(Reading time: 7 - 14 minutes)

அசோக் இன்னும் எத்தனைநாள் இப்படி கவலையாவே இருப்பீங்க ? கமல் இப்போ எப்படி இருக்கார் ?

ம்... ரொம்ப உடைந்து போய் இருக்கிறான், மாயாவுடனான திருமண வாழ்க்கைப் பற்றி அவனுக்கு ஆயிரம் கற்பனைகள் இருந்தது லட்சணா. எல்லாம் பொய்த்துப்போய் விட்டது, பைத்தியம் பிடித்தவன் போல இருக்கிறான். மனதிற்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது.

மாயா மாதிரி ஒரு பொண்ணை மறக்கிறது ரொம்பவும் கஷ்டம்தான் இல்லையா ?

வெறும் தோற்றம் மட்டும் இல்லை லட்சணா இரண்டுபேருமே வெற்றிபெற்றவர்கள் என்றாலும் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை அனுபவித்தவர்கள், கமல் பார்ன் இன் கோல்ட் ஸ்பூன்னு சொல்லுவாங்களே அந்தமாதிரி பிறந்தவன், செல்வச் செழிப்பில் மிதந்தவன், நாங்க இரண்டு குடும்பமும் உடன் பிறந்தவர்கள் மாதிரிதான் ! அத்தனை ஒட்டுதல் கமலோடு பெற்றோர் இறந்த பிறகு அவனை வளர்க்கும் பொறுப்பை என் பெற்றோர் எடுத்துக்கிட்டாங்க, அவன் பிஸினஸை பார்த்துக்கிட்டான். எனக்கு உளவியல் துறை பிடிச்சது, எடுத்து இப்போ டிடெக்டிவ் ஏஜென்ஸி எடுத்து வெற்றிகரமா நடத்திக்கிட்டுதான் வர்றேன். ஆனாலும், ஒரு தனிமையை எப்போதும் பீல் பண்ணுவதாய் கமல் புலம்புவான். அப்படிப்பட்ட தருணங்களை எல்லாம் அவன் மறந்தது மாயாவுடனான அன்பில் தான் இப்போ அவளையும் இழந்து எப்படி இருக்கப்போறோன்னு தெரியலை,

இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்படி அசோக் நீங்கதான் அவரை கொஞ்சம் கொஞ்சமா அதில் இருந்து மீட்டு வரணும். கமல் நல்ல ஆரோக்கியமான இளைஞன். வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தவர்ன்னு சொல்றீங்க ? ஒரு நல்ல நண்பனா அவருடைய வாழ்க்கையை மீட்டுத் தரவேண்டியத உங்க பொறுப்பு , மாயாவோட கேஸ் எந்த அளவு இருக்கு ?!

இன்ஸ்பெக்டர் வீராதான் அதை எடுத்து நடத்தறார். எல்லா ரிப்போர்ட்டும் தற்கொலைதான்னு உறுதியா சொல்லுது, ஆனா, கல்யாணம் பற்றி அத்தனை கற்பனையோடு பேசியவள் சில நாட்களிலேயே தற்கொலைக்கு முயற்சிசெய்திருக்கான்னா என்ன காரணம்.

மாயாவோட வீட்டில் உள்ளவங்க என்ன சொல்றாங்க ?

மாயாவுக்கும் பெற்றோர் கிடையாது அத்தையும், அவங்க மகனும்தான். அவங்கதான் நாட்டியத்தில் மாயாவுக்கு குருவும் கூட ! நானும் ஒரிருமுறை பார்த்து இருக்கிறேன் சரியான ஒட்டுண்ணி. எப்போதும் பணம் பற்றிதான் நினைப்பு. கமல் மாயா விஷயம் கூட அவங்களுக்கு தெரியாது, நட்பு ரீதியில் தான் அவங்களைச் சந்தித்தது,

அவங்க ஏதாவது காரணமா இருக்கலாமா அசோக்

தெரியலை ஆனா கடைசியா கமல் கிட்டே பேசும் போது ஏதோ நெருக்கடியில் இருப்பதாகவும் சீக்கிரம் கல்யாணம் செய்துக்கணுமின்னு மாயா பேசியிருக்கா ?! ம் பார்க்கலாம். நான் இப்போ கமல் கூட இருக்க வேண்டிய சூழ்நிலை லட்சணா அதனால நாம இரண்டுபேரும் சந்திக்கிறது கொஞ்சம் தடைபட்டா நீ....

நான் தப்பா நினைக்கமாட்டேன் அசோக். நான் உங்க லைப்பிலே முக்கியம்தான், நீஙக் எனக்கு மட்டும்தான் நினைக்கிற அடமெண்ட்தான் ஆனா சூழ்நிலையை புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு பக்குவம் இருக்கு. கமல் நல்லபடியா தேறி வரட்டும் அதற்கு என்மூலமா ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் தயங்காம சொல்லுங்க !

நன்றி லட்சணா ?! ஒரு அன்பான பெண்ணின் துணை எத்தனை இதமாக இருக்கிறது. கமல் எதை இழந்திருக்கிறான் என்பதை உணரும் போது வெறுமையாய் புன்னகைத்தான் அசோக்.

தொடரும்

Epsiode # 01

Epsiode # 03

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.