(Reading time: 53 - 105 minutes)

ந்த செயின் அவங்க அவிவ்காகதான் கேட்றுப்பாங்க……ஏன்னா அவிவ் நவ்யாவோட குழந்தை…அது அவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கும்….” இனியனுக்கு இந்த விஷயம் தெரிந்திருப்பது நல்லது என படுகிறது இசைக்கு.

“வாட்? நவ்யாவோட குழந்தையா அவிவ்….? எங்க சித்தப்பா பொண்ணையா சொல்றீங்க….?” நம்பவும் முடியாமல் மறுக்கவும் இயலாமல் தடுமாறினான் இனியன்…இது நிச்சயம் இவன் எதிர்பார்க்காத ஒன்று.

ன் கழுத்தை பிடித்த போலீஸ்காரரின் கையைப் பிடித்து விரித்து தன் கழுத்தை விடுவிக்க முயன்றான் சதீஷ். அவர் இன்னுமாய் அழுத்தம் கொடுக்க இப்பொழுது நிஜமாகவே அவன் மூச்சுக் காற்றுக்காய் போராட வேண்டி இருந்தது.

அப்பொழுது அங்கு வந்தார் ஒரு லாயர். இன்னொரு குற்றவாளியை பார்க்க வந்தாரா? யார் ? எவர் ? எப்படி எதற்காக உள்ளே வந்தார் என தெரியவில்லை….

“ஹேய் விடுயா….விடு அவர “ என பாய்ந்து தடுத்தார் நடப்பவற்றை.

“அவர் யாருன்னு தெரியுமா?” வக்கீல் கேட்க போலீஸ்காரர் மட்டுமல்ல சதீஷுமே யார்டா இவன் ? என்ற லுக்கோடு அந்த லாயரைப் பார்த்தான்.

ங்கு நல்லிசை தொடர்ந்தாள்.

“ஆமா அவங்களுக்கு அப்பவே மேரேஜாகி அது ப்ரேகப்பும் ஆகிட்டுது…நவ்யாவுக்கு அவங்க ஹஸ்பண்டோட என்ன ப்ரச்சனைனு உங்க அண்ணாவுக்கு தெரியாது…..ஆனா நவ்யாவுக்கு குடும்பம்னு யாரும் இல்லைனு தோணக் கூடாதுன்னு உங்க வீட்டோட நல்ல ரிலேஷன்ஷிப் வரனும்னு மதுர் ட்ரை பண்ணிருப்பாங்க…..”

“இப்ப எல்லாம் புரியுது அண்ணி ஆனா அப்போ இது எதுவுமே தெரியாதில்லையா…? ஆனா நான் உங்களை லாஸ்ட் மீட்ல பேசுனதுல்லாம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல கூட உண்மைனு நினச்சு பேசுனது இல்லை…..மதுர்னு நீங்க நினச்சுகிட்டு இருக்ற நான் ஹர்ட் செய்தா ஆட்டமெட்டிகா உங்களை நேசிக்ற நிக்கி சார் கூட போய் சேருவீங்கன்ற எதிர்பார்ப்புல செய்ததுதான் அது…அது மட்டுமல்ல எல்லாமே…..சாரி ரொம்ப ஹர்ட் செய்துட்டேன்……”

“அது புரிஞ்சிது……அதான் முதல்லயே சொல்லிட்டனே…..சரி அத விடுங்க…..எனக்கு இப்ப அவிவ் ஸ்கூல் முன்னால சின்னதா ஆக்சிடெண்ட் ஆகி, நான் இருந்த அந்த ஹாஸ்பிட்டல்க்கு எப்படி நிக்கி இருப்பாங்கன்னு ப்ளான் செய்து வந்தீங்க..?”

“அது அப்படி இல்ல அண்ணி…முதல்ல உங்கள என் ஆஃபீஸ்ல பார்த்தப்ப நீங்க யாருன்னு தெரியாது…உங்க ஃபோட்டோ கூட நான் பார்த்தது கிடையாது அதுக்கு முன்ன…நீங்க மதுர்னு சொல்லி என்ட்ட சண்டை போட்டப்ப முதல்ல ஷாக்….தலைவால் புரியலை….ஏன்னா மதுர் ஆக்சிடென்ட்க்கு பிறகு உங்களைப் பத்தி எங்களுக்கு கிடச்ச ஒரே தகவல் உங்கப்பா உங்களுக்கு வேற மேரேஜ் செய்ய ஏற்பாடு செய்றாங்கன்னு தான்….அதனால இவ்ளவு வருஷத்துல நீங்க மேரேஜாகி செட்லாகிருப்பீங்கன்னு தான் நினச்சிருந்தேன்….

நீங்க சண்டை போட்டப்ப மெல்லதான் விஷயம் புரிஞ்சிது…..அதுவும் நான் அப்ப சொன்ன மாதிரி அவிவ் மதுருக்கும் உங்களுக்குமான  குழந்தை….நீங்க அண்ணா ஞாபகமா இன்னும் கூட தனியா அழுதுட்டு இருக்கீங்க..அதுவும் உங்க பேரண்ட்ஸோடயும் நீங்க இல்லைனு புரிஞ்சிது….அப்பவே டிசைட் செய்துட்டேன், உங்களுக்கு எப்படியாவது வேற மேரேஜ் செய்து செட்டில் செய்யனும்னு…அதுக்கு குழந்தை தடையாக இருந்தால் அவனை  எங்க கூட வச்சுகிடலாம்னு நினச்சேன்….

என்னை மதுரன்னு நீங்க தப்பா புரிஞ்சிகிட்டதால நானே அண்ணா மாதிரி ஆக்ட் செய்து உங்களுக்கு அண்ணா கூட உள்ள அந்த இமோஷனல் பாண்டை ரிமூவ் செய்தா நீங்க வேற மேரேஜுக்கு ஒத்துப்பீங்கன்னு  நினச்சேன்…ஏன்னா இத்தனை வருஷம் அண்ணாவையே நினச்சு வாழ்றவங்களை வெறுமன பேசி கன்வின்ஸ் செய்ய முடியாதுன்னு தோணிச்சுது…

அடுத்து அதைப் பத்தி ப்ரீட்ட பேசினேன். ரெண்டு பேருமா எப்படியாவது அவிவை காமிச்சு உங்களை எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்ட்டு, மதுரண்ணா அவன் ஃபேமிலிலாம் நல்ல டைப் இல்லைன்ற மாதிரி காமிச்சுகிட்டு, அதே நேரம் வேற ஃப்ரெண்ட் மூலமா உங்கட்ட மேரேஜ் பத்தி பேசி கன்வின்ஸ் செய்யனும்னு ப்ளான்…

உங்களைப் பத்தி விசாரிக்கத்தான் அவிவ் ஸ்கூல்க்கு வந்தோம் அன்னைக்கு…அப்பதான் உங்களுக்கு ஆக்சிடென்ட்….பதறிப் போய் நானும் ப்ரீயும் உங்க பக்கத்துல வர முன்னால…ஒரு பிஎம்டபிள்யு செக்யூரிட்டி வெகிகள் வந்து நிக்குது… யார் யாரோ வந்தாங்க…சட்டுனு உங்களை ஹாஸ்பிட்டல் கொண்டு போய்ட்டாங்க…அதுவும் சிட்டிலேயே ஹைலி சோஃபிஸ்டிகேட்டட் ஹாஸ்பிட்டல்….நீங்க யாரோ ஒரு ரிச் பெர்சன்…. அதுவும் ஹை என்ட் செக்யூரிடி சிஸ்டம் வச்சுறுக்கிற ஒருத்தரோட மானிடரிங்ல இருக்கீங்கன்னு தெரிஞ்சுது….

அந்த செக்யூரிட்டி வெகிகிளை பார்க்கவும், ஏற்கனவே முன்ன ஆக்சிடென்டுக்கு பிறகு மதுர் பாடின்னு வீட்டுக்கு கொடுத்தது ரொம்ப அடையாளம் தெரியாம இருந்ததால,  ஒரு வேளை அவனே எங்கயாவது ஹைடிங்ல இருக்கானோ…உங்களை கவனிச்சுகிட்டு இருக்கானோன்னு தோணிட்டு…

அப்படின்ற பட்சத்தில் அவன் மறைஞ்சு ஹாஸ்பிட்டலும் வந்திருப்பான்னு தான் ஹாஸ்பிட்டலுக்கு வர்றப்ப நினச்சேன்……அதனால நான் தான் மதுரன்னு வந்து, அடிபட்டிருந்த உங்களை தாறுமாற பேசினா, மதுரண்ணா எங்களுக்கு தெரிஞ்சி வெளிய வராட்டாலும் உங்கள சேர்த்துகிடவாவது உங்கட்ட வருவான்னு நினச்சோம்…பட் அங்க வந்த பிறகுதான் தெரியும் உங்களை மானிடர்  செய்றது, பார்த்துக்கிறது எல்லாம் நிக்கி சார்னும்….அவர் உங்களை காதலிக்கார்னும்……மதுரண்ணா இல்லைனதும் டிஸப்பாய்ண்ட்டா இருந்தாலும் நிக்கியை எங்களுக்கு பிடிச்சுது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.