(Reading time: 26 - 52 minutes)

ன் பின்னால்… யாரோ…” சொல்ல முடியமல் தடுமாற

அங்கே வந்த மகேன் “ஏன் இப்படி ஓடி வந்தீங்க?” என்றான்.

“இவ வீட்டில் இருந்த வரும் போது பேய்ன்னு”

“உடனே உங்க பின்னால் நான் வந்ததை வைத்து நான் பேய்ன்னு நினைத்து வந்துட்டீங்க?” மீதியை மகேன் சொல்ல

“சாரி மகேன்… எல்லாம் இந்த பிசாசுனால வந்தது”

அனைவரின் பார்வையும் சித்ராவிடம் இருக்க, அவளோ அமைதியாக இருந்தாள்.

“அடியே எல்லாம் உன்னால.. பண்ணுறதும் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்கறதை பாரு.. இந்தா உன் போன்” அவளின் கையில் குடுக்க

அதை பார்த்தவுடன் தான் நினைவு வந்தவளாக

“அக்கா வினிதா அம்மா போன் பண்ணி வினிதா இன்னைக்கு தான் ஊரில் இருந்து கிளம்பினதா சொன்னாங்க”

“என்ன??” மகேனை தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியே!

“இன்னைக்கு தானே வினிதா வர்ரதா சொல்லி இருந்தாங்க” மகேன் குழப்பமாக கேட்க”

“அவள் வீட்டுக்கு போகவே இல்லையே” – அமுதா

“என்ன” இப்போ அதிர்ச்சி ஆகுவது மகேன்!

சித்ராவும் அவர்கள் மருத்துவமனையில் திரும்ப வந்ததிலிருந்து வினிதாவின் மாற்றத்தையும் அவள் திடீரென மறைவதையும் சொல்ல மகேனுக்கு குழப்பமாக இருந்தது. இன்று வினிதாவின் அம்மா அழைத்து கடந்த நான்கு நாட்களாக அவள் அங்கு இருந்தாக சொல்லுவது மேலும் குழப்பியது.

வினிதா ஊருக்கு சென்றிருந்தால், இங்கே இருப்பது யார்? அதே போல் வினிதா இங்கே  இருந்தால் அங்கே அவளின் வீட்டில் இருந்தது யார்?

“வினிதா இப்படி இருக்கான்னு ஏன் எனக்கு கால் பண்ணிசொல்லல?”

“என்ன மகேன், நான் உங்களுக்கு பல தடவை கால் பண்ணினேன் பட் அது சுவிட்ச் ஆப்ன்னுதான் வந்தது.? மெசேஜ்கூட அனுப்பினேன் ஆனா நீங்கதான் ரிப்ளை பண்ணவேயில்லை”.

“இல்ல சித்ரா எனக்கு எந்த மெசேஜ் வரல அண்ட் நான் என் மொபைல ஆப் பண்ணவும் மாட்டேன்.”

“ஹான் என்னது இது புது குழப்பம்.”

இவர்களுக்கு அடுத்த குழப்பத்தை ஏற்படுத்துவது போல் ரூபன் கால் செய்து தகவலை சித்ராவிடம் சொல்லும்படி சொல்ல மகேன் அவனின் மொபைலை வெறித்துபார்த்தான்.

நாளைக்கு வினிதாவிற்கு அப்பாய்ன்மண்ட். அவகிட்ட சொல்லித்தானே காலையில் 10மணிக்கு நம்மள மருத்துவமனைக்கு வர சொன்னான்.

நாளை அவர்களுக்கு குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும் என்பதை  அறியாமல் வினிதாவை பார்க்க சென்றனர். அங்கே அவள் அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.

அன்று இரவு இவர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். வினிதாவை யாரவது ஒரு ஆள் கண்காணிக்க அவள் எப்படி அங்கு இருந்து சொல்லுகிறாள் என்பதை அறிய மகேனும் அமுதனும் தூங்குவது போல் நடித்தனர்.

இவர்களின் பாசாங்கு அவளுக்கு புரிந்தது போல் அவளும் உறங்கினாள்.

ந்தாம் நாள்

ரூபன் வினிதாவை அப்பர்ட்மண்ட் வாயிலில் பைக்கில் ஏற்றிகொண்டான்.

“என்ன வினிதா ரொம்ப சோர்வா தெரியற” பைக்கின் சைட் கண்ணாடியின் வழி அவள் முகத்தை பார்க்க

“சார் எனக்கு ரொம்ப நாள் வாழனும்னு ஆசை இருக்கு. சோ நீங்க ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க” என்றாள்.

“சரிங்க பாட்டி” சொன்னவனின் கண்ணில் வினிதா மெல்ல புன்னகைப்பது தெரிந்தது.

“என்னன்னு சொல்ல நானும் சிரிப்பேன். இப்படி அமைதியாக சிரித்தால் என்ன அர்த்தம்”

“அது நீங்க அங்க போய் சென்ற பிறகு உங்களுக்கு தெரிய வரும். அது வரைக்கும் சஸ்பென்ஸ்” சொல்லி அர்த்தமுடன் அவனை பார்த்து புன்னகைத்தாள்.

ரூபனும்  மேலும் எதுவும் கேட்டவில்லை. அதான் அங்கே சென்ற பிறகு தெரிய போதுதே என நினைத்துக் கொண்டான்.

அதன் பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு சென்று சேரும் வரை அவர்கள் பேச்சு சுவாரசியமாக சென்றது.

மருத்துவனை நுழைவாயில் நுழைத்த பின்னர் ரூபனின் கண்கள் மகேன்னின் காரை தேட, வினிதாவும் பேசுவதை நிறுத்தி மகேனை தேடினாள்.

ஒரு வளைவில் மகேனின் கார், மரத்துக்கு கீழ் பார்க் செய்து மகேன் காருக்கு வெளியே இருப்பதை பார்த்த வினிதா, ரூபனின் தோளை தட்டி மகேன் இருக்கும் திசையை காட்ட, அவர்களை பார்த்த மகேனும் கை அசைத்தான்.

சென்றவன் மகேனின் காருக்கு அருகே பைக்கை நிறுத்தி, பைக்கில் இருந்த படியே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.