(Reading time: 14 - 28 minutes)

"அது பெரிய கதை. அதெல்லாம் சொல்லிட்டு இருந்தா நேரம் தான் வேஸ்ட் ஆகும்"

அந்நேரத்தில் கூட்டத்தை நோக்கி டைரக்டர் வருவதை பார்த்த வசந்த் ஓவியத்தை மடித்து பத்திரப்படுத்தி வைத்தான்.

"என்ன இங்க கூட்டம்?" என்றபடியே டைரக்டர் அங்கு வந்து நின்றார்.

கூட்டம் கலையத் தொடங்கியது. "ஒண்ணும் இல்லை சார். வசந்த் அற்புதமான ஓவியத்தை காட்டினார். அதை பார்த்துட்டு இருந்தோம்" என கூட்டத்தில் ஒருவன் கூறியபடியே நகர்ந்தான்.

டைரக்டர் கைலாஷின் கண்கள் வசந்த்திடம் திரும்பின. "வசந்த் உனக்காக என்னோட அறையில ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தா, நீ இங்க நின்னு போறவங்க வரவங்க கிட்ட எல்லாம் வித்தை காட்டிட்டு இருக்க"

"சாரி சார்"

"இன்னும் ரெண்டு நிமிஷத்துல நீங்க ரெண்டு பெரும் என்னோட அறையில இருக்கணும்" என கூறிவிட்டு வேகமாக சென்றார் டைரக்டர்.

"என்னடா, என்னையும் சேர்த்து கூப்பிடுறாரு?" என வசந்த்திடம் ஜெஸிகா கேட்டாள்.

"தெரியலையே. ஜான் வீட்டை பேசி முடிச்சிட்டியா?"

"டேய்! நீ தாண்டா ஜான்கிட்ட பேசுறேன்னு சொன்ன"

"அப்படியா சொன்னேன்?"

"வசந்த் விளையாடாத. இப்போ அந்த ஆளுகிட்ட நான் என்ன பதில் சொல்லுறது?"

"வா, ரெண்டு பேரும் சேர்ந்து போய் திட்டு வாங்கலாம்"

டைரக்டர் கைலாஷ் முன்னால் இருவரும் வந்து நின்றார்கள்.

"வசந்த், ஓவியத்தை கொண்டு வந்துட்டியா?"

வசந்த் என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றான்.

"வசந்த் உன்னை தான். வேலையை முடிச்சிட்டியா இல்லையா?"

"முடிச்சிட்டேன் சார்" என கூறி லூயிஸ் வரைந்து கொடுத்த ஓவியத்தை டைரக்டரிடம் கொடுத்தான் வசந்த்.

டைரக்டர் ஓவியத்தை பார்த்தார். வசந்தையும் ஒருமுறை நோக்கினார். நாற்காலியில் சாய்வாக உட்கார்ந்து டென்ஷன் குறைய மூச்சுக்காற்றை இழுத்து இழுத்து விட்டார்.

"இந்த லட்சணமான ஓவியத்தை தான் எல்லோர்கிட்டயும் பெருமையா காட்டிட்டு இருந்தியா?"

"அது வந்து சார்..."

"இப்படியா நான் வரைய சொன்னேன்"

"பழைய ஓவியர் வரஞ்சி கொடுக்க முடியாதுண்ணு சொல்லிட்டார் சார்"

"அதுக்கு?"

"வேற ஒரு ஓவியர் கிட்ட போக வேண்டிய சூழ்நிலை"

"ஓ! எனக்கு எந்த தகவலும் சொல்லாம நீயே முடிவெடுத்திருக்க"

வசந்தின் இதயம் படபடத்தது.

"திறமைசாலிங்க கோபப்பட தான் செய்வாங்க வசந்த். அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா? அவரை கன்வின்ஸ் பண்ண முயற்சி செய்யணும்"

"நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன் சார். தான் எடுத்த முடிவுல அவர் பிடிவாதமா இருந்தாரு"

வசந்த் கூறியதை பொருட்படுத்தாத டைரக்டர் கைலாஷ் ஓவியருக்கு போன் செய்தார்.

"ஹலோ சார். நான் கைலாஷ் பேசுறேன், ஓவியம் வரஞ்சி கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்களாம்......"

"......."

.

"இப்போ தான் வசந்த் சொன்னான். ப்ளீஸ் சார், உங்களை விட்டா இந்த ஓவியத்தை யாராலயும் அழகா வரைய முடியாது"

"........"

"ப்ளீஸ் சார்"

"......"

"ஓகே ஓகே சார் நன்றி". ரிசீவரை கீழே வைத்தார் டைரக்டர் கைலாஷ். "இப்போ எப்படி சம்மதிச்சாரு வசந்த்"

வசந்த் அமைதியாக நின்றான்.

"டைரக்டர் ஆகணும்னு விரும்புற. சாதிக்கணும்னு நினைக்கிற. வளஞ்சி கொடுத்து போக தெரியலன்னா எப்படி ஜெயிக்க முடியும். உனக்கு எங்கே அதெல்லாம் தெரிய போகுது. போ போ இன்னைக்காச்சும் உருப்படியா ஏதாச்சும் பண்ணு"

வசந்த் அங்கிருந்து நகர ஆயத்தமானான்.

"உன் கையில என்ன வசந்த்?"

"இதுவும் ஓவியம் தான் சார்"

"கொடு, பாக்கலாம்"

தயங்கியபடியே ஓவியத்தை கொடுத்தான் வசந்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.