(Reading time: 17 - 34 minutes)

'ஃபைவ் ஹண்ட்ரட்.. 

விவேக்  விமாத்தை தரை இறக்கிக்கொண்டிருக்க அக்காவை நேரில் சந்திக்க அவள் வேலை பார்க்கும் அதே மருத்துவமனை நோக்கி பறந்துகொண்டிருந்தது ஹரிணியின் கார்.

அதே நேரத்தில் அங்கே தனி அறையில் இருந்த தாமோதரனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பிக்கொண்டிருந்தது. அரை குறையாக ஹரிணியின் முகம் நினைவில் வந்து வந்து போனது. மருத்துவர்கள் அவர் அருகில் வந்து அவரை பரிசோதித்த படியே ஏதோ கேட்க அவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

விவேக் விமானத்தை விட்டு இறங்கி நடந்த நொடியில் ஒலித்தது அவனது கைப்பேசி. மருத்துவமனையிலிருந்து அழைப்பு.

‘சார். நீங்க கூட்டிட்டு வந்த பேஷண்டுக்கு கொஞ்சம் நினைவு திரும்பிடுச்சு...’

‘தட்ஸ் கிரேட்..’ உற்சாகமாக கூவினான் விவேக். ‘இறைவா உனக்கு பல நூறு நன்றிகள்!!!’ பல நாட்களுக்கு பிறகு இறைவனுக்கு நன்றி கூறியது மனம்.

‘அவர் பெயர் தாமோதரன்னு மட்டும் சொல்றார்..’ மறுமுனை சொல்லி முடிக்க திகைத்து திக்கு முக்காடிப்போனான் விவேக்.

‘மை... காட்..’ என்றான் வாய்விட்டு. ‘இதோ வரேன். நான் உடனே வரேன்..’ மருத்துவமனையை நோக்கி விரைந்தான் அவன்.

அதற்குள் அங்கே சென்று சேர்ந்திருந்தாள் ஹரிணி. தனது அக்காவின் முன்னால் நின்றிருந்தாள்.

‘ஹேய்.. திரும்ப திரும்ப அதையே உளறிட்டு இருக்கே. நிஜமாவே எனக்கு அப்பா எங்கேன்னு தெரியாது ..’ பதினெட்டாவது முறையாக சொல்லிக்கொண்டிருந்தாள் சுஹாசினி. ‘டியூட்டி டைம்லே வந்து ஏன் டிஸ்டர்ப் பண்றே இப்படி???

ஒரு விஷயம் இருவருமே அறிந்திருக்கவில்லை!!! தங்களுடைய அப்பா படுத்திருக்கும் அந்த அறையின் வாசலில்தான் இருவரும் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்று இருவருமே அறிந்திருக்கவில்லை!!!

‘அப்போ நீ சொல்றது உண்மைன்னா அப்பாவை காணோம் சுஹாசினி. உண்மையை சொல்லு நீ விவேக்கிட்டே எதுவும் சொன்னியா???’

‘ஹேய்.. இல்லடி .. அன்னைக்கு விவேக் வீட்டை விட்டு கிளம்பி போனதிலிருந்து நான் அவர்கிட்டே  பேசவே இல்லை.

‘அப்போ அப்பா எங்கே???’ ஹரிணி கேட்டுக்கொண்டிருக்க

மனம் நிறைய சந்தோஷத்துடன் வந்துக்கொண்டிருந்தான் விவேக். அப்பா சொன்ன தாமோதரன் இவர்தான்!!! இவரேதான்!!! நான் அவரை  பார்க்க வேண்டுமென அப்பா ஏன் விரும்பினார்??? ஒரு வேளை அவர் அப்பாவுக்கு தெரிந்தவரா??? மனதிற்கு நெருக்கமான தோழனாக இருந்திருப்பாரோ??? மனதிற்குள் கேள்வி மழை பொழிந்துக்கொண்டிருக்க ஒரு வித பரவச உணர்வுடன் மருத்துவமனையை அடைந்து சரசரவென உள்ளே நுழைந்தான் விவேக்.

தாமோதரன் இருக்கும் அறை எண்ணை கேட்டுகொண்டு இவன் விறுவிறுவென அந்த அறை நோக்கி நடந்துவர, அவன் பின்னால் இரண்டு டாக்டர்கள் பவ்யமாக நடந்து வர அவனை பார்த்த மாத்திரத்தில்  திடுக்கிட்டு போனாள் ஹரிணி.

‘இவன் எங்கே இங்கே வந்தான்??? இவனுக்கு ஏன் இங்கே ராஜ மரியாதை???’

அவனுடன் வந்த டாக்டர்கள் வெளியில் நிற்க சுஹாசினி அவனை பார்த்து மலர்ந்து மகிழ்ந்து நட்பாய் புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைத்துவிட்டு தாமோதரன்  இருந்த அறைக்குள் நுழைந்து தனக்கு பின்னால் கதவை சாத்திக்கொண்டான் நம் விவேக் ஸ்ரீனிவாசன்!!! சகோதரிகள் இருவரும் அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்!!!

 

தொடரும்......

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.