(Reading time: 53 - 105 minutes)

கோவாவில் அந்த லாயர்….

”இவர் பெரிய ட்ரக் ஸ்மக்ளர்….அதுவும் படு ஷார்ப்….யூஎஸ்ல கேபா ன்ற மாஃபியாதான் ரொம்ப பெரிய ட்ரக் பார்டி…அவனுக்கு இவர் இங்க இருந்து ஹெல்ப்பண்ணார்….ஒரு ஸ்டேஜ்ல இவர் யூஎஸ் போயிருக்க அங்க உள்ள போலீஸ்ட்ட மாட்டிகிட…..இவருக்கு டெத் பெனால்டி கிடைக்க வேண்டியது….டாக்டிகா அந்த கேபா அவன் மகன் ரெண்டு பேரையும் பத்தி இன்ஃபர்மேஷன் குடுத்து அப்ரூவராகி ரிலீஸாகி  இங்க வந்துட்டார்….வந்து பேங்களூர்ல போய் ஒரு காலேஜ்ல சேர்ந்துட்டார்….அங்க அந்த கேபாவோட தங்கச்சி  பையன்  ஆள் அனுப்பி இவங்க காரை போட்டு தள்ளிட்டான்….அதுல தான் செத்துட்டதா ட்ராம செட் செய்துட்டு…..முகத்தை மட்டும் சர்ஜரி மூலம் மாத்திகிட்டு இங்க வந்து இப்ப வரை ட்ரேட் செய்துருக்கார்…..அங்க அந்த கேபாவை தூக்குல போட்டுடாங்க….அவன் தங்கச்சிப் பையன் இபோ ரொம்ப தீவிரமா தேடுறான் போல……அதுக்காக ஒரு சேஃப்டிக்குன்னு இந்த ஜெயில்ல வந்து சரண்டர் நாடகம் பண்ணி உட்கார்ந்துட்டு இருக்கார்…..நீ இப்ப சும்மா இவர்ட்ட துள்ளுனா உன் கதை என்ன ஆகும்னு யோசிச்சுக்கோ….சார் எப்ப எப்படி வெளிய போவார்னு யாருக்கும் தெரியாது…..அது மாதிரி அவர்ட்ட வம்பு வச்சுகிட்டனா நீ எப்ப எப்படி காணம போவன்னும் யாருக்குமே தெரியாது….” அந்த போலீஸைப் பார்த்து சொன்ன லாயர் சதீஷ் புறம் திரும்பி

“சரிங்க தானே சார்….நான் லாயர் வின்ஸோட ஜூனியர் சார்…..உங்களுக்கு என்னை தெரிஞ்சிருக்காது…எனக்கு உங்களை நல்லா தெரியும் சார்…..என் பேரு ப்ரவீன் சார்….என்னை மறந்துராதீங்க சார்….” என்றார் படு பவ்யமாக அந்த லாயர்.

சதீஷ் கழுத்திலிருந்து கையை எடுத்திருந்தார் அந்த போலீஸ் இப்போது.

நடப்பது  புரிந்தது சதீஷிற்கு. அமைதியாக போய் சிறை தரையில் உட்கர்ந்து கொண்டான்.

ங்கு இனியன் தொடர்ந்தான்.

“சோ அப்ப எங்க ப்ளானை கொஞ்சம் மாத்தினோம்….வெளிய மாப்பிள்ளை பார்க்காம நிக்கி சார்க்கு இன்டைரக்டா ஹெல்ப் செய்யலாம்னு முடிவு செய்துட்டு எங்க ஒரிஜினல் ப்ளானையே எக்சிக்யூட் செய்தோம்… .நாங்களே நினைக்கலை நிக்கி சார் இவ்ளவு சீக்ரமா வெட்டிங் ப்ளான் செய்வார்னு…

நீங்க அவரை விரும்பி மேரேஜ் செய்யனும்னு நினச்சோம்….ஆனா உங்க மேரேஜ் கம்பல்ஷன்ல நடந்துச்சு….ஆனாலும் என்னதான் இருந்தாலும் உங்கள விரும்புற ஒருத்தர் இப்ப ஹஸ்பண்டுன்னும் ஆகிட்டதால நாங்க ப்ரஷர் கொடுத்தா அவர்ட்ட சேர்ந்துகிடுவீங்கன்னு அடுத்து அடுத்து அப்படில்லாம் நடந்துகிட்டேன்…. வெரி சாரி”

“எது எப்படியோ இனியன் நடந்தது நடந்து முடிஞ்சிட்டுது….இப்ப நான் அவிவ்லாம் சந்தோஷமா இருக்கோம்…இனியாவது நீங்க எங்களை பத்தி கவலைப் பட்டு குழப்பிக்காதீங்க…உங்க லைஃப்ல கான்ஸன்ட்ரேட் செய்ங்க…”

இதற்குள் அங்கு வந்த ப்ரீத்தா நடப்பதை ஒரு கணம் நம்ப முடியாமல் பார்த்துவிட்டு பின்பு உள் சென்று கையில் காஃபியும் ஸ்னாக்‌ஸுமாக வந்தாள்.

“நாங்க செய்தது தப்புன்னு தோணிச்சுன்னா சாரிக்கா “ என்றபடி.

“ அப்படில்லாம் இல்லை ப்ரீத்தா…..கொஞ்சம் இல்ல ரொம்பவே எனக்கு ஹர்ட் ஆச்சுனாலும், அது நிறைய வகைல நீங்க நினச்ச மாதிரி  ஹெல்ப் செய்யதான் செய்துருக்கு….இத செய்றதுக்குள்ள நீங்களும் என் அளவுக்கே கஷ்டமா ஃபீல் செய்துறுப்பீங்க…அது எல்லாமே மதுர் மேலயும் என் மேலயும் உள்ள அன்பினாலதான…அதை நினைக்றப்ப மனசுக்கு சந்தோஷமா இருக்குது…..ஆனா அவிவ்க்கு காரணமா நீங்க மதுர் ஐ சொன்ன விதம் தான் எனக்கு  பிடிக்கலை…..இப்ப பேசுனப்ப உங்க வியூ தெரியவும் அதுவும் இல்லை…”

சற்று நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு இவள் விடை பெறும் நேரம் கார் வரை வந்த இனியன், இவள் காரில் ஏறும் சமயம்

“பை அண்ணி…அண்ணாவ நல்லா பார்த்துக்கோங்க” என்றான் .திக் என்க இதயம், இசை இனியனை நின்று நிமிர்ந்து பார்க்க…..”நிக்கி எனக்கு அண்ணாதான அதைச் சொன்னேன்.” என விளக்கினான்.

இயல்பாய்தான் இருந்தது அவன் முகம். ஆனால் இவளுக்குள் தான் வலி நிறைந்த குழப்பம்….

ஊட்டியில் நடந்த விபத்தில் மதுரனின் முகம் ஏறத்தாழ சிதைந்து போக அத்தனை சர்ஜரிகளுக்குப் பின் கிடைத்ததுதான் இப்போதிருக்கும் அவன் முகம். உலகம் முழுவதும் நிக்கி என அறியப்படும் இந்த முகம்….கழுத்தில் ஏற்பட்டிருந்த ஒரு பாதிப்பில் குரலில் கூட சிறிய மாற்றம்…. மதுரன் இறந்துவிட்டான் என உலகிற்கு காண்பிப்பதுதான் மதுரனுக்கு பாதுகாப்பு என அவனது டிபார்ட்ப்மென்ட் பெரிய தலைகள் முடிவெடுக்க இந்த அடையாளம் மாறிப் போன அவன்  நிலையும் ஒரு காரணம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.