(Reading time: 53 - 105 minutes)

ப்பொழுதும் அவனை துரத்தும் அந்த மாஃபியா கேங்கிடம் இருந்து முக்கிய பாதுகாப்பு இந்த மாறிப் போன முகம் தான்…. மதுரன் இறந்துவிட்டான் என அவன் டிபார்ட்மென்டில் இருந்தே அறிவித்த பிறகு, அவனை கொல்ல துரத்திய கேங்க் சிறுது காலம் சும்மா இருந்தது போலும்…..ஆனால் திரும்பவும் அவர்கள் மதுரனை தேட தொடங்கியது போல் சில தகவல்கள்…. மதுரன் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு எங்கோ பதுங்கி இருக்கிறான் என அவர்கள் நினைக்கிறார்கள் என்பது புரிகிறது…..ஆனால் எப்படி தன் அடையாளத்தை மாற்றியிருக்கிறான் என அவர்களுக்கு தெரியவில்லை போலும்….தேடுது அந்த கூட்டம் மதுரனை….சோ மதுரனின் இப்போதைய முக்கிய பாதுகாப்பு இந்த நிக்கி என்ற முகம் தான்….

இதில் மதுரன் சாயலில் இருக்கும் அவனது தம்பி இனியனுக்கோ மதுரனின் குடும்பத்திற்கோ மதுரன் உயிருடன் இருக்கிறான் என்று தெரிய வைத்தால்…..அவர்கள் வெளிப்படையாக நிக்கிதான் மதுரன் என சொல்லிக் கொள்ளவில்லை எனினும்….நிக்கியுடன் அதிகமான அக்கறையுடன் பாசத்துடன் பழகினாலே மதுரன் தான் நிக்கி என்பதை அந்த மாஃபியா கூட்டம் கண்டு பிடித்தவிடக் கூடும்….நிக்கியை trap செய்யவென அவனது தம்பி இனியனையோ அவனது அம்மாவையோ கூட கடத்தலாம்…ஏன் கொலையே செய்யலாம் அந்த கேங்…..

அதோடு நிக்கிக்கென குடும்பம் இருக்கிறதென தெரிந்தால் இந்த sm3  க்ரூப்பும் அவர்களுக்கு ப்ரச்சனை உண்டு பண்ணலாம்….ஆக அவர்களுக்கு மதுரன் தான் நிக்கி என தெரிவிக்க கவர்மென்ட் நிக்கிக்கு அனுமதி கொடுக்கவில்லை…..அந்த காரணம் சரி என்பதால் நிக்கியும் தன்னை தன் வீட்டிற்கு வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை….இசைக்கும் அது சரி என பட்டாலும்…..இனியனிடமிருந்து விடை பெற்ற அந்த நேரம்….நிக்கியும் என் அண்ணாதான் என்று இனியன் சொல்லிய அந்த நிமிடம் ரொம்பவும் மனம் தவித்து தத்தளித்துப் போனது இவளுக்கு.

தனக்கே இப்படி இருக்குதே நிக்கிக்கு எப்படி இருக்கும் என்று வேறு இன்னுமாய் உருகிறது.

“அவனுக்கு எப்பவும் நான்னா ரொம்ப இஷ்டம்….ஆனா நான் இல்லாமலே போய்ட்டா கூட எனக்காக…. என் குடும்பத்துக்காக… இவ்ளவு அக்கறைப்டுவான்னு பார்க்றது உண்மையிலேயே….” தன் தம்பி இனியனைப் பத்தி பேச தொடங்கி அதற்கு மேல் எதுவும் சொல்ல வராமல் நிக்கி நின்று போனது இவளுக்கு ஞாபகம் வருகிறது. இந்த உணர்வை நிக்கியால் என்று தன் தம்பியிடம் சொல்ல முடியும்?

எப்டியோ உன்னை கஷ்டபடுத்தினா என்னை வெளிய வர வைக்கலாம்னு என் தம்பிக்கே தோணிட்டுனா அந்த மாஃபியா கேங்குக்கு தோண எவ்ளவு நேரம் ஆகும்? அதான் உன் சேஃப்டிக்காக உன்னை கொஞ்சம் ஃபோர்ஸ் செய்து மேரேஜ் செய்துகிட்டேன்……அதே ரீசன்காகதான் நம்ம மேரேஜ்க்கு ஈசியா கவர்மென்ட்ல இருந்து அக்சப்டென்ஸ் கிடச்சதுமே… இந்த விஷயத்தை இனியனிடம் சொல்ல  நிக்கிக்கும், அதை கேட்க இனியனுக்கும் ஆசை இருக்கும் தானே….

நிக்கி தங்களது திருமணத்தின் போது தன் அம்மாவை  கொண்டு வந்து அவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டது ஞாபகம் வருகிறது.  தன் குடும்பத்துக்காக அவன் ஏங்குவதன் வெளிப்பாடுதானே அது….

எதையும் இவளால் தன்னவனுக்கு மீட்டுக் கொடுக்க முடியுமென்று தோன்றவில்லை…..ஆனால் அவளால் கொடுக்க முடிந்த அத்தனை அன்பையும் அத்தனை சந்தோஷத்தையும் அவனுக்கு கொடுக்க போகிறாள் இவள்.

கோவாவில்

“சார் மன்னிச்சுக்கோங்க சார்…இனி இப்படி தப்பு நடக்காது….என்னை நம்பிதான் என்  குடும்பம் இருக்கு சார்…” அந்த போலீஸ்காரர் எல்லா வகையிலும் கெஞ்சி விடை பெற, அந்த லாயரும் காணமல் போக…இப்பொழுது சதீஷ் தனிமையில்.

அவன் அருகில் அடுத்த அறையில் இருந்தவன்….. ஒரு 6 அடி உயர மானிடன் மெல்ல எழுந்து தன் அறையிலிருந்த தண்ணீர் பானையை நகர்த்துகிறான்…அடியிலிருந்த மணலில் மொபைல்.

எங்கோ அழைத்து “பாய் சாப்….ஒரு பெரிய மீன் மாட்டிருக்குது…..பிடிச்சு வித்தோம்னா கோடில புரளலாம்” என்றான் அவன்.

“அந்த வெள்ளக்காரன் போரீஸ்னு ஒருவன் நமக்கு மால் சப்ளை செய்வான்ல….அவன் கூட்ட லீடரையும் மகனையும் போலீஸ் போட்டு தள்ளிட்டு….அவனுங்கள போலீஸ்ல மாட்டிவிட்டது ஒரு இந்தியாகாரன்….அவன பிடிச்சு போட்டு தள்ளுனாத்தான் எல்லாவனும் அந்த பழைய லீடரோட தங்கச்சிப் பையன முழுசா தலைவனா ஏத்துப்பாங்கன்னு சொல்லி…..அந்த இந்தியாகாரன அந்த கூட்டம் தேடுதுன்னு சொன்னாம்ல….அவங்க தேடுற இந்தியாகாரன் அடுத்த ரூம்ல இருக்கான்….நைட் சாப்ட போறப்ப அவன போட்டோ எடுத்து அனுப்புரேன்…..அவன் ஏதோ சர்ஜரிலாம் செய்து மூஞ்ச மாத்திட்டானாம்…..இந்த ஃபோட்டாக்கே நீ பெருசா கேளு….எனக்கு 30 லட்சம் கொடுத்துடு….பெரிய இடம் மறக்காம பெருசா கேளு….”

இப்படி பேசிக் கொண்டிருந்தவன் அறையில் முன்பே ஒழித்து வைக்கப் பட்டிருந்த மைக்கின் மூலம் நடப்பது அனைத்தையும் அந்த ஜெயிலின் மறுபக்கத்தில் இருந்த ஒரு அறையில் சில போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

நைட் சாப்பாடு நேரத்தில் சதீஷை தான் சொல்லியபடி  போட்டோ எடுத்து அந்த அவன் அனுப்புவதையும் சதீஷோ மற்ற அதிகாரிகளோ தடுக்கவே இல்லை.

சோ இப்போது அந்த மாஃபியா கூட்டத்தினைப் பொறுத்தவரை…..சதீஷ்தான் அந்த கேபாவை காட்டிக் கொடுத்தவன். நிக்கியாக மாறி இருந்த மதுரின் தலைமறைவு வாழ்க்கைக்கு காரணமான கத்தி இப்போது சதீஷ் தலைக்கு மேல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.