(Reading time: 53 - 105 minutes)

தனால தான்…அப்ப அவன் லைஃப்ல என்ன நடக்குன்னு எங்களுக்கு தெரியாது…..எப்பவாவது தான் பேசுவான்…நாங்க அவனோடவங்கன்னு யாருக்கும் காமிச்சுக்க கூடாதுன்னு அவன் நினைக்ற மாதிரி இருக்கும்…எங்க சேஃப்டிகாகன்னு நினைக்கிறேன்…”

“ஆமா…அப்படித்தான்….” ஒத்து சொன்னாள் இசை. பேங்களூர் வாழ்க்கையில் மதுரன் இவளிடமும் அப்படித்தானே இருந்தான்.. பேசாது பார்வைக்கு கூட படாது என.

கோவாவில் சதீஷ் பலம் கொண்ட மட்டும் சத்தமாக சொன்னான் இப்போது. “சார் தண்ணி வேணும்….”

போலீஃஸ்காரர் திரும்பாமல் நடந்தார்.

இப்பொழுது மூன்றாவது முறை கத்தினான் சதீஷ்.

எரிச்சலாகி திரும்பி வந்தார் இவன் அருகில் அவர்.

கதவிற்கு இப்புறம் இவன். அப்புறம் போலீஸ்.

“சார் தண்ணி….”

“என்ன நாயே திமிரா? “

“சார் தண்ணி….”

“நான் என்ன நீ வச்ச வேலைக்காரனா?’

கம்பிகளின் இடையே கையை நீட்டி இவன் கழுத்தை பிடித்தார் அந்த போலீஸ் மேன்.

ங்கு தொடர்ந்தான் இனியன்.

“அம்மா அவன் யூஎஸ்ல அரெஸ்டாகி ரிடர்ன் ஆகவுமே அழுது பிடிச்சு ரெசிக்னேஷன் கொடுக்க சொன்னாங்க….அவனும் கொடுத்துட்டேன்…இப்ப திரும்ப  ஐஏஎஸ் ட்ரை பண்றேன்னு சொல்லிருந்தான்…..பட் அப்ப ஒரு நாள் கால் பண்ணி யூஎஸ் இஷ்யூ சால்வ் ஆகிட்டு அந்த ப்ரச்சனைக்கு காரணமான கிரிமினல்க்கு டெத் பெனால்டி எக்‌ஸிக்யூட் செய்துட்டாங்க இனி நோ ப்ராப்ளம்….. அந்த ஜாப்லயும் தான் இப்ப ப்ரச்சனை இல்லையே அதை கூட நான் கண்டின்யூ செய்யலாம்… ஒரு பொண்ணை லவ் பண்றேன்….மேரேஜ் செய்ய ஆசைப் படுறேன்னு உங்களைப் பத்தி ஓவர் த ஃபோன் டீடெய்ல் சொன்னான்…..ஃபோட்டோ கூட காமிக்கலை…. மறு நாளே ஊட்டிக்கு எங்கேஜ்மென்டுக்கு வாங்க…சீக்ரமா வெட்டிங் வைக்கனும்னு சொன்னான்…. அதோட எங்க ஃபேமிலில குழந்தை பிறந்தா தாத்தா பாட்டி அந்த பேபிக்கு செயின் போடுவாங்க…அப்படி ஒர் செயினும் கொண்டுவாங்க வர்றப்பன்னு சொன்னான்…”

இப்பொழுது இனியன் இவளைப் பார்த்தான்.

“ஆமா இதெல்லாம் தெரியும்…” இனியன் என்ன சொல்ல வருகிறான் என யோசித்துக் கொண்டே சொன்னாள் இசை.

“அவன் ஜாபை ரிசைன் செய்துட்டேன்னு சொல்லியிருந்தான்….பட் இப்ப திடீர்னு ஜாபை கன்டின்யூ செய்யலாம்னு சொன்னான்….அடுத்து பொண்ணைப் பத்தி ஃபோன்ல சொன்ன மறுநாளே எங்கேஜ்மென்ட் உடனே கல்யாணம்னு அவசரப் படுத்தினான்…அவன் பொய் சொல்றவன் கிடையாது….. இப்படி பிஹேவ் செய்றவனும் கிடையாது….ஆனா இந்த பீரியட்ல அவன் வித்யாசமா நடந்துகிட்டான்..”

“அது பொய்லாம் கிடையாது இனியன்….நிஜமாவே மதுர் ரெசிக்னேஷன் கொடுத்துறுந்தாங்க…..பட் சேஃப்டி ரீசன்னு சொல்லிட்டு அவங்க டிபார்ட்மென்ட் இப்போதைக்கு நீ சபதடிகல் லீவ்ல இரு…ப்ரச்சனை முடியவும் ரெசிக்னேஷனை அக்செப்ட் செய்றோம்னு சொல்லி இருந்தாங்க….அந்த  யூஎஸ் ப்ரச்சனை சால்வ் ஆகிட்டதால, வேணும்னா அந்த ஜாபை கன்டின்யூ செய்துக்கலாம்னு மதுர் வீட்ல சொன்னாங்க….உங்க அண்ணா பொய் சொல்ற டைப்லாம் கிடையாது….

எங்க மேரேஜ்க்கு எங்கப்பாவோட முழு சம்மதம் இல்லை…அவங்க ஏதோ ப்ளாட் செய்து எங்களை பிரிக்க பார்க்றாங்களோன்னு ஒரு தாட் எங்களுக்கு இருந்துட்டே இருந்துது….அதான் தன் பக்க சிச்சுவேஷன் க்ளியரானதும் அதே நேரம் என் அப்பாவும் வெட்டிங்கு சம்மதமா பேசவும்…மதுர் மேரேஜுக்கு அரேஞ்ச் பண்ணினாங்க….வேலை இல்லைனு சொன்னா உங்க வீட்ல வெட்டிங்க்கு ஒத்துக்க மாட்டீங்கள்ல…அதான் அந்த  IFS ஜாபை உங்க வீட்ல சொல்லிருப்பாங்களே தவிர…எப்படியும் இன்டர்வியூ க்ளியராகி IAS போஸ்டிங் கிடைக்கும்னு அவங்களுக்கு ரொம்ப கான்ஃபிடென்ஸ் இருந்துச்சுது…” மதுரனின் அன்றைய நிலையை விளக்கினாள் இசை. அவளுடையவனை குறை சொல்வது அவன் தம்பியே என்றாலும் இவள் எப்படி கேட்டுக் கொண்டிருப்பதாம்..?

“ஓ..ஓகே….ஆனா இதெல்லாம் உங்களுக்கு தெரியுது அண்ணி…எங்களுக்கு அப்போ டீடெய்லா மதுரண்ணா பத்தி எதுவுமே தெரியாது….அது எங்கட்ட இருந்து அவன் விலகி இருந்த காலம்….அப்றம் அவன் இல்லாம போய்ட்டான்….திடீர்னு நீங்க வந்து நிக்கீங்க அதுவும் எங்க வீட்டு சாயல்ல குழந்தையோட….மதுர் சேஃப்டிகாக எல்லாத்தையும் மறைச்சவன்…..எங்களை அவன் சொந்த ஃபேமிலின்னு காமிச்சுக்காம இருந்த மாதிரி அவனுக்கு ஏதோ ஒரு சூழ்நிலைல உங்க கூட மேரேஜாகி அதையும் அவன் வெளிய காமிச்சுக்காம இருந்திருக்கலாம்…அந்த ப்ரச்சனை சரியானதும் உங்களை வெளியரங்கமா எங்களுக்கு அறிமுக படுத்த நினைச்சு மேரேஜ்னு சொல்லி வர சொலிருக்கலாம்…அப்பவே அவிவ் பிறந்திருக்கலாம்னு நினச்சுட்டேன்…..அவிவ்குட்டிக்கு இப்ப 7 வயசு கிட்ட ஆகுதே….அந்த செயின் வேற கேட்டுருந்தான் இல்லையா….?” தான் புரிந்து கொண்ட விதத்தை சிறு தயக்கத்துடன் சொன்னான் இனியன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.