(Reading time: 17 - 34 minutes)

டார்ச் லைட்டின் உதவியுடன் சில முக்கியமான இயக்கங்களை உயிர்ப்பித்து விமானத்தின் பின்னால் இருக்கும் என்ஜினை இயக்க இரண்டு நிமிடத்தில் உயிர் பெற்றது அது. மெது மெதுவாய் காக்பிட்டிலும், பயணிகள் பகுதியிலும் விளக்குகள் மின்ன ஆரம்பிக்க, குளிர் மின் விசிறிகள் சத்தம் கொடுக்க ஆரம்பிக்க, அங்கே இருந்த இருண்டு கிடந்திருந்த கணினி திரைகள் உயிர் பெற, அவனது ஒவ்வொரு நரம்பிலும்  மெது மெதுவாக பரவ ஆரம்பித்தது உற்சாகம்.

அடுத்த சில மணி நேரத்தில் பளீர் புன்னகையுடன் காக்பிட்டில் அமர்ந்திருந்தான் விவேக். மழையும் இருளும் போட்டி போட்டு கண்கட்டு வித்தை விளையாடிக்கொண்டிருக்க, நீரில் நனைந்து திளைக்கும் சுறா மீனாய் நின்றிருந்தது அவனது விமானம்.

‘என் மேல் அப்படி என்ன காதலோ ஏன் மேக காதலிகளுக்கு. ஒரு நாள் நான் வரவில்லை என்றால் இப்படியா அழுது தீர்ப்பார்கள்???’ சின்னதாய் சிரித்துக்கொண்டான் விவேக்.

'குட் மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்... திஸ் இஸ் யுவர் கேப்டன் விவேக் ஸ்ரீனிவாசன் . ப்ளீஸ் ஃபாசென் யுவர் சீட் பெல்ட்ஸ் ..... இட்ஸ் டைம் ஃபார் டேக் ஆஃப்...' உற்சாகத்தில் ஊறி ஒலித்தது விவேக்கின் குரல்.

அவன் விழிகள் ஒடதள விளக்கொளியில் மழையினிடைய ஊடுருவ ஈரமான ஓடு தளத்தில் மெல்ல மெல்ல வேகமெடுத்தான் விவேக். இருளை கிழித்துக்கொண்டு சரேலென மேலே எழும்பியது அவனது விமானம்!!!

நேரம் காலை ஒன்பதை தொட்டிருக்க அந்த மருத்துவமனையை அடைந்தாள் சுஹாசினி. தனது தந்தை இங்கேதான் அனுமதிக்க பட்டிருக்கிறார் என்பதை அறியமாலே உள்ளே நுழைந்தாள் அவள். இன்று அந்த மருத்துவமனையின் ஒரு மருத்துவராக பொறுப்பேற்க இருக்கிறாள் சுஹாசினி!!!

வழக்கமான நடை முறைகள், அறிமுகங்கள், எல்லாம். முடிந்திருக்க அவளது தந்தை அனுமதிக்க பட்டிருக்கும் மதியம் பண்ணிரெண்டு ஐ.சி.யூ வினுள் நுழைந்தாள் சுஹாசினி.

அதே நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்தாள் ஹரிணி. ஆரம்பத்திலிருந்தே தான் எங்கே இருக்கிறோம் என்பதை அப்பாவிடம் தெரிவிப்பது, அவர் எப்படி இருக்கறார் என தினமும் விசாரிப்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளவே இல்லை ஹரிணி.

அதானாலேயே இந்த நிமிடம் வரை தனது தந்தையின் நிலையை உணராதவளாக, அறியாதவளாக, யாரோ ஒரு சக விமானியிடம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள் அவள்

அன்போ, உறவோ, காதலோ இல்லை ஒரு சாதரண உயிரற்ற பொருளே ஆயினும் இறைவன் நமக்கு பரிசளித்தவற்றின் மீது நாம் காட்டும் அலட்சியம் பின்னாளில் நம்மை அதற்காக ஏங்க வைக்கும் என்ற விதி புரியாதவளாக சிரித்துக்கொண்டிருந்தாள் அவள்.

இங்கே ஐ.சி யூவிற்குள் நுழைந்தாள் சுஹாசினி. ஒவ்வொரு நோயாளியாக பரிசோதித்துக்கொண்டே, அவர்களின் மருத்துவ குறிப்புகளை ஆராய்ந்தபடியே வந்தாள் அவள்.

மெல்ல நடந்து அவளது தந்தை கண் மூடி கிடக்கும் அந்த கட்டிலின் அருகே வந்து நின்றாள் மகள். அவளது கவனம் முழுவதும் பெயர் கூட எழுதப்படாத அவரது ரிப்போர்ட்களில் இருக்க, உடலில் அங்கங்கே கட்டுகளுடன் கண் மூடி கிடக்கும் அவரின் முகத்தை அத்தனை கவனத்துடன் ஆராயவில்லை அந்த அன்பு மகள்.

அவளை சொல்லியும் தவறில்லைதான்.. பதினான்கு வருடங்களுக்கு முன்னால் இருந்த அப்பா இல்லையே அவர்!!! தேகம் மெலிந்து, தோல் சுருங்கி, வலுவிழந்து, இப்போது நினைவையும் இழந்து மயங்கி கிடக்கிறாரே அவரை எப்படி தனது அப்பாவாக இருக்ககூடும் என யோசிப்பாளாம் அவள்???

அந்த கட்டிலை தாண்டி நடந்தவள் ஏதோ ஒரு உந்துதலில் பின் நோக்கி வந்தாள். சுஹாசினி. என்ன தோன்றியதோ அவரது ரிபோர்ட்டை மறுபடி பார்த்தவள், ஒரு ஊசியை எடுத்து அவர் கையில் செலுத்தினாள். அப்போதும் அவர் முகத்தை கூர்ந்து கவனிக்க தோன்றவில்லை பெண்ணுக்கு.

 ‘ஏம்மா... நான் உன்னை பெத்த அப்பாமா. என்னை தூக்கி போட்டுட்டு அந்த பையனோட போயிடுவியா??? அப்பா வேண்டாமாமா உனக்கு’ பதினான்கு வருடங்களுக்கு முன்னால் உடைந்து போன குரலுடன் கேட்டிருக்கிறார் தாமோதரன்.

‘ஆமாம். அப்படிதான். எனக்கு அப்பா வேண்டாம்..’ உச்சகட்ட தொனியில் கூவி இருக்கிறாள் ஹாசினி.

இன்று அவள் மனம் அப்பாவை கண்டுவிடத்தான் தினம் தினம் தவிக்கிறது. ஆனாலும் விதி அவள் கண் மறைத்து சிரிக்கிறது!!!

ஊசி போட்டுவிட்டு, அங்கே இருந்த நர்ஸ்களிடம் தேவையான ஆணைகளை கொடுத்துவிட்டு நகர்ந்தாள் சுஹாசினி.

ஒரு நாள் முழுவதுமாக கடந்திருந்தது!!!

றுநாள் மதியம் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்தாள் ஹரிணி. அந்த ஹோடேலில் மதிய உணவை வாங்கிக்கொண்டு அவள் வர அங்கே கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளும் நிரம்பி இருக்க ஒரு இருக்கையை கஷ்டபட்டு தேடிப்பிடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

கையிலிருந்த காபியை ருசித்தபடியே தான் படித்துக்கொண்டிருந்த அந்த தினசரியின் பக்கத்தை வெகு இயல்பாக திருப்பிய விவேக்கின் பார்வை எதிரில் அமர்ந்திருத்த ஹரிணியின் மீது விழ வியப்பும், திகைப்புமாக விரிந்தன அவன் கண்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.