(Reading time: 17 - 34 minutes)

கொஞ்சம் திடுக்கிட்டுதான் போனாள் அவனை பார்த்த ஹரிணி!!!

இவன் இங்கே அமர்ந்திருப்பது தெரிந்திருந்தால் நான் வந்து அமர்ந்திருக்க மாட்டேனே!!!’ யோசித்தவளின் முகம் கொஞ்சம் வெறுப்பை கக்கியது  இதையெல்லாம் எப்போதும் பெரிதாக கண்டு கொண்டதில்லையே விவேக்!!!

வெகு இயல்பாக இன்னொரு துளி காபியை ருசித்தவனை பார்த்ததும் பற்றிக்கொண்டு வந்தது ஹரிணிக்கு. ‘எத்தனை அலட்சியமாய் ஒரு பார்வை??? எத்தனை திமிர் இவனுக்கு??? என் அப்பாவை பற்றி தெரிந்துக்கொண்டு விட்டானா இல்லையா??? ஒரு வேளை தெரிந்துக்கொண்டதினால் தான் இந்த அலட்சிய பார்வையா??? படபடவென கேள்விகள் எழுந்தன அவளுக்குள்ளே!!!

அதே நேரத்தில் அவனது எண்ண ஓட்டங்கள் தாமோதரனை தொட்டன. இந்த பெண் மருத்துவமனையை தொடர்பு கொண்டாளா இல்லையா??? யோசனையுடன் ஒரு நொடி அவள் முகம் பார்த்தான்.

கண்டிப்பாக தொடர்பு கொண்டிருக்க மாட்டாள் என்றே தோன்றியது. இவளிடம் ஏதாவது கேட்டு வம்பு வளர்த்து இன்றைய பொழுதின் நிம்மதியை தொலைக்க அவன் கண்டிப்பாக விரும்பவில்லை. அவருக்கு நினைவு திரும்பி விட்டால் அவரே தனது  சொந்தங்களை பற்றி சொல்வார். அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

அவளை பார்த்துக்கொண்டே தனது கைப்பேசியை எடுத்து தாமோதரனை கவனிக்கும் அந்த மருத்துவரை தொடர்பு கொண்டான் விவேக். அவனது பார்வை இவளுக்குள் படபடப்பை கிளப்பியது

யாரை அழைக்கிறான் இப்போது??? அப்பா இருக்குமிடத்தை தெரிந்துக்கொண்டானா என்ன??? கூடாது அப்படி நடக்க கூடாது!!! தனக்குள்ளே கத்திக்கொண்டிருந்தாள் ஹரிணி.

இவள் கூடாது கூடாது என கூவிக்கொண்டிருக்க இறைவன் அவரை அவனது கைகளிலேயே சேர்த்த மாயம் அறியவில்லை பெண்.

‘குட் ஆஃபடர் நூன் டாக்டர். திஸ் இஸ் விவேக். நான் அட்மிட் பண்ண பேஷன்ட் இப்போ எப்படி இருக்கார்???’

‘அபாய கட்டத்தை தாண்டிட்டார் சார் என்றார் மருத்துவர். இன்னும் நினைவு திரும்பலை. எப்படியும் இன்னைக்கு ஈவினிங்குள்ளே ஐ.சி.யூ விலிருந்து டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். ஹீ இஸ் ஸ்டேபிள் ‘

‘அதற்குள் இவள் படபடவென அப்பாவின் எண்ணை அழுத்தி இருந்தாள். அவரிடம் பேசியே இரண்டு நாட்கள் ஆகிறதே!!! அவரது கைப்பேசி அணைக்கபட்ட நிலையில் இருந்தது. அது அந்த விபத்தில் வாகனங்களுக்கு அடியில் சிக்கி சிதறிய கதை அறியாதவளாக மறுபடி மறுபடி முயன்றுக்கொண்டிருந்தாள் ஹரிணி.

சரி நான் நாளைக்கு மதியம் வந்து அவரை பார்க்கிறேன்..’ சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு, காபியை முடித்துவிட்டு அவளை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு விவேக் நகர, உள்ளுக்குள் பற்றி எரிய ஆரம்பித்தது ஹரிணிக்கு.

அடுத்த சில மணி நேரங்களில் அப்பாவுக்கு அவள் விட்டு விட்டு முயல தோல்வியே பதிலாக இருந்தது அவளுக்கு. எப்போதும் இப்படி நடந்ததில்லையே. எங்கே இருக்கிறார் அப்பா???

அடுத்து ஹைதிராபாத், லக்னோ, மும்பை என நாளை மதியம் வரை இருக்கிறது அவளது பயண அட்டவணை. இப்போது அவரை தேடி ஓடவும் முடியாதே!!!

அவர் வழக்கமாக தங்குவது மதுரையில் ஒரு வாடகை வீட்டில், அங்கே தொடர்பு கொண்டு அவள் கேட்க அங்கேயும் அவர் ஊர் திரும்பவில்லை என்பதே பதிலாக கிடைத்தது.

பதற்றம் மொத்தமாக ஆட்கொண்டது அவளை. ஒரு வேளை இந்த விவேக்கும், ஹாசினியும் சேர்ந்து அவரை கண்டுபிடித்து எனக்கு தெரியாமல் எங்காவது மறைத்துவிட்டார்களோ???

ஆம்!!! அப்படிதான் இருக்கும். கூடாது!!! அய்யோ!!! நான் தோற்றுவிட்டேனா??? இப்போது நான் என்ன செய்ய???

அவசரமாக ஹாசினியை அழைத்தாள் ஹரிணி.

‘ஹேய்... அப்பாவை எங்கே ஒளிச்சு வெச்சிருக்கே??? என்றாள் நேரிடையாய்.

‘என்னது அப்பாவா??? நீ என்ன கேக்கறேன்னு எனக்கு புரியலை..’ ஹாசினி திகைக்க

‘பொய்.. சொல்லாதே.. மரியாதையா சொல்லிடு. நீயும் விவேக்கும் சேர்ந்து அப்பாவை என்ன செஞ்சீங்க..’ இவளது அவசரத்தையும், கற்பனையையும் அவளது குரல் ஒரு சேர பிரதிபலிக்க

‘உனக்கு என்ன பைத்தியமா நான் இப்போ ட்யூட்டிலே இருக்கேன். அப்பாவை பத்தி எனகென்ன தெரியும் வை போனை..’ ஹாசினி துண்டித்தாள் அழைப்பை.

அவள் அமர்ந்திருக்கும் அறையை விட்டு இரண்டு அறைகள் தள்ளி படுத்திருக்கிறார் அப்பா என்பதை அறியவில்லையே அவள் பாவம்!!!

மறுநாள் மதியம் வரை அப்பா எங்கிருக்கிறார் என்று தெரிந்துக்கொள்ள ஹரிணி எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போக, ஒரு வழியாக சென்னையில் வந்து இறங்கினாள் ஹரிணி.

அதே நேரத்தில் சென்னையை நெருங்கிக்கொண்டிருந்தது விவேக் ஒட்டி வந்த விமானம்.

'டூ தௌசண்ட்..' ..

'ஒன் தௌசண்ட்'  ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.