(Reading time: 33 - 65 minutes)

வாடா..நல்லவனே..எப்பப் பாரு லேட்..அதுக்கொரு சாக்குப்போக்கு..நீயெல்லாம் திருந்தவே மாட்டடா..”

“ஹி ஹி...ரொம்பப் பாராட்டாத டா..ஒரே ஷை யா இருக்கு”

“அடிங்...போடா வெண்ணை...எப்படிடா இப்படி இருக்க முடியுது..எல்லாத்தையும் உதிர்த்து விட்டுட்டு அப்படியே இருக்க...காலேஜ் டேஸ் ல சரி,,,இப்பவும் அப்படியே இருக்கியே டா”

“டேய் மதன்...அதெல்லாம் ஒரு வரம் டா...இல்லைன்னா வாழ்க்கைல குப்பை கொட்ட முடியாது டா...அதும் இந்த சென்னைல, ஆபீஸ் டென்ஷன்...வீட்ல போனா அங்க டென்ஷன்...ஈட்டிக்காரன் டென்ஷன்...என்று அடிக்கிக்கொண்டே போக,

“ஸ்டாப் ஸ்டாப்...என்னடா  ஈட்டிக்காரன் டென்ஷனா...ஏண்டா, கந்து வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கியா?

“ அது வந்து...பேங்க் லோன் டா..அதைதான் டீசண்டா கந்து வட்டி ன்னு சொன்னேன்..பின்ன என்னடா..பேங்க் ல சம்பளம் ஏறுன அடுத்த செகண்ட் லோன் அமௌன்ட் பிடிச்சிடராங்களே..அதாண்டா அப்படி சொன்னேன். குட்டியூண்டு பிளாட்...அதை வாங்கறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போகுது டா..ஹ்ம்...அதாண்டா சொன்னேன். சரி அதை விடுடா..வீட்டுல அம்மா அப்பா எல்லாம் நல்லாருக்காங்களா...சிஸ்டர், குட்டி மாஸ்டர் எல்லாம் எப்படி இருக்காங்க”

“டேய் ய்ய்ய்ய், கொஞ்சம்மாச்சும் மூச்சு விட்டுப் பேசு..எல்லோரும் நல்லாருக்கோம்..உன் வீட்டுல எப்படி?

“ம்ம்...எல்லாரும் நல்லாருக்கோம் டா..நமக்குதான் பொண்ணு ஒண்ணுமே செட்..... “டேய் அங்க பாருடா...ஏதோ பிகரு மைக்கோட..என்று வெங்கட் எழப்பார்க்க, அவனை அழுத்தி அமர்த்தியவன், “அது ஏதோ டிவி சானல் ல இருந்து காதலர் தினத்திற்காக பேட்டி டா..நீ உட்கார்..என்றான் மதன்

“அது எப்படி உனக்குத் தெரியும்? வேறே எதாச்சும் இருக்கும்...வா வா நாமளும் தலையைக் காமிச்சிட்டு வரலாம்”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்..அந்தப் பொண்ணு என்கிட்டே வந்து கேட்டுச்சு...உங்களோட காதல் அனுபவத்தைப் பத்தி  சொல்லலாமான்னு...நான் ஆர்வமில்லைன்னு சொல்லிதான் அனுப்பினேன்...அதோட நீயும் அங்க போகக் கூடாது.” என்று மதன் கூற, வெங்கட் அவனை எரித்து விடுவது போலப் பார்த்தான்.

“ஏண்டா...நீயெல்லாம் ஒரு மனுஷனாடா...இருந்து இருந்து உன்கிட்ட வந்து கேட்டிருக்காங்க பாரு...ச்ச நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டியேடா...”அலுத்துக்கொண்டான் வெங்கட்

“என்ன பெரிய வாய்ப்பு..இதெல்லாம் பெரிய விஷயமா? நாமெல்லாம் இப்ப நல்ல பொசிஷனுக்கு வந்திட்டோம..இன்னும் காதல் கத்திரிக்கான்னு பேசிட்டு இருந்தா நல்லாவாடா இருக்கும்” மதன் சொல்ல இடைமறித்தான் வெங்கட். “நிறுத்து...என்ன பெரிய இவனாட்டம் பேசிட்டே போற..இல்ல தெரியாமதான் கேட்கறேன்..நீ காதலிச்சதே இல்லையா? உன்னோட அனுபவத்தைச் சொல்லியிருக்கலாமில்ல.. நம்ம மூஞ்சியெல்லாம் டிவி ல பேட்டி குடுக்கும்போது வந்தாதான் உண்டு டா”

“ப்ச்’..அதை விடுடா..வேற பேசலாம்..நாம எவ்வளவு நாள் கழிச்சு மீட் பண்ணியிருக்கோம் என்று ஆரம்பித்தவர்கள்,நேரம்போவது தெரியாமலே பேசிக்கொண்டிருந்தார்கள்.

மதனும் வெங்கட்டும் ஒன்றாகப படித்தவர்கள்.பள்ளியிறுதியில் தொடங்கிய நட்பு இன்று வரை நீடிக்கிறது. இவர்கள் க்ரூபில் இன்னும் ஐந்து ஆறு பேர் உண்டு..அனைவரும் மதுரை வாசிகள். எல்லோருமே திருமணமாகி, குழந்தை, வசதி வாய்ப்பு என்று ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியான உயரத்தில் தான் உள்ளனர். என்றாலும் நட்பு விடுபடாமல் வாரம்தோறும் ஞாயிறு அன்று சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

என்ன வேலையிருந்தாலும் சரி, உள்ளூரில் இருந்தால் டாண் என்று மூன்று மணிக்கு ஒரு குறிப்பிட்ட தெருவில் சந்தித்து முதலில் கிரிக்கெட் விளையாடுவார்கள்., பின்பு உட்கார்ந்து அரட்டை என்று பொழுதைக் கழித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். இது ஒரு வாரம் ஓடி ஓடி உழைப்பது, டென்ஷன் போன்றவற்றிலிருந்து அவர்களுக்கான பூஸ்ட், ஒரு ரிப்ரெஷ்மென்ட்..இதை மிஸ் பண்ணுவது நமது வெங்கட் மட்டும்தான்..அவன் குடும்ப சூழ்நிலை காரணமாக மதுரையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டான்.

பேசிக்கொண்டே இருக்கும்போதே இருட்டி விடவே, அந்த டிவி சானல் கடையை எடுத்து வைக்க ஆயத்தமாகி இவர்களைக் கடந்து சென்றார்கள். அதைப்பார்த்துக்கொண்டிருந்த வெங்கட், மதனிடம், “ உனக்கும் தான் காதல் கதை இருக்குதே..அதுவும் அவங்க தலைப்புக்கு ஏற்ற மாதிரி...உன் மனசுக்குள் உள்ளதை சொல்லியிருக்கலாமே” என்றவன் மதனை ஊன்றிப் பார்த்து  “நிஜமாவே நீ அவளை மறந்திட்டியா...அந்த வலி உனக்கு இருக்கா இல்லையா” என்றான்

சற்றே திடுக்கிடலோடு அவனைப் பார்த்த மதன், “அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சுடா..அதைப்பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தா வாழ்க்கை ரசிக்காது வெங்கட்..எப்பவாச்சும் தோணும் தான்..ஆனா அது வலியைத் தருதா இல்லையான்னு எனக்குத் தெரியலை டா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.