(Reading time: 12 - 24 minutes)

"தேங்க்யூ!"-என்றவன அந்தத் தொகுப்பினை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.அவனது அந்த உதாசீனம் முதல்முறையாக அவளை கவலைக்கொள்ள வைத்தது.

"பார்த்துக்கா!மெதுவா நடங்க!"-மாயாவை மெல்ல தாங்கியப்படி அவளை நடக்க வைத்தாள் மித்ரா.ஒவ்வொரு அடியிலும் கால்கள் அதீத வலி அளித்தன.

"அக்கா!ரொம்ப வலிக்குதா?"-மித்ராவின் நேசம் மாயாவின் வலிகளுக்கு மருந்தாய் அமைந்தன.

"அர்ஜூன் ரொம்ப லக்கி மித்ரா!தனக்காக யோசிக்காம தன்னை சார்ந்து இருக்கிறவங்களுக்காக யோசிக்கிற மனசு பெரிய வரம்!"-அங்கு அமர்ந்து தன் மடிக்கணினியில் ஏதோ செய்துக்கொண்டிருந்த ருத்ராவின் ஏளனப் பார்வை ஒருமுறை மாயாவை தாக்கியது.அவள் அவனை பார்க்க,மீண்டும் தன் பணியில் கவனம் பதித்தான் ராணா.

"ஐயயோ!பாட்டிக்கு மாத்திரை கொடுக்க மறந்துட்டேன்!"-நினைவு வந்தவளாய் கூறினாள் மித்ரா.

"போய் கொடுத்துட்டு வா!"

"நீங்க எப்படி?ம்...மாமா கொஞ்சம் இங்கே வாங்களேன்!"-அவன் நானா என்பது போல பார்த்தான்.

"வாங்க மாமா!"-மௌனமாக எழுந்து வந்தான் அவன்.

"அக்காவை கொஞ்சம் அவங்க ரூமுக்கு கூட்டிட்டுப் போறீங்களா?"

"பரவாயில்லை மித்ரா!நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்!"-அவசரமாக தடுத்தாள் மாயா.

"இல்லைக்கா!மாமா சும்மா தான் இருக்காரு!மாமா நீங்க கூட்டிட்டுப் போங்க மாமா!நான் பாட்டிக்கு மருந்து கொடுக்கணும்!"-என்று மாயாவை அவன் பொறுப்பில் ஒப்படைத்து ஓடிவிட்டாள் மித்ரா.மரத்தின் உதவியோடு நின்றுக் கொண்டிருந்தவளை சில நொடிகள் உற்றுப் பார்த்தவன்,பின்,மெல்ல நெருங்கினான்.அவளது இதயத்துடிப்பு உச்சமாய் எகிற ஆரம்பித்தது.காரணம் அவளுக்கே விளங்கவில்லை.மரத்தினை பற்றி இருந்த அவள் விரல்களை மெல்ல பிடித்தான் ருத்ரா.

தன்னிச்சையாக அவளது விழிகள் இரண்டும் ஒரு நொடி இறுக மூடித் திறந்தன.ஏதும் பேசாமல் அவள் நடக்க உதவிப் புரிந்தான் ருத்ரா.ஓரடி எடுத்து வைத்திருப்பாள்,அவன் காட்டிய விலகலால் வாட்டம் வராமல் போக,தடுமாறியப்படி அவன் மேல் சாய்ந்தாள் மாயா.

"ஏ..ஜாக்கிரதை!"-என்று பதறியப்படி அவளை வளைத்துக் கொண்டான் அவன்.சில நொடிகள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.பின்,எதையும் சிந்திக்காமல் அவளை குழந்தையை போல் இரு கைகளாலும் தூக்கிக் கொண்டான் ருத்ரா.

"என்ன பண்ற நீ?"

"எனக்கு முக்கியமான வேலை நிறைய இருக்கு!நீ ரொம்ப டைம் வேஸ்ட் பண்ற!"-என்றவன் வீட்டை நோக்கி நடக்கலானான்.அவள் மறு வினா எழுப்பவில்லை.அவளது கரங்கள் ருத்ராவின் கழுத்திற்கு மாலையாய் மாறின!!அவளது அறைக்கு வந்தவன்,அவளை மெத்தையில் இறக்கிவிட்டான்.

"நீ சொன்னது சரிதான் மாயா!கங்கா மாதிரி யாராலும் வர முடியாது!என் காயங்களுக்கு அவளுடைய நினைவுகளே மருந்தாக இருக்கட்டும்!ஐ ஆம் ஸாரி!உன்னை ரொம்ப டிஸ்ட்ரப் பண்ணிட்டேன்!"-என்றவன் திரும்பி நடந்தான்.அவளை நீங்கி வெகு தொலைவாக!மாயாவின் இதழில் இருந்து நிம்மதிப் புன்னகை ஒன்று வெளியானது.

மறைத்து வைத்திருந்த பெட்டியை எடுத்தவள்,அதிலிருந்த ருத்ர மணிகளை கோர்க்க தொடங்கினாள்.ஒவ்வொன்றாய் இணைய,அவள் மனதின் வைராக்கியமும் வலுப்பெற்றது!!

"அக்கா!அதுக்குள்ளே வந்துட்டீங்களா?"-அவள் புன்னகைப் பூத்தாள்.

"மித்ரா!உன்கிட்ட ஒண்ணுக் கேட்கணும்!"

"என்னக்கா?"

"ருத்ரா...ருத்ரா அம்மாப்பா எப்படி இறந்தாங்க மித்ரா?"-அவள் முகம் சட்டென வாடியது.

"தப்பா கேட்டுட்டேனா?"

"ச்சீ...ச்சீ...இல்லைக்கா!மாமா அம்மா இரண்டுப் பேரும் அண்ணன் தங்கச்சி!அதே மாதிரி தான் அப்பாவும்,அத்தையும்!கங்கைக்கொண்டான்புரம் எங்க பூர்வீக ஊர்!ஊர் திருவிழாவுக்கு அப்பா கூட்டிட்டு போகலைன்னு அம்மா ஒரே சண்டை!கடைசியில கோபப்பட்டு அப்பாவை விட்டுட்டு அம்மா கிளம்பிட்டாங்க!அப்பா அம்மா மேலே கோபமே தங்காது!அரை மணி நேரத்தில் அவரும் கிளம்பி போனார்."

"தங்கச்சி தனியா வராளேன்னு மாமாவும்,மாமா கூட அத்தையும் வந்திருக்காங்க!அந்த நேரம் ஊருக்கு அப்பாவும் வந்திருக்கவே,எல்லோரும் வீட்டுக்கு போயிட்டு இருந்தாங்க!நானும் மாமாவும் பாட்டிக் கூட இருந்தோம்!எதிர்ப்பாராத விதமா,இரயில்வே டிராக்கை கிராஸ் பண்ணும் போது,அவங்க கேட் போடாம விட்டிருக்காங்க!கார் டிராக்கில் மாட்டி..."-அவள் பேச முடியாமல் திணறினாள்.

"ஸாரி..ஸாரி மித்ரா!"

"பரவாயில்லைக்கா!அந்த விபத்துல மாமா தான் ரொம்ப நொறுங்கிட்டார்!ஆறு மாதமா யார் கூடவும் பேசாம,எதிலும் கவனம் செலுத்தாம ரொம்ப கஷ்டப்பட்டார்!இப்போ தான் அவர் முகத்தல சிரிப்பை பார்க்கிறோம்!"என்றாள் கலங்கியப்படி!!

"சரிக்கா!நீங்க தூங்குங்க!நான் காலையில வந்து எழுப்புறேன்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.