(Reading time: 17 - 34 minutes)

‘ஐ ஹேட் டிஸ்டர்பிங் யூ ட்யூரிங் யுவர் ப்ரேக் விவேக். பட் இட்ஸ் எ ரியல் எமர்ஜென்சி..’ மறுமுனை தன்னிலை விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க

‘இட்ஸ் ஒகே... ஐ வில் பி தேர்...ஆன் டைம் ’ நிதானமாக சொன்னான் விவேக். சரியாக சொன்னால் புகைப்படத்தில் இருந்த அப்பாவின் புன்னைகை இப்படி சொல்ல வைத்தது அவனை.

அழைப்பை துண்டித்துவிட்டு சில நிமிடங்கள் அப்பாவின் படத்தை பார்த்துகொண்டு நின்றான்.  அதன் பின் அவருக்கு தலையசைத்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தவனுக்கு ஏனோ கிளம்ப மனம் வரவில்லை. இப்போது கிளம்பி சென்றால் அவன் திரும்பி வர இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம்.

‘எப்படி இருக்கிறார் நான் அழைத்து வந்த அந்த மனிதர்???’ சின்னதாய் ஒரு கேள்வி பிறந்தது விவேக்குக்கு.

உடலில் நிறைய காயங்கள், ஒன்றிரண்டு எலும்பு முறிவு, அபாய கட்டத்தில் இல்லை என்றாலும் இன்னும் நினைவு திரும்பவில்லை என்பதே மருத்துவர்களிடமிருந்து அவனுக்கு கிடைத்த பதிலாக இருந்தது.

ஹரிணியிடமிருந்து எந்த தகவலும் வராமல் போக, அநாதை போல் படுத்துக்கிடக்கும் அந்த மனிதரின் மேல் நிறையவே இரக்கம் பிறந்தது.

இப்போது உள்ளே சென்று அவரை பார்க்க அவர் உடல்நிலை அனுமதிக்கவில்லை. என்ன தேவை என்றாலும் தன்னை உடனே தொடர்பு கொள்ள சொல்லிவிட்டு நகரப்போனவனுக்கு தன்னுடையது எதையோ விட்டு செல்வதை போல் ஒரு உணர்வு.

சற்றே அவன் தயங்கி நிற்க ‘மிஸ்டர் தாமோதரன்..’ என யாரோ யாரிடமோ கைப்பேசியில் பேசியபடியே அவனை கடந்து செல்ல, அந்த பெயர் மறுபடியும் அவனை உறுத்தியது. அறைக்குள் மறுபடியும் வந்து அமர்ந்தான்.

அடிபட்டு படுத்திருப்பவர்தான் தாமோதரனாக இருக்குமோ??? அப்பா ஏன் அவரை என்னிடம் சேர்த்திருக்கிறார்??? நான் இப்போது போவதா??? இங்கேயே இருப்பதா??? நிமிர்ந்து அப்பாவின் புகைப்படத்தை பார்த்தான்.

‘என்னமோ போகவே மனசில்லைபா. ஏதோ குழப்பமாவே இருக்கு...ஏன்பா...’ அவன் அப்பாவை கேட்க மாறா மர்ம புன்னகையுடன் சுவற்றில் வீற்றிருந்தார் அப்பா!!!

‘மிஸ்டர் ஸ்ரீனிவாசன் இப்படியே சிரிச்சிட்டே இருந்தா என்ன செய்ய நான்??? சொல்லுங்க.. இப்போ நான் போகவா??? இங்கேயே இருக்கவா. அட பேசுங்க மிஸ்டர் ஸ்ரீனிவாசன் ’ அவன் கேட்டு முடித்ததுதான் தாமதம் ஒலித்தது அவன் கைப்பேசி. அவன் அழைப்பை ஏற்க

‘‘ஹலோ நான் ஸ்ரீனிவாசன் பேசறேன்.!!!!’ என்றது மறுமுனை.

அழைத்தது சிறுவன் ஸ்ரீனிவாசன்தான் என்று தெரிந்த போதிலும் அந்த நொடியில் திடீரென ஒலித்த ‘நான் ஸ்ரீனிவாசன் பேசறேன்’ ல் கொஞ்ச திக்கு முக்காடி போனான் விவேக்.

‘சொல்லுங்க.. சொல்லுங்க மிஸ்டர் ஸ்ரீனிவாசன் என்றான் சின்ன புன்னகையுடன். இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சலே இல்லை..’ என்பதை போல் அப்பாவின் புகைப்படத்தை பார்த்தபடியே.

‘கிஃப்ட் எல்லாம் செம அங்கிள்..’ என்றான் சிறுவன் உற்சாகமாய் ‘எனக்கு எல்லாமே பிடிச்சிருக்கு..’

தட்ஸ் கிரேட்.. தேங்க் யூ மை ஸ்வீட் ஹார்ட்..’ என்றான் இதமாக ‘பார்ட்டி ஸ்டார்ட் ஆயிடுச்சா. என்ஜாய் பண்றியா???’

‘எஸ் அங்கிள்.... நீங்க என்ன பண்றீங்க??? ஃப்ளைட்லே இருக்கீங்களா???

‘இல்லடா... வரச்சொல்லி கால் கூட வந்தது. என்னமோ போகவே பிடிக்கலை..’ விவேக் சாதரணமாக சொல்ல

‘நோ.. நோ... லீவ் எல்லாம் போடகூடாது... கிளம்புங்க... ரன்.. ரன்... ரன் ஃபாஸ்ட்... இட்ஸ் கெட்டிங் லேட்..’ அப்பா எப்போதும் சொல்லும் வார்த்தைகளை ஸ்ரீனிவாசன் அப்படியே சொல்லிவிட பேச்சிழந்து போனான் விவேக்.

‘என்ன... சைலென்ட் ஆகிட்டீங்க... அங்கே எத்தனை பேர் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. ட்யூட்டிதான் ஃப்ர்ஸ்ட... கிளம்புங்க.. கிளம்புங்க..’

‘சரி.. சரிங்க... மிஸ்டர் ஸ்ரீனிவாசன்...’ சற்றே நெகிழ்ச்சியுடன் சொன்னான் விவேக் ‘இதோ கிளம்பறேன்..’

யார் மூலமாக சொன்னால் என்ன??? அப்பா சொல்லியாகிவிட்டது!!! இதற்கு மறுபேச்சு இல்லை. அதன் பிறகு வேறெந்த சிந்தனையையும் மனதிற்கு கொடுக்காமல் வீட்டுக்கு சென்று சில மணி நேரங்கள் கண்களுக்கு உறக்கத்தை பரிசளித்து விட்டு எழுந்தான் விவேக்.

மனம் கொஞ்சம் இலகுவாகி இருக்க மடமடவென தயாராகி அடுத்த சில மணி நேரத்தில் பளீர் சீருடையில் விமான நிலையத்தில் இருந்தான் விவேக்.

நேரம் அதிகாலை நான்கு மணி. மழை இன்னமும் தொடர்ந்துக்கொண்டிருந்தது. ஆறு மணிக்கு டெல்லி நோக்கி கிளம்ப வேண்டும் விமானம்.

விமானம் ஓடு தளத்தில் காத்திருக்க கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் விவேக்.

விமானத்தின் மின்சார தொடர்ப்பு அணைக்கப்பட்டிருக்க உள்ளே அவன் மனதை பிரதிபலிக்கும் விதமாக இருளான நிசப்தம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.