(Reading time: 33 - 65 minutes)

தனையே பார்த்துக் கொண்டிருந்த வெங்கட், “ஏன் மதன்..நீ அவங்களைத் திரும்பப் பார்த்தியா?”

“ம்ம்..பார்த்தேன்..ரொம்ப நாள் கழிச்சு...கொஞ்சம் உடல் நிலை சரி இல்லைன்னு கேள்விப்பட்டேன்..என்றவன் சற்று நேரம் அமைதியாக எதிரில் தெரிந்த கடலை வெறித்தான்.

வெங்கட்டும் நண்பனின் அமைதியைக் கலைக்காமல்அமர்ந்திருந்தான்

சற்றுப் பொறுத்து “ மதன், என்னடா,,,பீலிங்க்ஸ் சா “என,”ச்ச ச்ச, சும்மா நினைச்சுப் பாத்தேன்..சரி டா கிளம்பலாம்..முடிஞ்சா நாளை மீட் பண்ணுவோம்..சாயங்காலம் ஏழரைக்குத்தான் எனக்கு ட்ரைன்...சரியா?” என்றவாறே ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டு எழுந்தான்.

கூடவே எழுந்த வெங்கட்,” வாடா.. நான் உன்னை டிராப் பண்ணிட்டு கிளம்பறேன் என்றவன் சற்றுப் பொறுத்து, “ நான் இதுவரை சும்மா சைட் அடிச்சதோட சரி டா..சொல்லப்போனா நமக்கு எந்தப் பொண்ணும் செட் ஆகலைடா...ஆனா இந்தக்காதல்னு வந்திட்டாலே ஒண்ணுசேரலைன்னா நிச்சயமா வலிதான் மிச்சமாகும் போல..இல்லையா மச்சான்” என,

அப்போதும் அமைதியாகவே நடந்தான் மதன். வெங்கட்,”இதுல இந்த டிவி காரங்க வேற சும்மா கிடக்கற சங்க ஊதறா மாதிரி கேள்வி கேட்டு தொல்லை பாண்ணினா மறந்து போன உணர்வுகள தட்டி எழுப்புற மாதிரி ஆகாதா? என்று சீரியசாகப் பேச,

“டேய், ரொம்ப சீர்யசா பேசாதடா...நீதான் பேசறியான்னு சந்தேகமா இருக்கு” மதன் சிரித்துக்கொண்டே கூறினான்.

“ஆமாடா...நான் பேசினா உனக்குக் காமெடியாவே தான் தோணுமா? சீரியஸா பேசவே கூடாதா?” என்றவாறே காரில் அமர்ந்து ஓட்டத் துவங்கினான்.

“அப்புறம் டா...சிஸ்டர் எப்படி இருக்காங்க, குட்டி எப்படி இருக்கான்?

“அவங்களுக்கென்ன, ரொம்பவே நல்லாருக்காங்க” என்று ஒருமாதிரி குரலில் கூற, வெங்கட் ஆச்சர்யமாகத் திரும்பிப் பார்த்தான்.

ஏனெனில் எப்போதும் மதனின் மனைவி குழந்தை பற்றிப் பேசினாலே உற்சாகமாகி விடுபவன் அவன். இப்போது தென்படும் சலிப்பு...யோசனையாய் அவனைப் பார்த்தவன் மேற்கொண்டு ஒன்றும் கேட்காமல், காரைச் செலுத்தத் தொடங்கினான்.

மதனும் அமைதியாகவே வெளியில் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான். ஆனால் வெங்கட் கேட்ட கேள்வி அவன் மனதில் எழுந்து கொண்டிருந்தது..கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவள் நினைவு..அந்த டிவி பெண் கேட்டது போல் முதல் காதலில் வலிதானோ? என நினைக்கத் தோன்றியது மதனுக்கு...அவன் நினைவலைகள் பின்னோக்கி நகர்ந்தன..

து மதுரையில் புகழ்பெற்ற கல்லூரி...கணிதப் பிரிவின் வகுப்பறை..அன்றைய பாடப் பிரிவிற்கான ஆசிரியர் வரவில்லை..எனவே வகுப்பறை அரட்டையோடு களைகட்டத்தொடங்கியது. பொதுவாக கணிதப்பிரிவு மாணவர்கள் என்றாலே “படிப்ஸ்” என்று மற்றவர்கள் கூறினாலும், இவர்கள் அடிக்கும் கூத்துக்கும் பஞ்சமிருக்காது. என்ன...வெளியில் தெரியாமல் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்கி விடுவதில் வல்லவர்கள்.

புரொபசர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர்..அன்று மதன் வகுப்புக்குள் நுழைகையிலேயே, போர்ட் அருகே ஒருவன் நின்று கொண்டு எதையோ எழுதுவது போல் நின்றிருந்தான். கிசுகிசுப்பாக ஒரு குரல் வேறு, சீ ஸ்டூடெண்ட்ஸ், ஹென்ஸ் தி தியரம்..என்று கேட்கவே அருகில் சென்று பார்த்தால் ஒரு செடி வரைந்து பாகம் குறித்து அதனைக் கணிதத்தில் வரும் தியரம் என்று கூறிக்கொண்டிருந்தான் அவன். அருகில் சென்று அவன் முதுகில் ஓன்றைப்போட்ட மதன்,”டேய் என்னடா பண்ற”

“ஹம்மா...ஏண்டா..சொல்லிட்டு அடிடா...வலிக்குதுல்ல...நான் நம்ம ஸ்லோமேன் மாதிரி பாடம் நடத்தறேண்டா”

அவன் சொல்லவும் வகுப்பறையில் இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க, இவனோ, “அவர் எப்பவும் போர்ட் க்கு தானேடா பாடம் எடுப்பாரு அதான் நானும் அப்படியே எடுத்தேன்”

“அது சரி டா, அதைக் கொஞ்சம் சத்தமா சொல்லேண்டா...என ஒருவன் கூற, அவனோ, இப்படிப பேசினாதான் ஸ்லோ மேன்...இல்லன்னா பாஸ்ட் மேன் டா,,பாத்தியா....அவர் மாதிரியே நுணுக்கமா படம் போட்ருக்கேன்” என்று தான் வரைந்த படத்தைச் சுட்ட மறுபடியும் “கொல்” என சிரிப்பு சப்தம் கேட்டது. தொடர்ந்து “டேய் வினோத்,அப்படியே ஐ மேன், சிரட்டை அப்புறம் நம்ம படிக்கோழி மாதிரி கொஞ்சம் நடிடா...” நேரம் போகும்.மறுபடியும் சிரிப்பு சப்தம் அலைமோத ,இப்படியே பொழுது போனது. ப்ரோபாசர்களின் இயல்பு மற்றும் உருவத்தை வைத்து பெயர்கள் வைத்து அழைப்பப்து தானே கல்லூரி மாணவர்களின் வழக்கம்...அப்படியே வழுக்கைத் தலையை, சிரட்டை என்றும் ஸ்டீபன் என்பவருடைய பெயரை அப்படியே தமிழ் படுத்தி படிக்கோழி எனவும் பெயர் சூட்டியிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.