(Reading time: 33 - 65 minutes)

ன்று வரை போன் வராதது மதனுக்கு உறுத்தியது..இப்படி இருப்பவள் அல்லவே தியா..தன் முதல் காதல் தெரிந்தும் தன்னை உயிரினும் மேலாக நேசிப்பவள் அவள்..முகம் பார்த்து செயல்படுபவள்..எப்படி இப்படி இருக்கிறாள்...எதனால் என்ற குழப்பத்தினால் தான் மதன் கடற்கரைக்கு சென்றது..அங்கு தான் முதல் காதல் வலியா? வழியா? என்று கேட்டதும் இவனும் சிந்திக்கத் தொடங்கினான்.

வெளியில் கார் சப்தம் கேட்கவே நினைவலைகள் அறுபட்டு எழுந்து உள்ளே வந்தான் மதன்.

“என்னடா இன்னும் தூங்கலியா...?கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் வெங்கட்’

“இல்லைடா...தூங்கல...நீ போன விஷயம் என்னாச்சு...முடிஞ்சதா?

“ம்ம்..இல்லன்னா இவ்வளவு நேரத்துக்கு வர முடியாது டா...அது சரி..டி வி கூட போடாம என்னடா பண்ணின இவ்வளவு நேரம்”

“அது...தியாவப் பத்தி நினைச்சிக்கிட்டிருந்தேன் டா..ஒரு சின்ன பிரச்சினை..பட் சால்வ் ஆகிட்டு..ஆனா நான் தியாவ கொஞ்சம் ஹர்ட் பண்ணிட்டனொன்னு தோணுது..அதான்...யோசிச்சேன்”

“என்னடா நீ..சிஸ்டர் அதிர்ந்து கூட பேச மாட்டாங்க...உன் கூட சண்டையே போட மாட்டாங்க ..அப்புறம் எப்படி”

“தப்பு என் மேல தான் வெங்கட்..குழந்தையை வச்சிகிட்டு சமாளிக்கறது அவ தானே..நான்தான் புரியாம பேசிட்டேன்..இப்ப அதனால என்கிட்டே ரெண்டு நாளா அவ பேசலடா...நாந்தான் தகவல் சொன்னேன்..முன்னெல்லாம் அவள் கேட்கும்போது சில சமயம் எரிச்சல் வரும்..சும்மா போன் பண்றான்னு...பட் இப்பதாண்டா புரியுது..நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேன்னு”

அவனையே பார்த்துக்கொண்டிருந்த வெங்கட், “கேட்கறேன்னு தப்பா நினைக்காத, முதல் காதல் வலியான்னு தெரியலன்னு சொன்னியே...இப்பவும் அப்படி சொல்ல முடியுமா?”

ஒரு நிமிடம் அமைதியான மதன்...”நிச்சயமா இல்லைடா...உனக்கு ஒண்ணு தெரியுமா? மாயாவோட பிறந்த நாள் அன்னைக்கு விஷ் பண்ண முடியலன்னு கொஞ்சம் அப்செட் ல இருந்தேன் டா..தியா என்ன பண்ணா தெரியுமா? நீங்க கண்ணை மூடிக்கிட்டு ,மனசுக்குள்ள விஷ் பண்ணுங்க, அவங்களுக்கு வாழ்த்து சொல்லுங்கன்ன்னு சொல்லி , கண்ணைத் திறந்ததும் அவ போட்டோல பிறந்தநாள் வாழ்த்துகள் னு போட்டோஷாப் பண்ணி காண்பிச்சா...அவ்ளோ பரந்த மனசு தியாக்கு..ஆனா நான்தான் இவ்வளவு நாள் லவ் பெயிலியர் னு நினைச்சிக்கிட்டு இருந்திருக்கேன்.

“என்னடா சொல்ற...அது பெயிலியர் தானே...ஆனா தியா சிஸ்டர் உனக்கு வரமா கிடைச்சிருக்காங்க டா..இல்லன்னா இப்படி இருக்க வாய்ப்பே இல்லை”

“ஆமாடா,,,அவ என்னோட வாழ்க்கையில் கிடைத்த வரம்தான்..இன்னும் ஒண்ணு தெரியுமா..மாயா உடம்பு சரி இல்லைன்னு கேள்விப்பட்டு, அவ என்ன ஆனா..என்ன பண்ணறான்னு தெரியாம ரொம்ப தவிச்சப்போ போய் பாத்திட்டு வர சொன்னா தெரியுமா...மாயாவுக்காக கடவுள் கிட்ட பிரார்த்தனை வேற பண்ணராடா..அதனால என் வாழ்க்கையில் கிடைச்ச பொக்கிஷம் டா தியா.அவ கிட்டப் போயி கோபப்பட்டேன்..அதுவும் அவ பேசாம இருக்கறது என்னைப் பாதிக்கும் போது தான் அவ அருமை எனக்குத் தெரியுது..அதோட மாயா என்னை ஏன் விரும்பலைன்னு இதுவரை எனக்குத் தெரியலை..ஆனா கடைசியில் அப்படி ஏன் சொன்னான்னும் தெரியலை..ரெண்டு கை தட்டினால் தானே ஓசை..அதனால் தான் இது பெயிலியர் இல்லைன்னு சொல்றேண்டா..”

“அப்புறம் என்னடா...போயி முதல் வேலையா சிஸ்டர் கிட்ட சாரி கேளு..காலையில் எழுந்ததும் போன் பண்ணு...புரியுதா? இப்பப் போய் தூங்குடா”

ஓகே டா குட் நைட் .

பொழுது விடிந்ததும் முதல் வேலையாக தியாவிற்கு கால் செய்ய போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு அன்றைய மீட்டிங்குக்கு நேரமாகவே கிளம்பி விட்டான். கிளம்பி வெளியில் வரும்போது போன் வந்தது..அக்காவிடமிருந்து...டேய் மதன்..கிளம்பிட்டியா..தியாக்கு ரொம்ப காய்ச்சல் டா..உனக்கு சொன்னா நீ மீட்டிங் ஒழுங்கா பண்ண மாட்டேன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டா ..அவ போன் சார்ஜ் இல்லாம இருக்கு..அதன் அவ பேசலை..இப்ப கொஞ்சம் பரவால்ல அவளுக்கு..நீ இன்னிக்கும் கிளம்பாம இருக்கக் கூடாதுன்னு தான் போன் பண்ணேண்டா..வந்துருவேல்ல..என அக்கா கேட்க, ஒரு பக்கம் தியாவின் உடல் நிலை குறித்து கவலைப் பட்டாலும், தன மீது கோபமில்லை எனத்தெரிந்ததுமே உற்சாகம் தானே வந்து விட்டது மதனுக்கு.”.வந்திடறேன் கா...சீக்கிரமே..இப்ப டைம் ஆச்சு பை” என போனை வைத்தவன் ரெயில்வே ஸ்டேஷன் வந்தான்.

வண்டியில் ஏறி அமர்ந்தவன் கண்களில் அந்த டிவி சானலின் பெண் பட, அவளும் இவனைப் பார்த்தாள். நேற்றுக்கும் இன்றைக்கும் மதனின் முகத்தில் வித்தியாசத்தைப் பார்த்த அவள் இவன் அருகில் வந்து “என்ன சர்..இன்னிக்கு சொல்லலாமா உங்க காதல் பத்தி...எனக்கேட்க,

“தாராளமாய்...முதல் காதல் மறக்க முடியாது தான்..ஆனால் அது வலின்னு நிறைய பேர் சொல்றாங்க..ஆனால் அது வலி இல்லை..ஒரு நல்ல வழியை தான் கொடுக்கும். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்என்ற படிப்பினையைக் கொடுக்கும்..தோல்வியடைந்த காதல் மறக்க முடியாத நினைவுகளா மட்டும் தான் இருக்க முடியும்..ஸ்கூல் டேஸ்,காலேஜ் டேஸ் மாதிரி மனதில் இருக்குமே தவிர, காயத்தையோ, வடுவையோ ஏற்படுத்தாது. ஏன்னா, காதல் என்பது காதலிக்கப்படுவதில் தான் இருக்கு..இதை நான் உணர்வுப் பூர்வமா அனுபவிக்கிறேன். என் மனைவி மூலமா..நம்மை நேசிக்கறவங்களோட அன்புக்கு முன்னாடி எதுவுமே வலியாக முடியாது. அது புது வாழ்க்கைக்கான வழியாகத்தான் இருக்க முடியும்” என்று முடித்தான் மதன்.

கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கை தட்ட அந்தப் பெண், “இவ்ளோ அருமையா பேசற நீங்க நேத்து எஸ்கேப் ஆயிட்டீங்களே சார்..எனிவேஸ், தாங்க் யூ பார் தி டிபிரென்ட் ஒப்பீனியன்”

மதனின் மனம் முழுவதும் தியா நிறைந்து வழிந்தாள்...மனம் கொள்ளாச் சிரிப்புடன், அன்றைய பயணச் சீட்டு முன்னதாகக் கிடைக்குமா என்று தேடத் தொடங்கினான். எதற்காகத் தெரியுமா...தியாவின் முதல் காதலனின் காதலைச் சொல்வதற்காக..

காதல் தோற்பதில்லை...வேறொரு வடிவில் என்றும் வாழும்.  

This is entry #93 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.