(Reading time: 53 - 105 minutes)

வளைக் கைப் பற்றி கூட்டிப் போனவன் அவர்களிருந்த அறையை திறக்க….சுற்றிலும் உறைந்து நின்றது பனி…..ஊட்டி….அவர்கள் இருப்பது ஒரு ஹைடெக் கேரவன் என்பதே அப்பொழுதுதான் அவளுக்கு புரிகிறது.

“வீட்டுக்குள்ளே இருக்றது உனக்கு கஷ்டமா இருந்துச்சுல்ல….அதான் லைஃபை இப்படி ஸ்டார்ட் செய்யலாம்னு….” அவனை அணைத்திருந்தாள் அவள். கைக்குள் அவளை வைத்தபடியே கேரவனின் கதவை பூட்டினான் அவன்.

“அவிவ் குட்டிய அம்மாட்ட விட்டுறுக்கீங்களா…? இங்க வரனும்னா ஒரு 9 அவர்ஸ் ஆகி இருக்காது? அப்படியா தூங்கினேன் நான்? அம்மாவ பார்க்க கூட என்னை நீங்க எழுப்பலையா? என்ன நினைப்பாங்க...?”

ஒவ்வொரு கேள்வியிலும் அவள் குரலின் ஒலி குறைந்து கொண்டு போக அதற்கு காரணமான அவனது ஆதிக்கம் அவள் மேல் கூடிக் கொண்டு போனது.

மறு நாள் இரவு…..

“பூ வைக்க ஞாபகமே வரலை நேத்து…. பூ விஷயத்துக்கு எப்படி பதில் பார்க்கிறதாம்னு கேட்டல்ல…… பாரு இன்னைக்கு….” அந்த கேரவன் முழுவதையும் பூக்களால் நிரப்பி இருந்தான் இன்று. அவள் தலையிலும் நிரம்பி இருந்தது முல்லை…

அடுத்த நாள் இரவு…

“விழுத்த பூ தலையில இருந்து விழுந்துச்சா இல்லை ஏற்கனவே பெட்டை டெகரேட் செய்த பூவான்னு எப்படி தெரியுமான்னு கேட்டல்ல…..அதான் இன்னைக்கு தலைல மட்டும் பூ…”

பூ ஆராய்ச்சிக்கு அவங்க என்ன விடை கண்டு பிடிச்சாங்களோ….அது அவங்க வரை ரகசியமே!!!!

சில வாரங்களுக்கு பிறகு :

சதீஷ் சரணடைந்துவிட்டதாகவும் அவன் சந்தோஷமாய் இருப்பதாகவும் தன்னை சிறைச்சாலையில் பார்க்க வரவேண்டாம் என்றும் அவன் அனுப்பிய தகவல் கிடைத்தது நல்லிசைக்கு. 

20 வருடங்களுக்கு பிறகு:

“டேய் அண்ணா….தயவு செய்து இந்த கழுதைய இன்னைக்கு பாட வேண்டாம்னு சொல்லு…..நீதாண்ணா என் கூட பாடனும்…ப்ளீஸ் ப்ளீஸ்…”  பச்சையும் பிங்குமாய் பட்டுப் பாவடை தாவணியில் ஓடி வந்த  ரிதா தன் அண்ணண் அவிவை தோளோடு பிடித்தாள்.

அப்பொழுதுதான் அவன் கழுத்தில் மாலையை எடுத்து போட்டுக் கொண்டிருந்த அவர்களது அம்மா நல்லிசை சட்டென அவள் கையில் ஒன்று வைத்தாள்.

“என்ன விளையாட்டு இந்நேரம், அவன் கிளம்பிகிட்டு இருக்கான்ல….?” என்றவள் திருமண கோலத்தில் நின்ற மகன் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தாள். “மனம் நிறஞ்சு இருக்கு குட்டிபா உன்னை இப்படி பார்க்க….” அவள் முகம் முழுவதும் தாய்மையில் பூரித்திருக்க, கண்ணில் துளிர்த்து நின்றது நீர்.

பதிலுக்கு தன் தாயில் கன்னத்தில் முத்தம் வைத்தான் மகன்.

“ஒரு வளர்ந்த ஒட்டகசிவிங்கியப் போய் குட்டிபான்னு சொல்றீங்களேமா….உங்க கண்ணுக்கு கண்ணாடி போட்டும் பத்தலை  போலயே” என்றபடி இப்பொழுது உள்ளே வந்தது இசையின் அடுத்த மகன்  ஆரோன்….

“போடா  என் அம்மாக்கு நான் எப்பவும் குட்டிபா தான்…” சொல்லியபடி இப்போது இசையை தோளோடு அணைத்தது அவிவ்.

“ அண்ணா… பாருண்ணா…..இவன் உன்னைய ஒட்டகசிவிங்கின்னுலாம் சொல்றான்….இவனை இன்னைக்கு பாட விடாத….…நீதான் என் கூட பாடனும்….” நல்லிசையின் கடை குட்டி வாரிசு ரிதா அவள் பாய்ண்டிலேயே நின்றாள்.

“ப்ச்…என்ன ரிதா நீ….இன்னைக்கு அவன் வெட்டிங்.. அதுல போய் அவனை டிஸ்டர்ப் செய்துட்டு…. ரிஷப்ஷன் டைம்ல அவன்  உன் அண்ணி சாஜல் கூட ஸ்டேஜ்ல தான் இருப்பான்….” நல்லிசை மறுத்தாள்.

“ஹேய் அப்ப ஒரு ஐடியா….அவிவ் நீ அண்ணி கூட பாடு….வெட்டிங் அன்னைக்கே டூயட் பாடுன மாதிரியும் இருக்கும்…..இந்த குரங்கு குட்டிய கூட்டணி சேர்க்காம கழட்டி விட்ட மாதிரியும் இருக்கும்….” தன் தங்கைக்கு எதிராக ஐடியா சொன்னான் அவளது இரண்டாவது அண்ணன் ஆரோன். அவள் அவன கழுதன்னு சொன்ன கடுப்பு அவனுக்கு…

“போடா…உனக்கு ரிதுவ வம்பிழுக்காட்டி மூச்சு விட முடியாதே…” என தம்பிக்கு மறுப்பு சொன்ன அண்ணன்

“ஏய் ரிதுகுட்டி  நீ கேட்டு என்னைக்காவது நான் இல்லைனு சொல்லிருக்கனா….? கண்டிப்பா உன் கூட பாடுவேன்….பட் அதுக்கு அம்மாட்ட பெர்மிஷன் வாங்க வேண்டியது உன் பொறுப்பு…..” சொல்லிவிட்டு அபொழுதுதான் உள்ளே நுழைந்த நிக்கியை நோக்கி கண் காட்டினான் அவிவ்.

அதற்குள் தன் தந்தையை நோக்கி தாவி அவன் கையோடி கை பின்னி தோளில் தலை சாய்த்திருந்தாள் மகள். “அப்பாப்பா நீங்க அம்மா கூட இன்னைக்கு பாடுங்கப்பா….அப்படியே அவிவ் அண்ணாவ என் கூட பாட சொல்லுங்கப்பா….” கெஞ்சலும் கொஞ்சலுமாய் வீட்டின் இளவரசி….கரையாமல் இருக்க அந்த வீட்டு அரசரால் முடியுமா என்ன? அடுத்த நொடி “அதுக்கென்ன செய்துட்ட போச்சு “ என்று ஒப்புதல் கொடுத்திருந்தான் நிக்கி.

Page 15

அதை கேட்டு அதெல்லம் கிடையாது….அவிவ் ஸ்டேஜ்ல நிக்கனுமே…..என எதையும் நினைக்காது… சொல்லாது…“நானா?” என ஆரம்பித்த நல்லிசை….”சரி பாடுவோம்…நீயும் ரிதா கூட ஒன்னும், அப்படியே இந்த ஆரோன் கூட ஒன்னும் பாடு….சாஜல்க்கு ஓகேனா அவ கூடயும் சேர்ந்து பாடு….” என அவிவைப் பார்த்து சொல்லி முடித்தாள்.

“உன் வைஃப்க்கு நீ என்ன சொக்குபொடி போட்டு வச்சிருக்க நிக்கி….? வள்ளுவர் கண்ட வாசுகியே தோத்திங்….. எங்க அம்மா ஜெயிச்சிங்….மீ டூ வின்னிங்….என்றபடி தன் அப்பாவிற்கு முத்தம்  ஒன்றை வைத்துவிட்டு அறையை விட்டு அவசரமாக வெளியே ஓடினாள் ரிதா.

அடுத்து அம்மாட்ட அர்ச்சனை யார் வாங்குறதாம்?

“ஏய் என் அண்ணனையா பேர் சொல்லி கூப்டுற….இரு வர்றேன்…..” என்றபடி இப்பொழுது அவளை கடந்தபடி அறைக்குள் உள்ளே வந்தது இனியன்.

“ஹாய் இனியன் டார்லிங்…..எனக்குதான் என் அம்மா மேல பயம்…உங்களுக்கு ஏன்….? சும்மா சீன் போடுறீங்க…….” என்ற பதில் கிடைத்தது வெளியே ஓடி இருந்தவளிடமிருந்து.

“சின்ன குழந்த….கோபபடாதீங்க அண்ணி…அவ பேர் சொல்லி கூப்டுறது எவ்ளவு க்யூட்டா இருக்குன்னு நான் தான் அடிக்கடி சொல்ல சொல்லி கேட்பேன் சின்னதிலிருந்தே….” அவளுக்காக தன் அண்ணியிடம் வக்காலத்து வாங்கினான் ரிதாவின் சித்தப்பன்.

ன்னை வளர்த்த தந்தையைப் போல இசைதுறையில் சாதிக்க துவங்கி இருந்த அவிவ்க்கும் அவனை காதலித்து கரம் பிடிக்கும் சாஜல்க்கும் சர்ச்சில் மோதிரம் மாற்றி திருமண வைபவம் நிறைவேற…. மனைவியாகிவிட்டவளுடன் கைகோர்த்து சர்ச் வாசலுக்கு வந்த அவிவின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தன….

“சதீஷப்பா…”

ஆச்சர்யமும் ஆனந்தமுமாய் கூவிய அவிவை அணைத்தான் சதீஷ்….அன்றுதான் விடுதலையாகி இருந்தான் அவன். இந்த 20 வருடத்தில் அந்த மாஃபியா கும்பல் கூட பாதி பேர் கைதாக…சிலர் அவர்களுக்குள் அழிந்து கொண்டு போக….பலர் சிதறிப் போக என கலைந்து போயிருந்தது.

”அப்படியே உன் நிக்கிப்பாவோட செராக்‌ஸ் மாதிரி இருக்கடா…..ரொம்ப சந்தோஷமா இருக்குது….” நிறைந்து போயிருந்தது அவன் மனம்.

முற்றும்.

Friends, நகல் நிலாவை இவ்வளவு தாமதபடுத்தியதற்காக மன்னியுங்கள். Sorry. வார்த்தை தந்த தெய்வத்திற்கும், வாசித்து இன்பம் செய்து, ஆரம்பம் முதல் உங்கள் வார்த்தைகளால் ஊக்கம் தந்து, பொறுமையாய் காத்திருந்து என்றும்  என் எண்ணத்தில் இனிமை சேர்க்கும் உங்கள் அனைவருக்கும், சிரமம் வர தடைசெய்து, கதை படைக்க களம் தரும் சில்சீக்கும் என் ஆழ்மனதிலிருந்து நன்றி பகர்கிறேன். நன்றி.

Episode # 11

{kunena_discuss:878}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.