(Reading time: 53 - 105 minutes)

ன்று நல்லிசை வந்து அந்த ஆசிரமத்தில் வைத்து சதீஷைப் பார்த்துவிட்டு திரும்பியதும் இவன் மனதில் ஒரு நெருடல். எதற்காக இவ்ளவு எஃபெர்ட் எடுத்து அவள் இவனை சந்தித்து மதுரன் வீட்டை எதுவும் செய்துவிடாதே என சொல்ல வேண்டும்….ஏதோ ஒரு உறுத்தல்…. ஆக அவன் மதுரனின் வீட்டை சற்று ஆழமாக கண்காணிக்க தொடங்கினான். இனியன் தான் மதுரனாக நடிக்கிறான் என இவன் முன்னமே கண்டு பிடித்திருந்தாலும் இதில் இன்னும் வேறு விஷயம் இருக்குமோ என்ற ஒரு எண்ணம்.

“நாம அண்ணிக்கு ப்ரெஷர் கொடுத்தா மதுர் அண்ணா ஹைடிங்ல இருந்தா வந்து அண்ணிய கூட்டிடுப் போய்டுவான்னு நினச்சோமே….அது உண்மையாகி நிக்கி தான் மதுர் அண்ணாவோ இருப்பானோன்னு அப்பப்ப தோணுது….அவன் மேரேஜுக்கு அம்மாவ கூட்டிட்டுப் போய்ட்டான் பார்த்தியா?”

“ஷ் சும்மா இருங்க……யார் காதுலயாவது இதுமாதிரி விழுந்துதோ ….நிக்கி சாருக்குதான் ப்ரச்சனை…”

இனியனும் அவன் மனைவியும் பேசிக் கொண்டிருந்தது இவன் காதில் விழ……அப்பொழுதுதான் சதீஷ் அந்த ஆங்கிளில் நினைக்க தொடங்கினான். பின் நிக்கியைப் பற்றி தெரிந்தவைகள் தன் தங்கையின் செயல் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தவனுக்கு நடந்தவை புரிந்து போயிற்று. இவன் மனைவியை கொன்ற அந்த ட்ரக் கும்பலால் நிக்கி தலை மேல் தொங்கும் கத்தி பற்றியும் தெரிந்து போயிற்று.

ஏற்கனவே இசை சொல்லிவிட்டுப் போனதும் சரணடைவதைப் பற்றி முடிவு செய்திருந்தவன் இசை நிக்கி வாழ்கைக்கு இருக்கும் இந்த ஆபத்தை நீக்க இப்படி ஒரு வழியை முடிவு செய்தான்.

இவனைப் போன்ற பெரிய லெவல் கிரிமினலஸ் சரணாடைவதற்கு முன் நிபந்தனை பேரம் என எல்லாம் அரசிடம் நடத்துவது உலகறிந்த ரகசியம். ஆக அவன் அப்படி வைத்த நிபந்தனை தான் இப்படி நிக்கியாகிய மதுரை அந்த கேபா கேங்கின் தலைக்கு மேல் கத்தி நிலையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது.

 நிக்கியின் மேலதிகாரிகளும் நிக்கி இப்படி மாட்டி இருப்பதில் மூச்சுத் திணறிப் போய்தான் இருந்தார்கள். ஆக அவர்கள் உடனடியாக தீட்டிய திட்டம் தான் இது. அந்த யூஎஸ் மாஃபியா கேபா கேங் இந்தியாவில் யார் மூலம் ட்ரக் டீலிங் செய்கிறார்களோ அந்த கூட்டத்தில் ஒருவன் அடை பட்டிருக்கும் கோவா ஜெயிலுக்கு சதீஷை கொண்டு போய்……’தண்ணி தர்ற வரை தண்ணி கேளுங்க….’ என்று மட்டும் சதீஷிடம் சொல்லி அவனுக்கே தெரியாமல் இப்படி ஒரு நாடகம்.

சதீஷைப் பற்றிய தகவல் அந்த மாஃபியா கூட்டத்தின் புதிய தலைவனுக்கு செல்லும் வழியை ட்ராக் செய்து அவன் கதையை முடிக்க வேண்டும் எனபது ப்ளான் ஏ. அப்படி முடிந்தாலும் முடியாமல் போனாலும் அந்த கூட்டத்தினரால் வரமுடிந்த ஆபத்து இப்போது நிக்கி மேலிருந்து சதீஷ் மேல் மாறி விடுவதால் நிக்கி ஃப்ரீ…..அதோடு தன் பாதுகாப்பிற்காகவாவது சரணடைந்த நிக்கி ஜெயிலில் ஒளிந்து கிடப்பது அவசியமாகிறது என நினைத்தனர் அந்த மேலதிகாரிகள்.

முழு திட்டமும் தெரியாமல்தான் சதீஷ் இதற்கு ஒத்துக் கொண்டாலும்…அவன் விரும்பிய படி அவனது தங்கை கணவன் தன் மனைவியை கடைசி காலத்தில் கவனித்துக் கொண்டவன்….இன்றும் தன் மகனை அவனது மகனாக நினைத்து வளர்க்கும் நிக்கி ஆபத்திலிருந்து வெளிவந்ததில் அவனுக்கு பூரண நிம்மதியே. தான் ஆபத்தில் மாட்டிக் கொண்டதைப் பத்தி அவன் கவலைப் படவே இல்லை.

“இந்த மாஃபியா கூட்டத்தாலான ப்ரச்சனை தீர்ந்துட்டுன்னு நிக்கிட்ட சொல்லிடுங்க…..ஆனா அது என் மேல வந்து நிக்குதுன்னு சொல்லிடாதீங்க….அவங்க நிம்மதியா இருக்கனும்….” சதீஷ் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க

“ஆக்சிடெண்டுக்கு பிறகு முகத்தை மாத்திகிட்டு மறஞ்ஜு இருக்றவன்னு நம்ம ஊரு  ட்ரக் ஸ்மகிளரை மாத்தி புரிஞ்சுகிட்டு அந்த கூட்டம் இப்போ அவனை துரத்துது…..அந்த ஸ்மக்ளரும் பாதுகாப்பு வேணும்னு நம்ம ப்ரிசன்ல வந்து உட்கார்ந்துட்டான்… ரெண்டு வகையிலும் இது நல்ல விஷயம்….யூ ஆர் ஃப்ரீ நவ்” என்றே தகவல் தந்தது நிக்கிக்கு.

ணவனை நோக்கி உருகும் மனதோடுதான் நல்லிசை வீட்டிற்கு வந்ததே….உள்ளே நுழையவும் அவள் கண்ணும் மனமும் தேடியதும் அவனைத்தான். அவனது ஆஃபீஸ் ரூமில் இருந்து சிறு சத்தம் கேட்டதே தவிர மற்ற எல்லா இடத்திலும் அமைதி. அலுவலக அறையை மெல்ல எட்டிப் பார்த்தாள். லஅப்டாப் போன்ற எதிலோ ஏதோ செய்து கொண்டிருந்தான். அருகில் சர்வன் வேறு. சாதாரண நாட்களிலும் அவன் வேலை இப்படித்தான் இருக்கும்…. அந்த நேரத்தில் உள்ளே வரக்கூடாது என்றிருக்கிறான். ஆக செல்ல மாட்டாள். இன்று சர்வனும் இருப்பதால் நிச்சயம் ரொம்ப முக்கியமான விஷயமாயிருக்கும் என புரிகிறது…..அதனால் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவிவை ஸ்கூலுக்கு கூட்டிப் போனாள். ப்ரேக் ஃபாஸ்ட் லன்ச் என எல்லாம் இவள் மட்டும் தனியாக டேபிளில் உட்கார்ந்திருக்க வேண்டி இருந்தது. அவனுக்காக ஆசையாக சமைத்ததெல்லாம் இவளைப் பார்த்து பே என்று முழித்தது.

அவன் வெளியே வரவே இல்லை. உள்ளே போக அவன் தடை உத்தரவு வழிவிடவில்லை….வெளியே நிற்க பெண் மனம் தாங்கிடவில்லை…… அவிவை அழைத்து வரும் நேரமும் வந்துவிட்டது. சென்று அழைத்து வந்தாள். அடுத்தும் மகனுடன் நேரம் கழிய மனம் தேடும் தன்னவனை மட்டும் காணவே இல்லை.

குழந்தை அருகில் அமர்ந்திருந்தவள் காலையில் ரொம்ப சீக்கிரமே எழுந்ததாலோ என்னவோ தூங்கிப் போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.