(Reading time: 26 - 52 minutes)

முன்றாம் நாள்

அதிகாலை நேரத்தில் அவர்களே அறியாமல் மூவரும் அமர்ந்த படியே உறங்கி விட, அலாராம் சத்தம் கேட்டு கண் விழித்தனர். அமுதா தனது வீட்டிற்கு செல்ல நினைக்கையில், அவளுக்கு ஏதோ தோன்ற வினிதாவின் அறையில் எட்டி பார்க்கும் போது அவள் அங்கே உறங்கிக் கொண்டிருந்தாள்.

“சித்ரா அனிதா எழுந்திரு... வினிதா அவ ரூம்ல இருக்கா”

“என்ன..” அடித்து பிடித்து எழுந்தவள் வினிதாவின் ரூம்க்கு செல்ல அவளோ அங்கு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்..

இவள் எப்படி வந்தாள்… கதவு பூட்டி இருக்கு.. அவளிடம் வீட்டின் சாவியும் இல்லை… ஆனா எப்படி என மூவரும் யோசிக்கும்போதே, சித்ரா வினிதாவை எழுப்பினாள்.

“ஏய் வினிதா எழுந்திரி..எழுந்திரிடீ”

“ம்ம்ம்ம்.. ஏன்டி காலையில வம்பு பண்ணற.. எனக்கு தூக்கம் வருது..” தூக்க கலக்கத்தில் அவள் சொல்ல,

“இப்போ நீ எழுந்தரிக்கலனா நான் உன்னை பெட்டில் இருந்து கீழே தள்ளி விடுவேன்” சித்ரா கிட்ட தட்ட கத்தினாள்..

கஷ்டப்பட்டு கண்ணை திறந்து அவர்களை பார்த்து,

“மூன்று பேரும் இங்கே என்ன பண்ணறிங்க?” கேட்க

“வினிதா நீ நைட் எங்கே போன? எப்போ வந்த?” என அவர்கள் மாறி மாறி கேள்விகளை கேட்க

“ஹாஸ்ஸ்பிட்டலில் இருந்து வந்த பிறகு அசதியாக இருக்குன்னு நான் தூங்க்கிட்டேன்.. நீ இப்போ என்னை எழுப்பின பிறகு தான் நான் எழுந்தரிக்குறேன்” ஒருக்கலித்து படுத்து கண்ணை முடிக் கொண்டாள்.

‘நீ ஏன் இவ்வளவு சோர்வாக இருக்க வினி” – அமுதா

“இல்லையே அக்கா….”

“எங்க போன” – அமுதா

“ஐயோ அக்கா, நான் எங்கயும் போகவில்லை. இதுங்க கனவு கண்டு இருக்கும் போல…..”

வினிதா யாரின் முகத்தையும் பார்க்கவில்லை. அவளின் பார்வை எதிர் கதவின் மீதே இருந்தது. அவர்கள் பேசும் போது எவ்வளவு முயற்சித்தும் அவள் முகத்தை பார்க்காமல் சுற்றி இருக்கும் பொருட்களையே பார்த்து கொண்டிருந்தாள்.

என்னது கனவா? அது எப்படி மூவருக்கும் ஒரே நேரத்தில் அதுவும் தூங்காமல் கனவு வரும்.? மாயமாக மறைந்தவள் எப்படி வீட்டினுள் வந்தாள்? அவள் என்ன கண்களுக்கு தெரியாத அளவிற்கு சின்ன உருவமா மறைந்து போவதற்கு?”

“எனக்கு ரொம்ப தூக்கமா இருக்கு, நான் தூங்கறேன்.. இன்னைக்கு நான் ஊருக்கு போகல…” என்று கூறிவிட்டு மீண்டும் அவள் தூங்கிவிட்டாள். வினிதாவின் கை ஒரு பொம்மையை இருக்க பிடித்துக் கொண்டு இருக்க, அவள் உறங்கும் போதும் அதை மற்றவர்களால் எடுக்க முடியாமல் போனது.

இதை கண்டிப்பாக மகேனிடம் சொல்ல நினைத்த சித்ரா அவனின் கைதொலைபேசிக்கு அழைக்க, அது சுவிட்ச்ஆப் ஆக இருந்தது.

அன்று முழுவதும் யார் எழுப்பியும் அவள் எழுந்தரிக்கவே இல்லை... முதல் நாள் இரவில் இவள் காணாமல் போனதால் வினிதாவின் ரூம் கதவை திறந்தே வைத்து இருந்தனர்...

அன்று இரவு அனிதாவும் சித்ராவும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க அவர்கள் அவ்வப்போது வினிதாவின் அறையை பார்த்த படி இருந்தனர்..  காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு இருவரும் வாசல் கதவை திறக்க, அப்போது வினிதாவின் அறை கதவு தானாக சாத்திக் கொண்டது...!

இதை அறியாதவர்கள் அமுதாவை கண்டு "நீங்க தானா அக்கா, பயந்துக் கொண்டே தான் நாங்க கதவை திறந்தோம்..."

"உங்க முகத்தை பார்த்தாலே நல்லா தெரியுது..... சரி சித்ரா அவளை எழுப்பி விடு... காலையில் இருந்து ஏதும் சாப்பிடாமல் இருக்காள்" என சொல்லியவள் டைன்னிங் ஹாலுக்கு சென்று, தான் எடுத்து வந்த உணவை அங்கே வைத்தாள்.

அனிதா அமுதாவிற்கு உதவு செய்ய சென்று விட, வினிதாவின் அறைக்கு செல்ல திரும்பிய சித்ராவிற்கு சாத்திய கதவு தெரிந்தது... எப்படி நாங்க பேசிக் கொண்டிருக்கும் போது கதவு திறந்து தானே இருந்தது, இப்போ எப்படி சாத்தி இருக்கு...?

முடியிருந்த கதவை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி கட்டிலில் வினிதா இல்லை!!!

"அக்கா... அக்கா காணோம்" சித்ராவின் கத்தும் சத்தம் கேட்டு அவர்கள் இருவரும் வினிதாவின் அறைக்கு செல்ல

"என்னடி ஏன் இப்படி கத்தாற"

"காணோம்"

"என்ன காணோம்" சித்ராவை தன் புறம் திருப்பி கேட்ட

"வினி... வினிதாவை காணோம்" அப்பொது தான் அவர்கள் காலியாக இருக்கும் கட்டிலை பார்த்தனர்

"எப்படி இவ்வளவு நேரம் நாம் ஹாலில்தான் அமர்ந்து இருந்தோம்... அங்கே இருந்து பார்த்தோமே வினிதா பெட்டில் தூங்கிக் கொண்டு தானே இருந்தா" - அனிதா குழப்பத்தில் இருக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.