(Reading time: 8 - 16 minutes)

“நீ முதல் நாள் என் பையனை பார்த்த பார்வைலையே உனக்கு அவனைப் பிடிச்சிருக்குன்னு நான் கண்டு பிடிச்சுட்டேன்... போன முறை நீ வந்தபோது அவனை மாடிக்கு கூட்டிட்டு போக சொன்னேனே, எதுக்குன்னு நினைச்ச.... உன்னோட மனசைப் பத்தி நீ சொல்லுவேன்னு நினைச்சுத்தான்....”

“நீங்க சான்ஸே இல்லை ஆன்ட்டி....  அப்படி வெளிப்படையா தெரியற மாதிரியா நான் சைட் அடிச்சேன்....”, பேசியபடியே திரும்பிய பாரதி வாசலில் ராஜா நிற்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.  அவளைவிட அதிக அதிர்ச்சியுடன் ராஜா நின்றிருந்தான் அவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டு.

இருவரையும் பார்த்த சுகுணா, “ராஜா நீ போய் பிரெஷ் ஆகிட்டு வா.... உன்கிட்ட பேசணும்...”,என்று கூற தலையை அசைக்கக்கூட மறந்து அவன் அறைக்கு சென்றான்.

“பாரதி,  ராஜாவை உனக்கு பிடிச்சிருக்கறது பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம்... ஆனா அவனைப் பத்தி நீ முதல்ல தெரிஞ்சுக்கணும்... அவனே அதை உனக்கு சொல்லுவான்... அதுக்கு பின்னாடியும் உனக்கு அவனை கல்யாணம் பண்ண ஓகேன்னா நான் உங்க அம்மா, அப்பாக்கிட்ட வந்து பேசறேன்...”,என்று கூற பாரதியும் சரி என்பதுபோல் தலை ஆட்டினாள்.

ராஜா தன்னைத் தூய்மைபடுத்திக் கொண்டு வந்தவுடன் பாரதியும், ராஜாவும் அவனின் ஆஸ்த்தான இடமான மாடித் தோட்டத்திற்கு சென்றனர்.  இருவரில் யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல், வானம், பூமி, செடி, தொட்டி, பக்கத்து வீடு என்று எல்லாவற்றையும் சுற்றி சுற்றி பார்த்தனர்.... As usual ஐந்து நிமிடத்திற்கு மேல் பாரதிக்கு பொறுமை போய் பேச ஆரம்பித்துவிட்டாள்.

“நீங்க எப்போ வந்தீங்க... நானும் ஆன்ட்டியும் பேசினது எல்லாத்தையும் கேட்டுட்டீங்களா...”

“அந்தப் பெரியவர் கிளம்பினவுடனேயே வந்துட்டேன்... அம்மா அப்போதான் நீங்க ஏன் அப்செட்டா இருக்கீங்கன்னு கேட்டுட்டு இருந்தாங்க....”

“ஓ சூப்பர்.... அப்போ எல்லாத்தையும் கேட்டுட்டீங்க.... ஸோ உங்க பதில் என்ன...”

“உங்களுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்... ஒரு ரெண்டு முறை பார்த்ததுலையே லவ் பண்ற அளவுக்கு வந்துட்டீங்க....”

“Love at first sight.... கேள்விப்பட்டதில்லையா professor சார்....”

“அதெல்லாம் சினிமாவுக்கும், கதைக்கும் வேணா சரியா இருக்கலாம்..... ஆனால் நிஜ வாழ்க்கையில் எந்த அளவு சரி வரும்....”

“சரி இல்லைன்னா சரிப்படுத்திக்கணும் ராஜா.... அதுதான் சவால்.... சரி அதெல்லாம் விடுங்க.... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.... உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்கா.... இல்லைனாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லை...”

“ஏன் அப்போ உங்க மனசை மாத்திட்டு வேற யாரையானும் கல்யாணம் பண்ணிப்பீங்களா...”

“ச்சே ச்சே.... அந்த மாதிரி தப்புக் கணக்கெல்லாம் போடாதீங்க.... இப்போ பிடிக்காட்டாலும் இன்னும் ஒரு வாரத்துலையோ, இல்லை ரெண்டு வாரத்துலையோ உங்களுக்கு என்னை பிடிக்க வச்சுடுவேன்....”

“ஹ்ம்ம் confidence.... அந்த மல்லிப்பந்தல் பின்னாடி உள்ள போய் பார்த்துட்டு வா.....”,ராஜா சொல்ல அவன் ஒருமையில் அழைத்ததை ரசித்தபடியே அங்கு சென்று பார்த்தாள்.

மல்லிப்பந்தலின் கீழ் மூங்கிலில் டேபிளும், சுற்றி நான்கு இருக்கைகளும் போடப்பட்டிருந்தது.... சிரித்தபடியே பாரதி, ராஜாவைப் பார்க்க...

“நீ போனமுறை வந்தபோது சொன்னியே இங்க சேர்ஸ் இருந்தா நல்லா இருக்கும்ன்னு, உடனே மறுநாளே போய் வாங்கிட்டு வந்துட்டேன்.... அம்மாக்கு மட்டும் இல்லை, அவங்க பையனுக்கும் ஓரளவுக்கு அவனை யாரானும் சைட் அடிச்சாங்கன்னா கண்டுபிடிக்கத் தெரியும்...”

“ஓ உங்க வீடு முழுக்க ரெய்ட் நடத்தணும் போலயே... நீங்க செம்ம ஸ்மார்ட்டா இருக்கீங்க... கண்டிப்பா காலேஜ்ல ஏகப்பட்ட பேர் சைட் அடிச்சிருப்பாங்க... ஸோ அவங்களுக்காக என்ன எல்லாம் வாங்கி வச்சிருக்கீங்கன்னு பார்க்கணும்...”,பாரதி சொல்ல ராஜா சிரித்தான்.

“அப்படி யார் சைட் அடிச்சாலும் வாங்கிட முடியுமோ, நாமளும் யாரைத் திருப்பி சைட் அடிக்கிறோமோ அவங்க சொல்றதை மட்டும்தானே வாங்க முடியும்...”

“ஓ இது என்ன தலையை சுத்தி மூக்கைத் தொடறது.....”

“புரியலை...”

“நான் உங்களை எனக்குப் பிடிச்சிருக்குன்னு நேரடியாத்தானே சொன்னேன்.... அதுவும் முறைப்படி ஆண்கள்தான் காதலை சொல்லணும், அந்த ரூல்ஸ்கூட பிரேக் பண்ணிட்டு நான் சொல்லி இருக்கேன்...”

“ஹே ஒருத்தரை பிடிச்சிருக்குன்னு சொல்ல ஆண் என்ன, பெண் என்ன... யாருக்கு சொல்ல தைரியம் இருக்கோ அவங்க சொல்ல வேண்டியதுதான்...”

“சரி இந்தக் கதையெல்லாம் விடுங்க.... நேரடியா எனக்கு பதில் சொல்லுங்க....”

“பாரதி எனக்கும் உன்னைப் பிடிச்சுத்தான் இருக்கு.... ஆனால் அதுக்கு முன்னாடி  நான் என்னைப்பற்றி சொல்றேன்.... அதை கேட்டபிறகு உன்னோட முடிவை சொல்லு....”, என்றபடியே தன்னைப் பற்றி கூற ஆரம்பித்தான் ராஜா...

ராஜாவின் பயந்த சுபாவம் அறிந்த பிறகும் பாரதி அவனை காதலிப்பாளா, பார்க்கலாம்.

தொடரும்

Episode 13

Episode 15

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.