(Reading time: 53 - 105 minutes)

பெற்றோரில்லாத குழந்தையை அந்த ஆர்ஃபனேஜில் கொண்டு வந்துவிட என்ன ப்ரொசீஜர் என விசாரித்துவிட்டு அன்று வந்துவிட்டாள்.

மறுநாளும் அதே ஆசிரமம். முறைப்படி தத்து எடுக்கபட்ட குழந்தையை தத்து எடுத்த நபர் சிலகாலம் கழித்து அடாப்டட் சைல்ட் வேண்டாம் என எண்ணினால் மீண்டுமாய் ஆர்ஃபனேஜில் விட என்ன ப்ரொசீஜர் என விசாரித்தாள் இன்று.

அப்படி விட சட்டம் அனுமதிப்பது இல்லை என்று அந்த ஆர்ஃபனேஜ் ஹெட் விளக்க அமைதியாக எழுந்து வந்துவிட்டாள் இன்று.

அடுத்த நாளும் அதே ப்ளேஸ். ஒரு பொண்ணு தன் ஃபியான்சி இறந்துட்டாருன்னு நினச்சு இனி வாழ்க்கை முழுக்க தனியாதான் வாழனும்னு ஒரு முடிவோட குழந்தையை அடாப்ட் செய்துட்டா…..ஆனா இப்ப அவளுக்கு மேரேஜ் ஆகிட்டு….அந்த குழந்தைய வச்சிருக்றதை ப்ராப்ளமா ஃபீல் செய்ற சிச்சுவேஷன்ல அவங்க அந்த குழந்தைய உங்கட்ட கொடுத்தா ஏத்துபீங்களா….? ஒரு மியூச்சுவல் அண்டர்ஸ்டண்டிங்கில்…. என கெஞ்சினாள் அங்கு.

இன்றும் அங்குதான் போனாள். ஆனால் காரிலிருந்து இறங்கும் போது அங்கிருந்த மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் சதீஷ்.

இவள் எதிர் பார்த்தது போலவே அவன்.

‘அவிவ்னால உனக்கு என்ன ப்ரச்சனை…? அவனை வேற ஒளிச்சு வச்சிறுக்க….இல்லனா இதுக்குள்ள நானே தூக்கிட்டு போயிருப்பேன்…’ அப்படி எல்லாம் அவன் கேட்பான் என இவள் எதிர்பார்க்க அவனோ

“என்ட்ட பேசனும்கிறதுக்கு இவ்ளவு ப்ளானா…? அப்டி என்ன விஷயம்” என நேரடியாக பாய்ண்டிற்கு வந்தான்.

ஒரு நொடி திக்குமுக்காடி போனாள் நல்லிசை. இதற்கு இவள் என்ன சொல்ல வேண்டும்.?

ஆனால் அடுத்த கணம் உணர்ந்துவிட்டாள்.  மனம் திறந்து பேச வேண்டும் என்பது தான் நோக்கமே….பின்ன என்ன? இதையும் சேர்ந்து பேசிட வேண்டியதுதானே….

“சோ எப்பவும் என்னை மானிடர் செய்ற…..” ஆரம்பித்தாள் இசை.

“அவிவை ஆர்ஃபனேஜில் விட போனா, நான் வருவேன்னு உனக்கு தெரிஞ்சிருக்குனாலே, நான் எதுக்கு உன்னை மானிடர் செய்றேன்னும் உனக்கு தெரிஞ்சிருக்குன்னு அர்த்தம் தானே….”

“ம்…அவிவ் உன் பையன்னு எனக்கும் தெரியும்….ஆனா அவன எதுக்கு என் வீட்ல விட்டுட்டு இப்டி என்னை கண்காணிச்சுகிட்டு இருக்கன்னு எனக்கு தெரியனும்….”

இவளை ஊடுருவிப் பார்த்தான் சதீஷ்.

“நவ்யா எங்க….? என்ன இருந்தாலும் ஒரு குழந்தைய அது அம்மா மாதிரி அதோட அத்தையால வளர்க்க முடியாதுன்னு உனக்கு தெரியாதா?”

இந்த கேள்வியில் அவன் முகத்தில் அதிர்ச்சி எக்‌ஸ்பிரெஷன்….

“அந்த செங்கிஸ்கான் வேலையா இது….…?” அவன் முகத்தில் டிஸக்ரிமென்ட்.

“ஏன்…அதை தவிர வேற வழியே இல்லையோ விஷயம் தெரிஞ்சுகிட….நீ நின்னு பேசுனது என் வீட்ல வச்சுதான்னு நியாபகம் இருக்கா….?”

ஒரு விதமாய் இவளைப் பார்த்தவன்

“செங்கிஸ்கான்…அதான் உன் அப்பா அவரோட ஃபர்ஸ்ட் வைஃப் என் அம்மா. அவங்க குழந்தை நான்…” என இவளிடம் விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்.

“.மிடில் க்ளாஸ் லைஃப்….காலெண்டர், டைரி, புக்‌ஸ் இதெல்லாம் ப்ரிண்ட் செய்றதுக்கு வெவ்வேற ஸ்டேட்ஸ்  போய் ஆர்டர் எடுத்து சிவகாசி ப்ரெஸ்ல  ப்ரிண்ட் செய்து சப்ளை செய்றது தான் அவரோட அப்போதைய தொழில். சொந்தமா ப்ரெஸ் ஆரம்பிக்ற அளவுக்கு வசதி கிடையாது….ஆனா ஆரம்பிக்கனும்னு வெறி….

அப்டி ஆர்டர் எடுக்க அலஞ்சப்பதான் உங்க அம்மா இவருக்கு அறிமுகம். அவங்க பெரிய பணக்கார அப்பாவோட ஒரேவாரிசு. சொந்த ஸ்கூல்ல வேலை செய்துறுக்காங்க….அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசுன்னதும் இவருக்கு என்ன தோணிச்சோ எப்படி ஏமாத்தினாரோ…. தனக்கு கல்யாணம் ஆகலைனு சொல்லி….அதோட உன் அம்மாவோட அப்பாவை எப்டியோ நாடகம்லாம் ஆடி நம்ப வச்சு உங்க அம்மாவை கல்யாணம் செய்துட்டு போய்ட்டார் என்னையும் என் அம்மாவையும் விட்டுட்டு… முதல்ல இவர் தன்னைவிட்டுட்டு எங்க போனார் என்ன ஆனார்னே என் அம்மாக்கு தெரியாது…..அம்மா ரொம்ப படிக்காதவங்க…..ரொம்ப கஷ்டபட்டு தான் என்னை வளர்த்தாங்க….என்னோட 12 வது வயசுல அம்மா ஒரு தடவை செங்கிஸ்கானை எதேச்சையா பார்த்துட்டாங்க போல….நீ பணக்காரியா இருந்தா உன்னை ஏன் விட்டுட்டுப் போறேன்னு சொல்லிட்டுப் போய்ட்டார் போல…..என்னமோ அப்புறம் கொஞ்ச நாள்ல அம்மா போய் சேர்ந்துட்டாங்க…..நான் தான் என்னைப் பார்த்துகனும்….பட்னி….

எப்டியோ போய்ட்டு லைஃப்…..பணக்காரனா இல்லைன்றதாலதான நமக்கு எதுவுமே இல்லாம போய்ட்டுன்னு தோணிட்டு….எல்லா வகையிலும் சம்பாதிக்க ஆரம்பிச்சேன்…… செய்யாத க்ரைமே இல்லை…”

நிறுத்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

என்ன பாவம் கண்டானோ??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.