் கிச்சனில் நுழைந்தாள் சண்முகசுந்தரி.. நம் நாயகி..

ஐந்தடி எழு அங்குலம்.. சந்தன நிறத்தில், அழகிய முக வடிவுடன் லட்சணமாய், கொஞ்சம் பூசினாற் போல் உடம்பில் லேசாய் ஹன்சிகா மோட்வானி ஜாடையில் கொஞ்சம் அழாகாய்த்தான் இருந்தாள்..

"ஹாய் டாட் மாம்.. குட் மார்னிங்க்.. காலையிலேயே என்ன வெட்டிப் பஞ்சாயத்து.. நம்ம க்வின் மேரீஸ் க்வீன் என்ன சொல்லறாங்க, ", என்று தன் தாயை ஜாடையாய்ப் பார்த்தாள்..

ஆம்.. தமயந்தி அந்தக் காலத்திலேயே அதாவது முப்பது வருடம் முன்னமே ஸ்டெல்லா மேரீஸ் காலேஜின் எம்.எஸ்.ஸி கணிதம் படித்தவள்.. தாயே எம்.எஸ்.ஸி என்றால்.. மகள் நிச்சயம் அதை விட என்று நினைத்துவிட வேண்டாம்.. இவள் பி.ஏ. ஹிஸ்டரி.. கடைசி வருடம்தான், வயது கிட்டதட்ட 22 ஆகிறது.. குழந்தைக் குழந்தை என்று ஒருவருடம் பள்ளிக்கு அனுப்பாமல் ஐந்து வயதில் பள்ளியில் சேர்த்துவிட்டார் ஜெயராமன்.. படிப்பில் வெகு சுமார்.. இந்தக் காலேஜ் அட்மிஷனே.. அவருக்கு நாக்குத் தள்ளிப் போய் விட்டது வாங்குவதற்குள்.

"அவக் கிடக்கா.. விடுடா தங்கம்.. இந்தாங்க இந்த பாதாமைச் சாப்பிடுங்க..", என்று அவள் வாயில் ஊட்டி விட்டார்.

"ஸ்வீட் டாடி..", என்று தந்தையின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள் மகள்

"ஏய் நான் கி யூ எம். சி இல்லைடி.. ஸ்டெல்லாடி.. எத்தனை முறைச் சொல்லுறது.."

தந்தை ஊட்டிய பாதாமை அலட்சியமாய் மென்றபடித் தாயை நக்கலாய்ப் பார்த்தவள்.." மா.. ஏதோ ஒன்னு.. இது கொஞ்சம் ரைமிங்கா இருக்குன்னு ஸ்டெல்லா க்குப் பதிலா குயின் போட்டேன்.. எப்படியோ மேரி சேம் தானே.. என்னமோ ஸ்டெல்லாவிலே ஸ்டைலா இருந்த மாதிரி.. சரியான விளக்கெண்ணெய்..", என்று கிண்டலடித்தாள்.

"இருக்கும்டி இருக்கும்.. ஆளையும் மூஞ்சையும் பாரு.. நல்லாப் பவுடர் போட்டப் பூசனிக்கா மாதிரி.. எதுக்குடி இவ்வளவு மேக்கப்.. அதுவும் இந்தப் பிங்க் லிப்ஸ்டிக் வேற.. எதுக்குடி இந்த ஓவர் மேக்கப்.. காலேஜுக்கு படிக்கத்தானே போறீங்க.. இப்படி ஏதோ முன்ன தெருக்கூத்துக்குத்தான் ஓவரா மேக்கப் போடுவாங்க.. கதகளி டான்ஸ்காரி மாதிரி.. மாதிரி என்ன அப்படித்தான் இருக்கு.." என்றாள் தமயந்தி

அவளுக்கும் பெருமைதான் தன் பெண்ணுக்குத் துளி லேசாய்ப் பவுடர் போட்டாலே போதும்.. கலர் ஆளைத் தூக்கும்.. அப்படி ஒரு அழகு நிறம்.. அதுவே போதும் இன்னமும் வேறு அதை மேலே எடுத்துக் காட்டும் விதமாய் மேக்கப் என்றால்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.