(Reading time: 53 - 105 minutes)

நீ போன்னு பேசுனாலும் அது ஒன்னும் மாறப்போறது இல்லையே….”

ஒரே நேரத்தில் சந்தோஷமும் வலியும் சோகமும் இசையுள்.

“இந்த டைம்லதான் கூர்க்ல வச்சு செங்கிஸ்கானுக்கு உங்க காதல் விஷயம் தெரிஞ்சிது….” தொடர்ந்தான் சதீஷ்.

“பணம் இல்லாத இடத்துக்கு பொண்ணை கல்யாணம் செய்து கொடுக்க அவருக்கு தைரியம் கிடையாது….அவர் செய்ததை அவர் மாப்பிள்ளை தன் மகளுக்கு செய்துடுவான்னு பயம்…. அதே நேரம் உன் மேல பாசம் அதிகம்ன்றதால….உன் மனசு கஷ்ட படுற எதையும் செய்யவும் அவருக்கு முடியலை……

சரி அவர் எதையாவது கெடுத்து வச்சுற கூடாதுன்னு அப்ப தான் முதல் தடவையா அவரைப் போய் பார்த்தேன்….உன் கல்யாணத்துக்கு டவ்ரியா மதுருக்கு 150 சி கொடுக்கேன்னு சொன்னேன்….எந்த குழப்பமும் இல்லாம சந்தோஷமா கல்யாணம்கிற முடிவுக்கு வந்துட்டார்…. “

“என்னது???? “ அரண்டு போனாள் இசை. இவளுக்காக இவளது அப்பாவிடம்….அதுவும் பணத்துக்காக அவனை கைவிட்டுவிட்டுப் போன அவனது அப்பாவிடம்….உயிர்வரை அடித்துக் கொள்கிறது.

.“மதுர் இதுக்கு ஒத்துகிட்டாங்களா…??”

“ப்ச் மதுருக்கு இது நடந்ததே தெரியாது….அவர் இந்த விஷயத்துல நவிக்கும் அண்ணன்…..செங்கிஸ்கான் வாய அடைக்க நான் பணம் தர்றேன்னு தனிப்பட்ட வகையில மதுர்ட்ட நிறைய தடவை கேட்டுப் பார்த்திருக்கேன்…..ஒரு நாளும் ஒத்துகிட்டதே கிடையாது…. ” ஒரு கணம் மௌனம் காத்தவன்

“அந்த ஆக்சிடெண்ட் ரெண்டு நல்லவங்களை காவு வாங்கிட்டு…”  என்றான்.

 அவன் வாயிலிருந்தே வார்த்தைகள் வரட்டும் என மௌனமாக பார்த்திருந்தாள் இசை.

“பை த வே….நான் இந்த டவ்ரியைப் பத்தி செங்கிஸ்கான்ட்ட  பேச போறப்ப என் கூட வந்தது நவி.”

“வாஆஆஆஆஆஆஆஆஆட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்????!!!! நிச்சயமாக இதை இசையால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

“ம்….அதுதான் நவி…..அவளுக்கு உன்னையும் மதுரையும் ரொம்பவே பிடிக்கும்…..நான் இப்டி டவ்ரி பத்தி பேசப்போறேன்னு அவளுக்கு தெரியாது…..மேரேஜுக்கு உன் அண்ணனா அந்த செங்கிஸ்கானை சம்மதிக்க வைக்க போறேன்னு நம்பி வந்தா அவ. இந்த மாதிரி விஷயத்துக்கு ஃபேமிலியா போனாதான் வெயிட்டேஜ் இருக்கும்னு அவளுக்கு ஒரு நம்பிக்கை…..மே பி என் அப்பா ன்னு இருக்ற ஒரு ஆளை பார்க்கனும்னு அவள் நினைச்சாலும் நினச்சிருக்கலாம்…..”

நவ்யா நியாபகத்தில் வலித்துப் போய் நின்றாள் இசை.

“ கெட்டவன்னு தெரிஞ்ச ஒருத்தனை கல்யாணம் செய்யக் கூடாதுங்கிறதுல அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கைதான்….ஆனா கல்யாணதுக்கு பிறகு ஹஸ்பண்ட் சரி இல்லைனு தெரிய வர்றப்ப என்ன செய்யனும்னு அவளுக்கு தெரியலை….என் மனசால அவளை தவிர நான் வேற யாரையும் நினச்சது கூட இல்லைனு அவளுக்கு நல்லாவே தெரியும்……அதோட அவளுக்கும் என் மேல காதல் உண்டே… ஆனா அதுக்காக என் பாவ சம்பாத்யத்தை அனுபவிக்கவோ….அதுல என்னை சப்போர்ட் செய்யவோ எல்லாத்துக்கும் மேல அவிவ் விஷயத்தில் ரிஸ்க் எடுக்கவோ அவ தயாரா இல்லை…”

நவ்யாவைப் பற்றி இன்னுமாய் விளக்க முற்பட்டான் அவன். இசைக்கும் நவ்யா அன்று வயிற்றில் அடித்து அழுத கோலம் ஞாபகம் வந்து நவ்யா மனம் ஏதோ புரிவது போல் இருந்தது.

“அதுக்கு பிறகு நவிக்கும் செங்கிஸ்கானுக்கும் அப்பப்ப பேச்சு வார்த்தை நடந்திருக்குது….. இவ என்ன பேசினானு தெரியலை அவர் கொஞ்சம் நவிட்ட சாஃப்ட் ஆகிட்டார்….அவர் ரகசியத்தை உன் அம்மாட்ட போட்டு கொடுக்காத வரைக்கும் எல்லாம் ஓகேன்ற மாதிரி நினச்சுட்டார் போல….”

நவ்யா தன் வீட்டிற்கு வந்திருக்கும் வேளைகளில் அவளது அப்பா அவளிடம் காட்டிய அக்கறை இப்பொழுது நல்லிசை மனதில் வருகிறது……சோ அது மருமகள்ன்ற பாசமா….? இல்லை பணக்காரனோட வைஃப்ன்ற எண்ணமா? இவள் அப்பா என்னதா இருந்திருக்கிறார்……150 கோடி தாரேன்னதும்….. மனம் ஓடும் திக்கில் அழுகை அதுவாக எட்டிப் பார்க்கிறது

“அழாத….அதுவும் என் முன்னால அழுது வைக்காத…”

சதீஷின் குரலில் அதுவாக அடங்கிப் போகிறது அழுகை உள்ளுக்குள்.

“அழுகைய அசட்டை செய்ற சக்தில்லாம் என்னைக்கோ முடிஞ்சு போச்சு….” அவன் முனங்க அவனை வேதனையும் பரிதாபமாகவும் பார்த்தாள் தங்கை.

“அந்த டைம்ல என்னை வேற ஒரு கேங்ல இருந்து குத்திட்டாங்க…..”

சதீஷ் எதை சொல்கிறான் என இவளுக்கும் புரிகிறது.

“அந்த நிலமையில நவி என்னை பார்த்துட்டும் கண்டுக்காம போய்ட்டா…..அது எனக்கு ஃபர்ஸ்ட் ஐ ஓபனர்.  எனக்கு ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சிது ….நவியை என் இஷ்டத்துக்கு கன்வின்ஸ் செய்ய முடியாதுன்றதுதான் அது. அதுக்கு பிறகு தூரத்துல இருந்து கவனிச்சாலும் அவளை பெர்சிவியர் செய்றதை விட்டுட்டேன்…. அவிவை பார்க்க முடிஞ்சா போதும்னு ஏக்கம் வேற ஒரு பக்கம்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.