(Reading time: 26 - 52 minutes)

ரவில் அவள் மட்டும் தனியாக வெளியே செல்லுவாள். அவளுடன் யாரையும் உடன் வர அனுமதிக்க மாட்டாள். அந்நேரம் அவளின் செய்கைகள் சற்று விசித்திரமாக இருக்கும்... இதனால் சித்ராவும் அனிதாவும் அவளிடம் விலகியே இருக்க, வினிதாவும் அவர்களை நெருங்க விடவில்லை.

பகலில் அவள் யாருடன் பேசுவது இல்லை... அமுதா வந்தால் மட்டும் சற்று கலகலப்பாக பேசுவாள்.. மற்ற நேரங்களில் இவர்களை பார்வையால் நோட்டம் விடுவாள்.

இரண்டு நாட்களில் மாறி போனது அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை.. இவள் மட்டும் ஏதோ ஒரு தனி உலகத்தில் இருக்க, அந்த உலகத்தில் அவள் மற்றவர்களை அனுமதிக்க வில்லை. யாராவது ஏதும் கேட்டாள் ஆமா இல்லை என இரண்டு வார்த்தைகளில் அவளின் பதிலை முடித்துக் கொள்வாள்.

மறுநாள் காலையில் வினிதா ஊருக்கு செல்வதால் அவளின் துணிகளை பேக் செய்து கொண்டு இருக்க, வினிதாவின் செல்போன் விடாமல் அலறிக் கொண்டே இருக்க அப்போது அங்கு வந்த சித்ரா,

“உன் காதுலே ஏதும் ப்ரோப்ளமா... உன் போன் மூன்று முறை அடித்து நின்று விட்டது.. அதை எடுத்து தான் பாரேன்..”என்றாள்.

“ம்ம்ம்ம் அப்பறம் பார்க்கிறேன்.. இப்போ கொஞ்சம் பிஸி..” என்று அவள் சொல்ல மீண்டும் அவளின் செல்போன் அலறியது..

“நீ எடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிவிட்டாய் போல.. நானாவது யார்ன்னு பார்கிறேன்... மகேன் தான் கால் பண்ணி இருக்கார். ஏன் இத்தனை தடவை கால் பண்ணாருன்னு தெரியலையே”என்று கூறிபடி ஃபோனை எடுத்து பேசினாள் சித்ரா.

“ஹாலோ மகேன்”

“..”

“இல்ல நான் சித்ரா பேசறேன்.. வினிதா ஊருக்கு போறாள்.. சோ மேடம் பிஸியா திங்க்ஸ் பேக் பண்ணுறாங்க...”

“..”

“எனி திங் மகேன் ஐ கேன் பாஸ் தி மச்செஜ் டு ஹேர்”

“..”

எதிர் முனையில் என்ன சொல்ல பட்டதோ,  சித்ரா ஒரு இன்ச் கூட நகராமல் அமைதியாய் அவன் சொல்லுவதை கேட்டாள்.. அவள் ம்ம்ம் சரி என்ற இரு வார்த்தைகளை தவிர வேறேதும் பேசாதது வினிதாவின் கவனத்தை ஈர்த்தது.

அவள் செய்கையால் என்ன வென்று கேட்ட சித்ராவும் செய்கையால் இரு காண்பித்தாள்.

“எந்த ஹாஸ்ப்பிட்டல் மகேன்?

“…”

“தெரியல.. நான் அவளை கேட்டு பார்கிறேன்..”

“…”

“ஹ்ம்ம் சரி.. ஆனா இது கன்ஃபார்ம் தானா...”

“…”

“சரி..”

“என்ன சித்ரா ஏன் இவ்வளவு சீரியஸ்”

இத்தனை நாளாய் இரு சொற்களில் தனது பதிலை முடித்து கொண்டவள், இப்போது இந்த ஐந்து வார்த்தைகள் சேர்த்தார்போல பேசியது அவளுக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை.. மகேன் மட்டும் கால் பண்ணாமல் இருந்திருந்தால் இவள் என்னிடம் பேசாமல் தான் இருந்திருப்பாள் என நினைத்துக் கொண்டாள் சித்ரா.

“ஹேய் என்ன கேள்வி கேட்டால் என்னையே பார்க்குற... மகேன் என்ன சொன்னார்?”

“ஹ்ம்ம் உனக்கு எப்போ கல்யாணம்ன்னு கேட்டார்” என்றாள் சித்ரா கோவமாக.

“மேடம் என் மேல் கோபமா இருக்கீங்கன்னு இப்படி சொல்லறிங்க போல”

“அப்படி எல்லாம் இல்லையே”

“அப்போ நீ ஏன் அவ்வளவு சிரியஸா முகத்தை வைச்சுட்டு இருந்த?”

“காணாமல் போன ஆதி கிடைத்து விட்டாராம்”

“எந்த ஆதி?”

“இந்த வீட்டில் முன்பு இருந்து காணாமல் போனாங்களே அந்த ஆதி”

“ஹான்... என்னது? எப்படி கிடைத்தார்? அவர் இப்போ எங்கே இருக்கார்...”

“என்னை கேட்டால் எனக்கு எப்படி தெரியும்.. மகேன் தான் அவர் ஹாஸ்பிட்டல்ல இருக்கார்ன்னு சொன்னார்..”

“ஹாஸ்பிட்டல்லயா? ஏன்?”

“அவருக்கும் சரியாய் தெரியல.. அவருடைய ப்ரண்டுக்காக வைட் பண்ணுறாராம்.. அவர் வந்த பிறகு தான் இவருக்கும் டீடைல்சஸ் கிடைக்குமாம்... இதை கண்டிப்பாக அமுதன் அண்ணனிடம்  சொல்ல சொன்னார்...”

அமைதியாக கட்டிலில் அமர்ந்த வினிதா,  “சித்ரா நாம் அங்கு போகலாம்” என்றாள் ஒரு எதிர்ப்பார்ப்புடன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.