(Reading time: 33 - 65 minutes)

தியாவிற்கு நல்ல நீண்ட கூந்தல்..அழகாக பின்னலிட்டு பூச்சூடி இருப்பாள். அன்றும் அப்படித்தான் வந்திருந்தாள். குழந்தையைப் பார்த்து விட்டுத் திரும்புகையில் மதனின் அம்மா வரவே, தியாவின் அம்மா அவரோடு மரியாதை நிமித்தம் பேசிக்கொண்டிருக்க, தியா திரும்பி நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

அப்பொழுதான் உள்ளே நின்ற மதன், தியாவின் பக்கவாட்டுத் தோற்றம் பார்த்து ஒரு நிமிடம் உறைந்தான். இவள் எப்படி இங்கே..யோசிக்கையிலேயே லேசாகத் தியா திரும்ப, ஏமாற்றத்தோடு உள்ளே சென்றான். போகும்போதே தியாவை நன்றாகவே பார்த்துவிட்டுத் தான் சென்றான்.

ஏனெனில் மாயாவிற்கும் இதே போல் கூந்தல், பின்னல் எல்லாம் உண்டு..பக்கவாட்டுத் தோற்றம் மாயா போல் இருக்கவே இவனுக்கு வியப்பு.

இதில் மதன் எதிர்பாராத விஷயம் என்னவென்றால், பெண் பார்க்கச் சென்றது இந்த தியாவைத்தான். அக்கா அஜிதா, நல்ல பெண் என்று  சொல்லி, இவர்களின் சமூகமாகவும் இருக்கவே பேசி முடித்து விட்டார்கள்.

மதனுக்குத்தான் இரட்டை மனதாக இருந்தது. நண்பர்கள் எல்லோரும் வற்புறுத்தவே சம்மதித்து விட்டான். எங்கே,,,,சம்மதிக்க வைத்து விட்டார்கள்.

திருமணம் நிச்சயம் செய்தாயிற்று.. அன்று அவனுக்கு ஒரு போன்...அதுவும் மாயாவிடமிருந்து.. திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றும், தான் மதனைக் கட்டிக்கொள்ள சம்மதம் என்றும் கூறினாள் மாயா.. அதிர்ந்தான் மதன்.

“என்ன விளையாடுகிறாயா மாயா..இப்போது வந்து இப்படி சொல்ற..உனக்கென்ன பைத்தியமா? நான் எத்தனை தடவை உன்னிடம் கேட்டேன். எத்தனை வருடம் உனக்காக் காத்திருந்தேன். அப்பவெல்லாம் கண்டுக்காம இருந்து விட்டு, ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்த பிறகு இப்படிச் சொல்கிறாயே..நியாயமா?

“மதன்..அதெல்லாம் எனக்குத்தெரியாது..இவ்வளவு நாள் எனக்குப் புரியல..ஆனா நீ கைவிட்டுப் போறேன்னு தெரிஞ்சதும் என்னால ஏத்துக்க முடியல..ப்ளீஸ்..எப்படியாவது இதை நிறுத்திடு மதன்..நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” கெஞ்சினாள் மாயா

மதனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறித்தான் போனான், ஆனால் அவன் வளர்ப்பு...சரியான பாதையில் சிந்திக்க வைத்தது.

“முடியாது மாயா..ஒரு பெண்ணிற்கு வாக்குக் கொடுத்துவிட்டு என்னால் துரோகம் செய்ய முடியாது “என்று முடிவாகக் கூறி போனை வைத்து விட்டான்.

நிச்சயம் ஆன பிறகு முதன்முதலாக தியாவுக்கு போன் செய்து பேசியபோதே அவள் ஒரு அம்மாகோண்டு என்று புரிந்து விட்டது. அவள் அன்னை சொல்வதே வேத வாக்கு..அதை மீறி எதுவும் செய்ய மாட்டாள் என்று புரிந்து விட்டது. எனவே தான் வாங்கி வந்த பரிசுப் பொருளான செல்லை அவள் பெற்றோர் அனுமதியோடு தான் கொடுத்தான்.

பிறகு வந்த நாட்களில் தியாவிடம், தன் முந்தைய காதலைப் பற்றிச் சொல்லிவிட்டான் மதன்.முதலில் அதிர்ச்சியான தியா அதை அப்படியே ஏற்றுக்கொண்டாள். அவள் அப்படித்தான்.

தியாவின் குடும்பம் மிகச் சிறியது..ஒரு அக்கா மட்டுமே அவளுக்கு..அவரும் திருமணம் முடிந்து கோவையில் இருக்கிறார். அவர்களோடு பெங்களூருக்கு ஒரு டூர் போக நேர்ந்தது தியாவிற்கு..ஊர் சுற்றியபிறகு, தன்னவனுக்கு எதாவது பரிசு தர வேண்டுமென்ற உந்துதல் அதிகமாகியது. கையில் இருந்த காசு கொஞ்சமே..மற்றவர்களிடம் கேட்கவும் தயக்கம்..எனவே இருந்த காசுக்கு ஒரு ஆண்கள் உபயோகிக்கும் சிறு பர்ஸ் ஒன்றை வாங்கிகொண்டாள்.

ஊருக்கு வந்தபின்பு அதனைப் பரிசாகக் கொடுத்தவள், “இங்கே பிரிக்காதிங்க வீட்டுக்குச் சென்று பிரித்துப்பாருங்கள்..அதோட இந்தப் பர்சோட மதிப்பு கொஞ்சம் கம்மி தான்..தப்பா நினைக்காதிங்க..ஆனா இது நான் ஆசைப்பட்டு வாங்கிருக்கேன்..ப்ளீஸ் வாங்கிக்கோங்க” எனக் கெஞ்ச,

மதனோ, “ஹேய், இதுல என்ன இருக்கு..பரிசு என்பது கொடுப்பவங்க மனசப் பொருத்தது தானே தவிர, அதனோட மதிப்பைப் பொருத்தது இல்லை..புரியுதா? என,

“இல்லை..நீங்க இது வரைக்கும் காஸ்ட்லி கிப்டா குடுத்திருக்கீங்க..நான் மட்டும் இப்படி...”

“ அதான் சொல்லிட்டேனே தியா..எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை..நீ குடுத்த முதல் கிபிட்..என்னன்னு பாக்க ரொம்ப ஆசையா இருக்கு..பார்த்திட்டு சொல்றேன்..பட் இட் இஸ் வெரி ப்ரேஷியஸ் டு மீ..ஓகே வா” என்று புன்னகையோடு கூறி விட்டு சென்றான் மதன்.

வீட்டிற்கு சென்று பிரித்துப் பார்க்க, ஒரு குட்டிப் பர்ஸ்..அதன் ஒவ்வொரு அறையினுள்ளும் ஒரு பேப்பர் துண்டு...அனைத்துமே மதனுக்கு மிக மிகப் பிடித்த விஷயங்கள். அதில் ஒன்றில் கிரிக்கெட் பற்றிய தகவல்கள்..அடுத்து வேர்ல்ட் கப் வின்னேர்ஸ் லிஸ்ட், அடுத்ததில் காமராஜரின் படம் ஒன்று, அடுத்து மதனின் இஷ்ட தெய்வத்தின் படம் இப்படி மதனுக்குப் பிடித்த பல விஷயங்கள் சம்பந்தப் பட்ட பேப்பர் கட்டிங், மற்றும் புகைப்படம் என்று அனைத்து இடங்களிலும் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.