(Reading time: 53 - 105 minutes)

ந்த டைம்ல தான் உங்க ஆக்சிடெண்ட்….ஆக்சுவலி நான் ஒரு டிஸ்டன்ஸ்ல உங்களை ஃபாலோ பண்ணிட்டுத்தான் இருந்தேன்….. அது ஆக்‌ஸிடென்ட் கிடையாது……ப்ளான்ட் மர்டர் அட்டெம்ட்……. ஒரு ட்ரெக் கும்பலோட வேலைனு பின்னால தெரிய வந்துச்சு….மதுர் கூட அவங்களுக்கு எதோ ப்ரச்சனை போல…. அந்த டைம்ல நான் என் பசங்க ரெண்டு பேரு….உங்க பின்னால வந்துட்டு இருந்ததால உடனே ரெஸ்க்யூ செய்ய என்னல்லாம் முடியுமோ எல்லாம் செய்தோம்…..நீதான் குறைய சேதாரத்துல கைல கிடச்சவ……மதுர் கைல கிடைக்கப்பவே தெரியும் அவர் ரொம்ப நேரம் தாங்க மாட்டார்னு…..நவி கிடைக்கிறப்பவே……”

நெஞ்சை ஏதோ அழுத்த அழுதுவிடக் கூடாது என கையால் வாயை இறுக மூடிக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் இசை.

“இதுக்குள்ள போலீஸ் யார் யாரோன்னு ஸ்பாட்டுக்கு வந்துட்டாங்க…..நவியோட பாடியோட நான் கிளம்ப வேண்டியதாகிட்டு….”

“ட்ரெக் என்னோட முக்கிய பிஸினஸ்….கடைசில ஒரு ட்ரெக் மாஃபியாவாலே என் நவியை நான் லாஸ் செய்துட்டேன்….விதைச்சதை கண்டிப்பா அறுப்போம் சது…..அப்போ அது ரொம்ப வலிக்கும்னு நவி ரொம்ப அழுதுறுக்கா முன்னால….ப்ச் அது நிஜம்னு புரிய நான் அவளையே இழக்க வேண்டியதாகிட்டு….”

வலியோடு அவனைப் பார்த்திருந்தாள் இசை.

“ மூச்சுக் காத்தை தேடுற மாதிரி அவிவை தேடினேன் இந்த டைம்ல….நவியும் இல்லாம பிள்ளைக்கு சாப்பாடு கிடைக்குதோ இல்லையோன்னு கூட பயம் எனக்கு…..இதுல மதுர் இறந்த தகவல் கிடைக்கவும் நீ எப்படி சமாளிக்கிறியோன்னு வேற ரொம்ப கஷ்டமா இருந்துச்சு……அதான் உன் மேலயும் ஒரு கண் வச்சிருந்தேன் …. நீ அந்த செங்கிஸ்கான் கூட சண்டை போட்டுட்டு அவிவை போய் கையில எடுத்த….அப்பதான் அவிவ் எங்க இருக்கான்னு எனக்கு தெரியும்…..

ஆர்ஃபனேஜ்ல போய் அவன விடனும்னா…?? நவியோட கடைசி ஆசையே அவிவ் என் காசுல வளரக் கூடாது…என்னை மாதிரி வந்துடக் கூடாதுன்னு தான்….எனக்குமே தப்பு செய்றதோட வலி இப்ப ரொம்பவே புரிஞ்சிருந்துது….. அதான் அவிவ் உன் கைலயே இருக்கட்டும்னு தோணிட்டு…..அது அவிவ்காக மட்டும் எடுத்த முடிவு இல்ல….உனக்காகவும்தான்…..மதுரனை மறந்துட்டு இன்னொருத்தரை நீ மேரேஜ் செய்றது தப்புன்னு படலை….பட் அப்டி மறக்க முடியாதவங்களை கட்டாயபடுத்றது நியாயமாவும் தெரியலை….ஏன்னா அதோட வலி எனக்கும் தெரியும்….

 அதான் நீ அவிவை அடாப்ட் செய்ய ட்ரை பண்ணப்ப என்னால முடிஞ்ச எல்லாத்தையும் பிஹைன்ட் த ஸ்க்ரீன் செய்தேன்…. கண்டிப்பா ரொம்ப நியாயமான வழியில தான்….நீ சென்னைல செட்டிலான…..என் கண் எப்பவும் உங்க மேல இருந்துச்சு…..

செங்கிஸ்கான் உன்னை தேடுறப்ப அவர் கண்ணுல நீங்க கிடைக்காம இருக்க நீயே கொஞ்சம் செய்து வச்சிருந்த….என் பங்குக்கு நானும் பார்துகிட்டேன்…..அவர் உன்னைய நிம்மதியா இருக்க விடமாட்டார்னு தோணிச்சு….

நீ வேலைக்குப் போன இடத்துல நிக்கி உன்னை விரும்புறதை கவனிச்சேன்….முன்னாலன்னா நாலு தட்டு தட்டிருப்பேன்….இப்ப என்ன செய்யலாம்னு அவரை ஃபாலோ பண்ணிப் பார்த்தேன்….அவரும் தான் உண்டு தான் வேலை உண்டுன்னு இருக்ற டைப் மாதிரி தான் இருந்துச்சு….இதுல உனக்கும் அவர் மேல விருப்பம் இருக்ற மாதிரி தெரியவும்….”

“என்னது…?” அதிர்ந்து போனாள் அவள். எதை வைத்து இவன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தான் என புரியவில்லை நல்லிசைக்கு.

“ஆமா மத்த யாரவது உன் மேல கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் காமிக்ற மாதிரி இருந்தாலே அவ்ளவு இரிடேட் ஆவ…சண்டை போடுவ….இல்லைனா இடத்தை மாத்திடுவ…..நிக்கிய மட்டும் இக்னோர்தானே செய்த….மத்தபடி அமைதியா அதே இடத்துலதான் வேலை பார்த்த….அதுவும் உன்னை மட்டுமா சர்வன் வீட்டுக்கு ஷிஃப்ட் செய்த பிறகும் கூட….”

இசைக்குமே இது இப்பொழுதுதான் உறைக்கிறது….அதற்கான காரணமும் கூட புரிகிறதுதான். சின்னதாய் மலர்கிறது ஒரு முறுவல் பெண் இதழில்.

“அவிவ்காக கல்யாணம் வேண்டாம்னு யோசிக்றியோ….இப்ப என்ன செய்தா நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பன்னு நான் யோசிச்சுகிட்டு இருக்றப்பதான்…….நிக்கியே  கொஞ்சம் அதிரடியா கல்யாணத்தை ஏற்பாடு செய்தார்…..எனக்கு திருப்தியா இருந்துது…..”

“என்னை மிரட்டினது உங்களுக்கு திருப்தியா இருந்துச்சு என்ன?” இசையின் குரலில் சிணுங்கலும் உரிமை தொனியும். சதீஷிற்கு இவளால் என்ன தர முடியும் என தெரியாது ஆனால் ஒரு தங்கையை நிச்சயமாக தர வேண்டும்.

சதீஷ் சிரித்தான். “உனக்கு பிடிச்சுருக்கும் போது இதுல என்ன இருக்குது…..? வேணும்னா மாப்ளய பதிலுக்கு எதாவது மிரட்டி வை….அதுக்கு எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு…செய்திடுவோம்….”

“அப்டிங்கிறீங்க……அப்டி என்ன சொல்லி மிரட்டலாம்….?”

“வேறென்ன….என்னை ஹனிமூன் கூட்டிட்டுப் போங்க…..இல்லனா நான் பாடிடுவேன் அப்டின்னு சொல்லு….அலறிருவார்ல….?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.