(Reading time: 53 - 105 minutes)

தீஷ் சிரிக்காமல் சீண்ட இவள் முறைத்தாள்.

“நான் நல்லாத்தான் பாடுவேன்….” வெட்டினாள்.

“கண்டிப்பா….காம்பேர் டு மீ….யெஸ்…ஆனா மாப்ளய யோசிச்சுட்டு சொல்லு…..செம வாய்ஸ்ல அவருக்கு…” பெண் மனம் இதற்குள் கணவன் நினைவில் கரைந்திருந்தது. கூடவே சதீஷ் வாழ்க்கையும் நன்றாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என ஏக்கமும் வருகிறது.

“சரி இப்ப சொல்லு….எதுக்காக என்னை தேடின…?”

“ரெண்டு விஷயம்….என்னைப் பத்தி அவிவ் பத்தி யோசிக்றதை விட்டுட்டு உங்களுக்குன்னு ஒரு நல்ல லைஃபை அமைச்சுகோங்கன்னு சொல்ல வந்தேன்…..அதோட எதுக்காகவும் மதுர் வீட்டை டிஸ்டர்ப் செய்யாதீங்கன்னும் சொல்ல நினச்சேன்….”

“இப்பவும் இவ்ளத்தை கேட்ட பிறகும் எல்லாத்தையும் மறச்சு….வேற பொண்ணை கல்யாணம் செய்துட்டு போய் வாழ்க்கை நடத்துன்னு சொல்லுவியா….?” இவளை அர்த்தமுடன் பார்த்தான் அவன்.

“அது….இப்ப நீங்க தான் பழசை எல்லாம் விட்டுடீங்கல்ல….அப்றம்…..அப்றம்….அப்ரூவரா மாறி….சரண்டர் ஆகிட்டீங்கன்னா….”

“இல்ல இசை இப்டி பேசாத….கேட்க கோபமா வருது….என் கூட இருந்து நான் சொன்னதை செய்துகிட்டு இருந்த பசங்க அவங்க….. அவங்கள மாட்டிவிட்டு நான் தப்பிச்சுகிறது பேரு மனம் திருந்துறதா….?”

என்ன சொல்லவென புரியாமல் பார்த்தாள் இசை.

“பழசெல்லாம் விட்டுட்டேன்தான்…..தப்பா சம்பாதிச்ச அவ்ளவு காசும் இப்ப ஆர்ஃபனேஜாவும்….முதியோர் இல்லமாவும்…..வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டி கொடுக்றதுக்காகவும்னு போய்ட்டு இருக்கு….போலீஸ்ட்ட சரண்டர் ஆகி, அவ்ளத்தையும் கவர்மென்ட்டுக்கு கொடுத்துடலாம் தான்….ஆனா ஒரு தகப்பனா அவிவ் மேல எனக்கு இன்னும் கடமை இருக்கு…..அவன் கல்யாணம் ஆகி செட்லாகுற வரை நான் ஃப்ரியா வெளிய இருந்தாகனும்….நீயும் மாப்ளையும் இருக்கீங்கன்னு நான் அவனை மொத்தமா கை கழுவிட முடியாது….ஆக இப்போதைக்கு என்னால இதுதான் முடியும்…. என் பசங்கள்ள போக ஆசைப் பட்டவங்கள அனுப்பி வச்சுட்டேன்….கூட இருக்க ஆசைப்பட்ட சிலர் என் கூட சேர்ந்து நான் இப்ப செய்ற  வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்காங்க…. என்னால முடிஞ்ச வேலை பார்த்து அதுல தான் என் செலவ பார்த்துக்கிறேன்…என் நிலையில இதைவிட வேற என்ன செய்ய முடியும்..?” அவளை அவன் உண்மையாகவே ஆலோசனை கேட்டான்.

“கடவுளை நம்பி அவிவை என்ட்ட விட்டுட்டு சட்டத்தை ஃபேஸ் பண்ணுங்கன்னு தான் சொல்வேன் நான்….ஆனா முடிவு நீங்க எடுத்ததா இருக்கனும்….நான் எதுக்கும் கம்பெல் செய்ய மாட்டேன்” இசைக்கு சடட்த்தை ஏமாற்றுவது சரியென்று தோன்றவில்லை….ஆனால் இப்போழுது எது முழுக்கவும் சரி என்றும் புரியவில்லை….சதீஷால் இறந்த குழந்தையின் அம்மாவின் மன நிலை எப்படி இருக்கும் என்ற ஒரு கேள்வி வேறு மனதில் ஓடுகிறது….

“நீ இப்ப சொன்னதைப் பத்தி யோசிக்றேன்…..சரியா…?” சதீஷ் இவளிடம் எதையும் மறுக்கும் எண்ணம் கூட கொண்டிருக்கவில்லை…

“ஆனா எதுனாலும் உங்க தங்கையா என் சப்போர்ட் எப்பவும் உங்களுக்கு உண்டு….என் வீட்டுக்கு நேர் வழியாவே வரலாம்….அதோட அவிவை எதுக்காகவும்  நானோ நிக்கியோ விட்டுகொடுக்கவே மாட்டோம்…..அவிவோட சேர்ந்து எங்க லைஃப் ரொம்ப நல்லாவே இருக்குது…..அதைப் பத்தி எதுவும் நீங்க குழப்பிகிடாதீங்க…..அதை சொல்லத்தான் முக்கியமா வந்தேன்…”

இப்பொழுது மீண்டுமாய் ஒரு புன்னகை சதீஷ் முகத்தில்.

“என் கூட உன் பேர், மாப்ள நேம்லாம் லிங்க் ஆகுறது சரியா வராதுமா……சரி இப்ப நீ கிளம்பு….ஆன்….அந்த மதுர் வீட்டு விஷயம்….அவன் எதுக்கு செய்றான்னு உனக்கு புரிஞ்சிட்டுபோல…..எனக்கு முதல்ல கொஞ்சம் கடியாதான் இருந்துச்சு…..விஷயம் புரிஞ்சதும் ரிலாக்‌ஸ் ஆகிட்டு…..நான் மதுர் சம்பந்தபட்ட யாரையும் எதுவும் செய்ய மாட்டேன்….. கடைசி காலத்தில் நவிக்கு இருந்த ஒரே சந்தோஷம் ஆறுதல் எல்லாம் மதுர் தானே…”

அவனை அப்படியே கொஞ்ச நேரம் பார்த்தபடி நின்றவள் இருந்த உணர்ச்சிப் பிடியில் எதையும் சொல்ல முடியாமல் தலையை மட்டும் மெல்லமாக ஆட்டி விடை பெற்றாள். திரும்பி நடக்க தொடங்கினாள்.

“நீ அந்த செங்கிஸ்கானை நினச்சு ரொம்ப மனசு வருத்தப்பட்டுகாத….முன்னால மாதிரி இல்ல….மனசுக்குள்ள கொஞ்சம் மாறிப் போய்தான் இருக்கார் மனுஷன்….நீ….நீ அவரக் கொஞ்சம் பார்த்துக்கோ…ஆள் தளர்ந்து போய் தெரியுறார்….”

எப்பொழுது திரும்பினாள் எப்படி அடைந்தாள் என்றெல்லாம் தெரியாது…. “அண்ணா….” அழுது வெடித்தபடி அவனை அணைத்திருந்தாள்.

‘கடவுளே எதுக்காக மன்னிப்புன்னு ஒன்னை வச்சிருக்கீங்கன்னு இப்ப தெரியுது….’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.