(Reading time: 11 - 22 minutes)

மலர் “சார்.. இது எல்லாமே ஓகே.. ஆனால் என்னோட ஐடியா என்னவென்றால், இதே மாதிரி நம்ம பேராசிரியர்களுக்கும் போட்டிகள் வைத்து, அவர்களை மாணவர்களோடு மோத வைத்தால் எப்படி இருக்கும்? இன்னும் சொல்ல போனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை காலேஜ்லே உண்டாகும்னு தோணுது.”

“ம்... இது நல்ல ஐடியா தான்.. ஆனால் மாணவர்களின் துடிப்போடு ஸ்டாப்ஸ் போட்டி போட முடியுமா?

“ஏன் அப்படி நினைக்கணும்.. ? இவங்களோட அனுபவத்தை மாணவர்கலால் ஜெயிக்க முடியுதா பார்க்கலாமே..?”

“எனக்கும் இது நல்ல ஐடியாவா தோணுது செழியன்.. முதலில் ஸ்டாப் எல்லோரையும் கேட்போம்.. பிறகு இதை செயல் படுத்துவோம்” என்று வளர்மதி முடிக்கும் போது அவருக்கு போன் வர, எடுத்து பேசி விட்டு

“செழியன் .. என் கணவர் வர சொல்லிருந்தேன்.. வந்துட்டாராம்.. வேறு ஒன்றும் இல்லையே.. நான் கிளம்பட்டுமா?”

“சரிங்க மேடம்.. அப்புறம் உங்களுக்கே தெரியும்.. இந்த விஷயம் எல்லாம் நமக்குள் இருக்கட்டும். பிரின்சிபால் சார் அறிவிப்பு கொடுத்தவுடன் நாம் இதை பற்றி எல்லோரிடமும் பேசலாம்..”

“சரிப்பா.. நான் பார்த்துக் கொள்கிறேன்.. அப்புறம்.. மலர் எப்படி போக போகிறாய்?

“எப்போவும் போலே வண்டி தான் மேடம்..”

“சரிம்மா.. செழியன் பார்த்து அனுப்பி வை.. நான் வருகிறேன்..” என்று கிளம்பி போனார்.

அவர் செல்லவும், மலரை பார்த்த செழியன் சிரிக்க, அவனை பார்த்து மீண்டும் பழிப்பு காட்டினாள்.

மலர் “சார்.. பில்ட் அப் எல்லாம் பலமா இருக்கே.. எவ்ளோ லஞ்சம் கொடுத்தீங்க..”?

“அவங்க சொன்னது எல்லாம் உண்மை.. எல்லாம் கூடிய சீக்கிரம் நீயே புரிஞ்சிப்ப.. “ என்றவன்,

“மலர், இப்போதைக்கு நான் என் காதலை சொல்லி இருந்தாலும் , கல்யாணம் பற்றி என்னால் இப்போதைக்கு பேச முடியாது. உனக்கு தெரியும் இல்லியா? தற்போது தொல்லியல் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன். இது மிகவும் முக்கியமான ஆராய்ச்சி. இது சம்பந்தமாக நான் அடிக்கடி நிறைய வெளி ஊர்களுக்கு சென்று வர வேண்டி இருக்கிறது. அதனால் இந்த Ph.D முடியும்வரை என்னால் உன்னோடு அதிகம் நேரம் செலவழிக்க முடியாது.

அதனால் நாம் மற்றவர்கள் அறியும் அளவு பழக வேண்டாம். இப்போ எப்படி ஒரு சக lecturer ஆ பேசி பழகிட்டு இருக்கோமோ அப்படியே இருக்கலாம்... சரியா?”

“சரிங்க.. சார்” என,

“ஹேய்.. நான் உன்ன லவ் பண்ணி, செல்ல பேர் எல்லாம் வச்சு கூப்பிடுறேன்.. உன்னோட சம்மதம் கிடைச்சதுக்கு அப்புறம் கற்பனைலே நம்ம பசங்களுக்கு என்ன பேர் வைக்கலாம் என்ற அளவில் யோசிச்சுட்டு இருக்கேன்.. நீ இன்னும் என்னை சார் சொல்லிட்டு இருக்க.. ? இது டூ bad.. “

“ஹலோ.. ஸ்டாப்.. ஸ்டாப்.. உங்க கற்பனையா நிப்பாட்டுங்க.. உங்களுக்கு கல்யாணம் எப்ப, எப்படி பண்றது என்பதை கற்பனை பண்றதுக்கு  தான் பெர்மிசண் கொடுத்து இருக்கேன்.. பசங்க பத்தி யோசிக்கிறது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்.. இப்போவே உங்க கற்பனை குதிரைக்கு புல் ஸ்டாப் போடுங்க.. “

“விழி.. இது எல்லாம் அநியாயம்மா.. நானே இன்னும் ஆறு மாசம் ஆகுமே என் வாழ்க்கைக்கு உன்னை வரவேற்க அப்படின்னு கவலையா இருக்கேன்.. நீ என் கனவ கூட கண்ட்ரோல் பன்றியே... என்னம்மா .. இப்படி பன்றீங்கலேம்மா?”

“சார்.. உங்க மூளையோட ரிமோட் கண்ட்ரோல் எல்லாம் இப்போ என் கைக்கு வந்தாச்சு.. அதனாலே.. அடிக்கடி உங்க கனவுகளுக்கு எடிட்டிங் + சென்சர் கட் இருக்கும்..  பார்த்து பக்குவமா இருந்துக்கோங்க... “

“டேய்.. செழியா.. உனக்கு நேரமே சரி இல்லை டா.. “ என்று புலம்பியவன்,

“மலர்.. உனக்கு இனிமேல் நைட்லே கால் பண்ணி பேசுறேன்.. நீயும் பேசணும்.. உன்னோட ஏர்டெல் , என்னோட ஜியோ ரெண்டும் தான் நம்ம காதல் பயிர் வளர்க்க போகுது. அதுக்கு நிறைய தண்ணி அதான் டாப் அப் பண்ணி வச்சுக்கோ.. சரியா..”

“சரிங்க எசமான்.” என பணிவுடன் கூற,

“அடிங்க..” என்றவன், “சரி நீ.. கிளம்பு.. நிறைய நேரம் ஆகிவிட்டது..”

“நீங்க கிளம்பலையா?”

“இல்லைமா.. நான் நம்ம பசங்க பாஸ்கட் பால் ட்ரைனிங் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு அவங்க கிளம்பவும் கிளம்பறேன்...”

“சரி நான் வரேன்..” என்று கிளம்ப,

அவளோடு பார்கிங் வரை வந்தவன், அவள் வண்டி அருகில் போகும்போது,

“மை விழி..” என அழைக்க, திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.. யாரும் இல்லாததை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

பிறகு அவனை முறைக்க, அவனோ சிரித்தபடி அவன் வண்டி சைடு பாக்ஸ் திறந்து ஏதோ எடுத்தவன்,

அவள் அருகில் வந்து “மை ஸ்வீட் லவ்...  இன்றைய இனிமையான நாளின் நினைவாக .. ஒரு பரிசு...” என்று ஒரு கிப்ட் கவர் கொடுக்க, வெட்கத்தோடு வாங்கி கொண்டவள், பின் அதை பார்த்து இனிமையாக அதிர்ந்தாள்..

ஹாய் friends.. சாரி..  லாஸ்ட் வீக் அப்டேட் கொடுக்க முடியாயததுக்கு.. இப்போ எல்லாம் அடிக்கடி SL CL ( அதாங்க சிக் லீவ் , casual லீவ்) போட்டுட்டு இருக்கேன்.. மன்னித்து விடுங்கள்.. முடிஞ்ச வரை அப்டேட் மிஸ் ஆகாம கொடுக்க ட்ரை பண்றேன்.. & மக்களே.. ஒரு வழியா செழியனுக்கு பிடித்த நதியா இமேஜ் போட்டுட்டேன்.. இந்த அப்டேட் எப்படி இருக்குன்னு உங்க கமெண்ட்ஸ்க்காக வெயிட் பண்றேன்.. நன்றி..

தொடரும்!

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.