(Reading time: 33 - 65 minutes)

தன் அப்படியே உறைந்தான்..பேச்சுவாக்கில் அவளிடம் சொல்லிய விஷயங்கள் தான் அனைத்துமே..ஆனால் சின்னச் சின்ன விஷயம் கூட ஞாபகத்தில் வைத்து அதனையே பரிசாக...ஹய்யோ இவ்வளவு அன்பா என்று தோன்றியது மதனுக்கு..இதைப் போய் அவள் மதிப்பு போட்டாளே..

மறுநாள் அவளைச் சந்திக்கும் போது இறுக்கமான முகத்தோடு தான் இருந்தான் மதன்.

“என்னங்க, கிபிட் பிரிக்கலையா..அல்லது பிடிக்கலையா.?

அப்போதும் மதன் அமைதியாக இருக்கவே, அவளோ “அப்பவே நினைச்சேன்..யார் கிட்டயாவது காசு வாங்கி வேறே எதாச்சும் வந்கிருக்கலாம்னு..ஆனா நானே குடுக்கனும்னு நினைத்ததால் தான் இப்படி..சாரிங்க..”என்றாள்

கண்கள் லேசாகக் கலங்கியதைப் பார்த்த மதனுக்குத் தாளவில்லை.

“ஹேய் லூசு.. இதை விட சிறப்பா ஒரு கிபிட் யாராலையும் குடுக்க முடியாது தெரியுமா? எவ்வளவு கலெக்ஷன்..இதுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப..சூப்பர்.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டு கூற, அவள் முகத்தில் ஆயிரம் வார்ட்ஸ் பல்ப் எரிந்தது.

தியாவின் கண்கள் மிக மிக அழகான பெரிய கண்கள். அது மகிழ்ச்சியில் மேலும் விரிய, “எப்பா..எவ்வளவு பெரிய கண்ணு,,,இன்னும் விரிக்காத...லேசா பயமாயிருக்கு என்று கிண்டல் பண்ணி அவளை சிரிக்க வைத்தான் மதன்.

அதன் பின்னர் அவ்வப்போது மாயாவின் நினைவுகள் பின் சென்று தியாவின் நினைவுகளை அவன் நினைவுப் பெட்டகம் சேமிக்கத் தொடங்கியது.

ப்போதும் அடி பட்டதுமே உடனடியாக மதனின் மனம் தேடியது தியாவைத் தானே...அப்போ மாயாவின் நினைவுகள் அவன் மனதிலிருந்து அகன்று விட்டது என்று ஆகிறதா? இப்போது வரை, மதனுக்கு காதல் வலி தான் தருமோ என்று தான் நினைத்திருக்கிறான். ஆனால் என்றுமே அதை ஆராய்ந்ததில்லை. இன்று வெங்கட் கேட்கவும் தான் அவனுக்கு இந்த ஆராய்ச்சி.

மாயா மறைந்து அந்த இடத்திருக்கு தியா வந்து விட்டாளா என்றால் அதையும் அவன் மனம் இன்று வரை ஏற்றுக்கொள்ள வில்லை.

ஆனால் தியா கிடைக்க, தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதில் மதனுக்கு ஐயமில்லை

நினைவுகள் தியாவைச் சுற்றியே வந்தது மதனுக்கு...

அழகான பரிசு கொடுத்த தியாவை தானும் இம்ப்ரெஸ் செய்ய முடிவு செய்த மதன், போனில் பேசத் தொடங்கிய நூறாவது நாளைக் கொண்டாடிட முடிவு செய்தான். அதன்படி, கடையில் சந்திக்க ஏற்பாடு..

“ என்ன ஆச்சு உங்களுக்கு...திடீர்னு மீட் பண்ணனும்னு சொல்லறீங்க..என்ன விஷயம்” கேட்டாள் தியா

“ நீங்க மட்டும் தான் கிபிட் குடுப்பிங்களா..நாங்க குடுக்க மாட்டோமா..என்ற மதன் தனது பரிசைக் கொடுத்தான். ஒரு ரோஸ் பூ..டெய்ரிமில்க் சாக்கலேட்...அத்தோடு ஒரு கவிதையோடு கூடிய கார்ட்.

கவிதையைப் பார்த்து அசந்து நின்றாள் தியா...

     யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைய என் இதயம்

     வெறும் கல்லால் கட்டப்பட்ட சத்திரமல்ல....உன்

     நினைவுகளைக் கொண்டு உனக்காக என்னில் வரைந்த 

     உயிரோவியம்...அதில் ஓவியமாய் நீ...

கவிதையைப் படித்த தியாவிற்கு சொல்ல வார்த்தைகள் இல்லை..கண்கள் கண்ணீரில் மிதக்க, அந்த நிமிடம் முடிவெடுத்தாள்..இவன் காதலை விட நூறு மடங்கு காதலிப்பேன் என்று.

அப்படித்தான் வாழ்கிறாள் அவள்..அது மதனுக்கும் தெரியும்..ஆனால் இதுவரை தன் காதலை முழுமையாகப் பிரதிபலித்திருக்கிரானா என்றால் அது மதனுக்கேத் தெரியாது.

மதன் , அவளின் போட்டோ ஒன்றை எப்போதும் வைத்திருப்பான். அதை எடுத்துக்கொண்டு வெங்கட் வீட்டுப் பால்கனியில் வந்து அமர்ந்தான். அவள் உருவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவன் மனதில் மீண்டும் சாரலாய் அவள் நினைவும் செயல்களும்..

திருமணம் முடிந்தது.. மதன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளும் அவளிடம் பத்திரமாக இருக்கும்.முதன் முதலாக சென்ற சினிமா டிக்கெட் முதல் சாக்கலெட் பேப்பர், பாப்கார்ன் கப் முதற்கொண்டு ஹோட்டல் பில் வரை பத்திரமாக வைத்திருப்பாள். இன்னும் சொல்லப்போனால், எந்த நாளில் எந்த படத்திற்கு, அல்லது கோவிலுக்கு , மால் போன்ற இடங்களுக்கு சென்றோம் என்பதும் நாள் தேதி நேரம் வரை சரியாக மனனம் செய்து வைக்குமளவிற்கு மதன் மேல் காதல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.