(Reading time: 53 - 105 minutes)

திரும்பி வரும் வழியெல்லாம் போது சதீஷை நினைத்து அழுகையாக வந்தது  நல்லிசைக்கு. இனி எந்த வம்புக்கும் போக மாட்டான்தான்…..ஆனால் அவன் சூழ்நிலைக்கு முடிவு தான் என்ன???

அன்று இரவு நிக்கியிடம் “சதீஷ்ட்ட நான் நிக்கிய லவ் பண்றேன்னு சொன்னாலே  அவன் ரிலாக்‌ஸா ஃபீல் பண்ணுவான்னு நினச்சுதான் போனேன்…ஆனா இப்படி இருக்கும் அவன் நிலமைனு எனக்கு தெரியலை..” முடிந்த அளவு புலம்பிவிட்டு அவன் தோளிலேயே தூங்கிப் போனாள் நல்லிசை. நிக்கிதான் யோசனையில் தூக்கமின்றி…..

று நாள் அவள் போக விரும்பிய இடம் மதுரனின் வீடு. “இப்ப உடனே போகாத….கொஞ்சம் டைம் எடுத்துப் போ…..சதீஷைப் பார்த்துட்டு உடனே இங்க போனா….ஒரு வேளை சதீஷ் ஃபாலோ பண்ணினா கூட நல்லதுக்கு இல்லை….”  என சொல்லி நிக்கி தடுத்துவிட்டான்.

க சில நாட்கள் கழித்து அதிகாலை இசை போய் நின்றது மதுரனின் வீடு. காலிங் பெல்லை அடிக்கவும் கதவைத் திறந்த அவன் நிச்சயமாக இவளை எதிர் பார்க்கவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது.

தே நேரம் கோவாவில் சதீஷை ஒரு சிறைச்சாலைக்குள் பக்கத்தில் ஒருவரகா இரு போலீஸ்காரர்கள் அழைத்துச் சென்றனர். கைதியின் உடையில் அவன்.  நீண்ட தாழ்வாரத்தின் இரு பக்கமும் சிறை அறைகள். அதில் ஒன்றில் இவனைக் கொண்டு அடைத்து பூட்டினார்கள்.

ங்கு இசை எதிரில் நின்றவனிடம் “அது…மதுரனுக்கு 4 வருஷம் முன்னால ஊட்டில ஒரு ஆக்சிடெண்ட்…….அதுக்குப் பிறகு உள்ளது தான் இப்போ இவருக்குத் தெரியும்….” ப்ரீத்தா அன்று ஹாஸ்பிட்டலில் வைத்து மதுரனைப் பற்றி அறிமுகமாக சொன்னதை ப்ரீத்தா தொனியில் ஆனால் அழுத்தங்கள் மட்டுமாக மற்றி சொன்னாள்.

எதிரில் நின்றவன் ஒரு அலர்ட் பார்வை பார்த்தான். ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியை அவன் மறைப்பது இவளுக்கு புரிகிறது.

“சோ ஆக்சிடெண்ட் மதுரனுக்கு….அதுக்கப்புறம் உள்ளதுதான் உங்களுக்கு தெரியும் என்ன இனியன்..?” இனியனில் ஒரு ஆழ்ந்த அழுத்தம் கொடுத்தாள் இசை

“அது…..அண்ணி…சாரி…உங்கள…” வார்த்தை வராமல் தடுமாறியது அவன் வாய்.

“என்னை பத்தி நீங்க பேசுன எல்லாத்தையும் என் லைஃப்ல நான் செட்லாகனும்…நான் நிக்கியோட சேரனும்னு நினைச்சு நீங்க செய்ததால  மன்னிச்சு விட்டுடுவேன் இனியன்…..ஆனா அவிவ் மதுரனோட குழந்தைனு நீங்க நினச்சுட்டீங்க பாருங்க அதத்தான் என்னால தாங்க முடியலை…”

எதிரிலிருந்தவனிடம் இப்பொழுது நிஜமாகவே கில்டி பார்வை. இவள் முகத்தைப் பார்க்க  அவனால் முடியவில்லை.

“சா…சாரி…..அவிவ்குட்டிக்கு எங்க வீட்டு சாயல் இருக்ற மாதிரி படும்…..அதோட நீங்க உங்க பேரண்ட்ஸ் அவங்க வழியா வர்ற வசதி எல்லாத்தையும் விட்டுட்டு குழந்தையோட இருக்கவும் என் அண்ணா குழந்தைனு…..சாரி”

“அதுக்காக..? என்னைப் பத்தி உங்களுக்கு தெரியாது ஓகே…பட் உங்க அண்ணா உங்க கூட வளந்தவங்க தானே…அவங்களப் பத்தி உங்களுக்கு தெரியாதா…..? மேரேஜில்லாம குழந்தைனு போற அளவு….…சே எப்படி இப்படி நினச்சீங்க?”

“அது அப்படி இல்லை அண்ணி....அவனப்பத்தி தெரிஞ்சதால தான் இப்படில்லாம் செய்தேன்..” அவசர அவசரமாக மதுரைப் பற்றி ஏதோ நல்லதை சொல்வது போல் சொன்னான் இனியன்.

தீஷ் தன்னை கூட்டி வந்த போலீஸ்காரர்கள் சென்றதும் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தினான்.  உள்ளே ஒரு ஓரத்தில் தரையில் போய் அமர்ந்தவன் அருகிலிருந்த தண்ணீர் பானையை பார்த்தான் உள்ளே தண்ணீர் இல்லை.

பூட்டி இருந்த கதவருகே வந்து தன்னை விட்டு செல்லும் போலீஸ்காரரை கத்தி அழைத்தான்.

“சார்…..தண்ணி வேணும்….இங்க தண்ணி இல்லை” என்றான் ஆங்கிலத்தில்.

திரும்பி ஒரு பார்வை பார்த்த அந்த காவலர் கண்டு கொள்ளாமல் மீண்டுமாய் நடக்க தொடங்கினார்.

ங்கே இனியனின் வார்த்தைகளில் நல்லிசைக்கு சுர் என ஏறியது கோபம்….”அப்படி என்ன தெரியும் அவங்களப் பத்தி?”

“தப்பால்லாம் எதுவும் இல்ல….அவன் அப்ப ஒரு மாதிரி ஒரு லைஃப்ஸ்டைல்ல…..…..உங்களுக்கு தெரியுமா இல்லையான்னு தெரியலை…..என ஆரம்பித்தவன்

 “வாசல்லயே நிக்கீங்க இந்த வீட்டுக்கு உள்ள வர  நிக்கி சார்ட்ட இருந்து உங்களுக்கு பெர்மிஷன் உண்டா…..? இருந்தா உள்ள வாங்களேன்….பைதவே நான் உங்கள அண்ணினு கூப்டுறது…….” என தயங்கினான்.

அவனைத் தாண்டி உள்ளே சென்றாள் இசை.

“நிக்கிக்கு தெரியாம நான் எதையும் செய்யலை…..அண்ணினு கூப்டுறதுல ஒன்னும் ப்ரச்சனை இல்லை”

வீட்டிற்குள் சென்றவள்….”இங்க உட்காருங்க அண்ணி “ என்றபடி மதுரின் தம்பி இனியன் காண்பித்த சோஃபாவில் சென்று அமர்ந்தாள்.

“உங்களுக்கு தெரியுமான்னு தெரியலை அண்ணி, அண்ணா ஐ எஃப் எஸ் ஆஃபீசரா வொர்க் செய்துட்டு இருந்தான்…..யூஸ்ல போஸ்டிங்க்…..அங்க வச்சு இவன் ஒரு கேங்கோட சதியால அரெஸ்ட்லாம் ஆகி…. பெருசா ப்ரச்சனையாகி இங்க வந்தும் கிட்டதட்ட ஒரு தலை மறைவு வாழ்க்கை தான் பேங்களூர்ல வாழ்ந்துட்டு இருந்தான் ”

“ம் தெரியும்….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.